என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரியில் பிணமாக மீட்பு"

    • சீருடை அணிந்த நிலையில் மாணவி பார்கவி இறந்து கிடந்தார்.
    • தவறி விழுந்தாரா? அல்லது தண்ணீரில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மோடி குப்பம் அருகே உள்ள கீழ்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களின் மகள் பார்கவி (வயது 17). இவர் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம் அரசு மேல்நிலை ப்பள்ளி யில் பிளஸ்-2 அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் சனிக்கிழமை பள்ளிக்கு மாணவி வழக்கம் போல சென்றார். மாலை வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.

    இந்த நிலையில் ஐகுந்தம் பெரிய ஏரி பகுதியில் நேற்று பிற்பகல் சீருடை அணிந்த நிலையில் மாணவி பார்கவி இறந்து கிடந்தார்.

    இது குறித்து பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஏரி பக்கமாக நடந்து சென்ற போது மாணவி ஏதேனும் தவறி விழுந்தாரா? அல்லது தண்ணீரில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மீன் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்தவர் ரகு ( வயது 57 ) , கூலித் தொழிலா ளியான இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

    பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலை யில் நேற்று முன்தினம் ஏரியில் ஆண் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் திமிரி போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.

    இதனைத் தொடர்ந்து சம் பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத் தைக் கைப்பற்றி விசாரணை செய்ததில் பரதராமியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரகு என்பது தெரிய வந்தது.

    அவரது உடலை பிரேத பரி சோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரகு எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×