என் மலர்
நீங்கள் தேடியது "கார் மோதி பெண் பலி"
- கட்டுபாட்டை இழந்து கார் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது.
- இந்த விபத்தில் பிரமிளா சம்பவ இடத்திலேயே பலியானார்.
தொப்பூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியை சேர்ந்தவர் இப்ராஹிம்(வயது25) கார் டிரைவர். இந்த காரில் சீனிவாசன், மனைவி பிரமிளா (வயது30), ஸ்ரீகாந்த், மனைவி கிருஷ்ணவேணி (வயது 45) ஆகியோர் காரில் சேலம் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றுகாலை தருமபுரி மாவட்டம், தடங்கம் மேம்பாலம் பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கார் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பிரமிளா சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த பிரமிளா உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பலத்த காயமடைந்த கிருஷ்ணவேணி, ஸ்ரீகாந்த் இருவரும் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கணவர் உள்பட 3 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
தர்மபுரியை சேர்ந்தவர் பாலாஜி ( வயது 42 ) . இவரது மனைவி கவிதா ( 41 ) . இவர்களது மகன் தருண்வர்ஷன் ( 18 ) .
இவர் சென் னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் -2 படித்துள் ளார் . அதற்கான சான்றிதழ் வாங்குவதற்காக நேற்று முன்தி னம் காலை காரில் தர்மபுரியில் இருந்து சென்னைக்கு புறப் பட்டனர். காரை நேதாஜி என்பவர் ஓட்டிச்சென்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி மேம்பாலத்தில் சென்றபோது, காருக்கு முன்னால் மணல் பாரம் ஏற்றிய டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது . இந்த லாரி மீது திடீ - ரென கார் மோதியது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு - மேல்விஷாரம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கஸ்தம்பாடியைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் பிரபு ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு . செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் வேகமாக சாலையை கடந்து ஓடி உள்ளார்.
- 100 மீட்டருக்கு தூக்கி வீசப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியில் இன்று அதிகாலை ஊத்தங்கரை பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் வழித்தடத்தில் கார் ஒன்று அதி வேகமாக வந்து கொண்டிருந்தது.
இதனைக் கண்ட லட்சுமி (48) என்ற பெண் வேகமாக சாலையை கடந்து ஓடி உள்ளார்.
எதிர்பாராத விதமாக கார் அவர் மீது மோதியதில் அந்த இடத்தில் இருந்து 100 மீட்டருக்கு தூக்கி வீசப்பட்டு மூக்கு, வாய், காது உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் லட்சுமி இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






