என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    நலத்திட்ட உதவி  வழங்கிய காட்சி.

    அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்

    • அரக்கோணம் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டையில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த இவ்விழாவில் அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் முனிசுப்ரவராயன் முன்னிலை வகித்தார்.

    தலைமை ஆசிரியர் கரி முல்லா அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் எம் ஆர் எப் நிறுவனத்தின் மேலாளர் ஜான் டேனியல் கலந்து கொண்டு கழிவறை கட்டிடத்தை திறந்து வைத்து பள்ளிக்கு நல்ல திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது எம்.ஆர்.எப். நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் கஜேந்திரன் பாதுகாப்பு அலுவலர் பிரசாந்த் மற்றும் எம்ஆர்எப் நிறுவன அதிகாரிகள் உடனிருந்தனர். விழாவில் பஞ்சாயத்து தலைவர் சுந்தரம் அரக்கோணம் ஒன்றிய கவுன்சிலர் நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×