கல்லூரி மாணவரை கொன்ற 4 பேர் கோர்ட்டில் சரண்

15 நாள் ஜெயலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.மரக்காணத்தில் நடந்த கொலையில் திருப்பம்
கல்லூரி மாணவரை கொன்ற 4 பேர் கோர்ட்டில் சரண்
Published on

ராணிப்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம், மரக் காணம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 22 - ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த அபி என்கிற அபினேஷ் (வயது 22) என்ற கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர் இந்தநிலையில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த விஜய் (25), திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிர காஷ் (21), காஞ்சீபுரம் பகு தியை சேர்ந்த சஞ்சய் (19), திருநெல்வேலியை சேர்ந்த வைரமணி (22) ஆகிய 4 பேர் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற் றும் குற்றவியல் நடுவர் நீதி மன்ற நீதிபதி நவீன் துரைபாபு முன்பு சரண் அடைந்தனர்.

அவர்கள் 4 பேரையும் 15 நாள் வேலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com