என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய கார்-லாரி மீது மோதி நிற்கும் காட்சி.
தடங்கம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி பெண் பலி
- கட்டுபாட்டை இழந்து கார் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது.
- இந்த விபத்தில் பிரமிளா சம்பவ இடத்திலேயே பலியானார்.
தொப்பூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியை சேர்ந்தவர் இப்ராஹிம்(வயது25) கார் டிரைவர். இந்த காரில் சீனிவாசன், மனைவி பிரமிளா (வயது30), ஸ்ரீகாந்த், மனைவி கிருஷ்ணவேணி (வயது 45) ஆகியோர் காரில் சேலம் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றுகாலை தருமபுரி மாவட்டம், தடங்கம் மேம்பாலம் பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கார் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பிரமிளா சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த பிரமிளா உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பலத்த காயமடைந்த கிருஷ்ணவேணி, ஸ்ரீகாந்த் இருவரும் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






