என் மலர்
உள்ளூர் செய்திகள்

காசநோய் தடுப்பு குறித்து சிறப்பு முகாம் நடந்த காட்சி.
காசநோய் தடுப்பு குறித்து சிறப்பு முகாம்
- நெமிலி சயனபுரத்தில் நடந்தத
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரத்தில்திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கிராம சேவை மையக்கட்டிடம் அருகில் மருத்துவ முகாம் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடிவேலுதலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழுதலைவர் பெ.வடிவேலு கலந்து கொண்டு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.
இதில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சுகன்யா ரவி, வட்டார மருத்துவ அலுவலர் ரதி, மருத்துவ அலுவலர்கள் பிரியதர்ஷன், பாலச்சந்தர், செவிலியர்கள் அம்பிகா, மீனா, காசநோய் மேற்பார்வையாளர் ஸ்டீபன் பொன்னையா, சுகாதார அலுவலர்கள் காயத்ரி, பாக்கியராஜ், சுரேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story






