என் மலர்
நீங்கள் தேடியது "பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கீழே விழுந்து கிடந்தன."
- கைரேகை நிபுணர்கள் ஆய்வு
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த வாணியம்பேட்டை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 37). இவர் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் சிறப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 19- ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
இன்று காலை வீடு திரும்பிய தினேஷ் வீட்டின் முன்பக்க கதவை உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கீழே விழுந்து கிடந்தன. பீரோவில் வைத்திருந்த மூன்றரை பவுனை நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அரக்கோணம் கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் வீட்டில் கைரேகை நிபுணர்களை வைத்து ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






