என் மலர்
ராணிப்பேட்டை
- அரக்கோணம் அருகே உள்ள வாணியம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள வாணியம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 59).
சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
இதனை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் பிரபாகரன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
கொள்ளை நடந்திருப்பதை கண்டு அவரது அண்ணன் திடுக்கிட்டார். இதுகுறித்து பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
ஓட்டல் மேலாளர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கலெக்டர் தலைமையில் நடந்தது
- 199 மனுக்கள் பெறப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது . கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி , பொதுமக்கள் , மாற் றுத்திறனாளிகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற் றார் .
கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள் , பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா , முதியோர் உதவித்தொகை , கூட்டுறவு கடன் உதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர் . மொத்தம் 199 மனுக் கள் பெறப்பட்டது .
அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் , துணை கலெக்டர்கள் தாரகேஸ் வரி , சத்தியபிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள் பட பலர் கலந்து கொண்டனர்.
- பலத்த மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- அதிநவீன மீட்பு கருவிகளுடன் சென்றனர்
அரக்கோணம்:
கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணி யில் ஈடுபடுவதற்காக கேரள மாநில நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்ப கேட்டுக்கொண்டுள்ளது.
அதை தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் உத்தரவின் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து வயநாடு, பத்தினம்திட்டா, மலப்புரம், கன்னூர், கோட்டயம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய பகுதிகளுக்கு பேரிடர் மீட்புப்படை வீரர்கள் அதிநவீன மீட்பு கருவிகளுடன் மீட்புப்படை வாகனத்தில் சென்றனர்.
- 74 பேட்டரிகள் திருட்டு
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதா கர் ( வயது 39 ) . இவர் தனியார் செல்போன் கோபுர பராமரிப்பு சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.
அரக்கோணத்தை சுற்றியுள்ள வேலூர் பேட்டை, மூதூர் , வளர்புரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள செல்போன் கோபுரங்களில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 74 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் சுதாகர் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அந்தவழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது அரக்கோணம் அடுத்த வட மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (31), சந்திரகுமார் ( 21 ) என்பதும், செல்போன் கோபுரங்களின் பேட்டரிகளை திருடியதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து பார்த்திபன், சந்திரகுமார் ஆகிய இருவர் மீதும், திருட்டு பேட்டரிகளை வாங்கியதால் உடந்தையாக இருந்ததாக பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்திருக்கும் அரக்கோணத்தை சேர்ந்த ஆனந்தன் ( 65 ) மீதும் தாலுகா இன்ஸ்பெக்டர் பழனி குமார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.
- ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு அண்ணா சிலை அருகே 25 ஆண்டுகளுக்கு முன் சிறுபாலம் கட்டப்பட்டது.
ஆற்காடு நகரின் பிரதான பகுதியில் அமைந்துள்ள. இந்த பாலத்தில் கழிவுநீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவு நீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் பார்வையிட்டு இரண்டே நாளில் பாலம் சீரமைக்கப்பட்டது. அதனை ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. போக்குவரத்து பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதில் நகரமன்ற துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், நகர தி.மு.க. செயலாளர் ஏ.வி.சரவணன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் பொன்.ராஜசேகர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பென்ஸ் பாண்டியன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர், நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்தது
- முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்
வாலாஜா:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்து முன்னணி, பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள், விழாகுழுவினர் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் அமைக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் வாலாஜாப்பேட்டையில் நேற்று மாலை போலீஸார் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில் ஏடிஎஸ்பி விஸ்வேஸ்வரன், டி.எஸ்.பி. பிரபு, ஆயுதப்படை மற்றும் ராணிப்பேட்டை காவல் உட்கோட்டத்தை சேர்ந்த 145 போலீசார் அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
இந்த அணிவகுப்பு ஊர்வலமானது அய்யப்பன் கோவிலில் இருந்து தொடங்கி எம்.பி.டி சாலை, வாலாஜா பேருந்து நிலையம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மகாத்மா காந்தி பூங்கா அருகே முடிவடைந்தது.
- மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த கீழாண்ட மோட்டூரை சேர்ந்தவர் கோபால் (வயது 38). தொழிலாளி. இவரது மனைவி லதா (29). நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.
பிரசவ வலியால் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் சேர்த்துள்ளனர் . தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக கொண்டு சென்றனர்.
ஜம்புகுளம் அருகே சென்ற போது பிரசவவலி அதிகமாக இருந்ததால் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தி மருத்துவ உதவியாளர் பொன்னுரங்கன் பிரசவம் பார்த்தார் . லதா வுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர் தாய், சேய் இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- மீன் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்தவர் ரகு ( வயது 57 ) , கூலித் தொழிலா ளியான இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலை யில் நேற்று முன்தினம் ஏரியில் ஆண் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் திமிரி போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம் பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத் தைக் கைப்பற்றி விசாரணை செய்ததில் பரதராமியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரகு என்பது தெரிய வந்தது.
அவரது உடலை பிரேத பரி சோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரகு எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீர் நிலைகளில் மட்டுமே கரைக்க அறிவுரை
- ஏராளமனோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். சோளிங்கரில் 36 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இதனை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி விழா வில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இதில் விநாயகர் சிலைகள் 10 அடி உயரத்திற்குள் இருக்க வேண்டும், வருவாய் கோட்டாட்சி தலைவர் மற்றும் தீயணைப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
விநாயகர் சிலை வைக்கப்படும் இடங்களில் தீயணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும், அதிக சத்தத்தம் எழுப்பக்கூடிய ஒலிபெருக்கிகளை பயன்ப டுத்தக் கூடாது, பொது மக்களுக்கு எந்தவித இடையூறும். இல்லாமல் விழா குழுவினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விழாவிற்காக வைக்கப்படும் பேனர்களில் கட்சித் தலை வர்களின் படங்கள் இடம் பெறக்கூடாது , விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் சென்று குறிப்பிடப்படும் நீர் நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதில் சப் - இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் , விழாக் குழுவினர் கலந்து கொண்டனர்.
- 6 ஆடுகள் பறிமுதல்
- அரக்கோணம் சிறையில் அடைத்தனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் விவசாயி. தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் 13 ஆடுகளை அடைத்து வைத்து இருந்தார்.
காலை எழுந்து பார்த்தபோது கொட்டகையில் இருந்த ஆடுகள் திடீரென காணாமல் போனது. இது குறித்து மோகனசுந்தரம் நெமிலி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருடியவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நெமிலி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சிறுனமல்லி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விடுத்து விரட்டி சென்று பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகுவேடு பகுதியை சேர்ந்த சலாம் (வயது 26) எனவும், அவர் பல்வேறு இடங்களில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் சலாமை கைது செய்து அவரிடமிருந்து 6 ஆடுகள் மற்றும் ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சலாமை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அரக்கோணம் கிளை சிறையில் அடைத்தனர்.
- 150-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
- தலைமையாசிரியருக்கு நினைவு பரிசு வழங்கினர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மின்னல் ஊராட்சியில் 1951-ம் ஆண்டு கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
கடந்த 1984-85ம் ஆண்டில் 10 ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் 37 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் அப்பள்ளியில் படித்த 150-க்கும் மேற்பட்டவர்கள் இன்று அரசு மற்றும் பல்வேறு தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள் சுயதொழில் புரிபவர்கள் என பலரும் சந்தித்து பள்ளி கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
பலரும் தங்களது நண்பர்களுடன் செல்பி எடுத்தும் குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்தனர். முன்னதாக காலையில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி காலத்தில் தங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர், ஆசிரியைகள் பள்ளி தலைமை யாசிரியருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
- 14 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
சோளிங்கர்:
சோளிங்கரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 2-வது வட்ட மாநாடு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.
மாநாட்டிற்கு சோளிங்கர் வட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை தலை வர்கள் நந்தன், வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர்கள் பரந்தாமன், தயாளன் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில தலைவர் திருமலைவாசன், மாநில பொதுச்செயலாளர் ரவி, மாநில துணைத்தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.
கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் என்ற வரம்பை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், பழைய முறையிலான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், வரையறுக் கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு ஓய்வு பெறுகின்ற போது பணப் பலனை 50 சதவீதம் வழங்க வேண்டும், கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும், டிரைவர் பதவி உயர்வு வழங்க வேண்டும், போனஸ் நாள் கணக்கிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் வட்டதுணைத்தலைவர் ரங்கநாதன், இணைச் செயலாளர்கள் தாட்சாயணி, வடிவேல், ரத்னா, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர்கள் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் நன்றி கூறினர்.






