வாலாஜாவில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்தது முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் எஸ்.பி தீபா சத்யன் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் எஸ்.பி தீபா சத்யன் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
Published on

வாலாஜா:

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்து முன்னணி, பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள், விழாகுழுவினர் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் அமைக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் வாலாஜாப்பேட்டையில் நேற்று மாலை போலீஸார் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

இந்த ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில் ஏடிஎஸ்பி விஸ்வேஸ்வரன், டி.எஸ்.பி. பிரபு, ஆயுதப்படை மற்றும் ராணிப்பேட்டை காவல் உட்கோட்டத்தை சேர்ந்த 145 போலீசார் அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இந்த அணிவகுப்பு ஊர்வலமானது அய்யப்பன் கோவிலில் இருந்து தொடங்கி எம்.பி.டி சாலை, வாலாஜா பேருந்து நிலையம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மகாத்மா காந்தி பூங்கா அருகே முடிவடைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com