என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது
- மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த கீழாண்ட மோட்டூரை சேர்ந்தவர் கோபால் (வயது 38). தொழிலாளி. இவரது மனைவி லதா (29). நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.
பிரசவ வலியால் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் சேர்த்துள்ளனர் . தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக கொண்டு சென்றனர்.
ஜம்புகுளம் அருகே சென்ற போது பிரசவவலி அதிகமாக இருந்ததால் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தி மருத்துவ உதவியாளர் பொன்னுரங்கன் பிரசவம் பார்த்தார் . லதா வுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர் தாய், சேய் இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Next Story






