என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடிய 2 பேர் கைது
    X

    செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடிய 2 பேர் கைது

    • 74 பேட்டரிகள் திருட்டு
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதா கர் ( வயது 39 ) . இவர் தனியார் செல்போன் கோபுர பராமரிப்பு சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.

    அரக்கோணத்தை சுற்றியுள்ள வேலூர் பேட்டை, மூதூர் , வளர்புரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள செல்போன் கோபுரங்களில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 74 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் சுதாகர் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அந்தவழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது அரக்கோணம் அடுத்த வட மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (31), சந்திரகுமார் ( 21 ) என்பதும், செல்போன் கோபுரங்களின் பேட்டரிகளை திருடியதும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து பார்த்திபன், சந்திரகுமார் ஆகிய இருவர் மீதும், திருட்டு பேட்டரிகளை வாங்கியதால் உடந்தையாக இருந்ததாக பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்திருக்கும் அரக்கோணத்தை சேர்ந்த ஆனந்தன் ( 65 ) மீதும் தாலுகா இன்ஸ்பெக்டர் பழனி குமார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.

    Next Story
    ×