என் மலர்
ராணிப்பேட்டை
- சிகிச்சை பலனின்றி பரிதாபம்
- அதிகாரிகள் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் ஜெய் பீம் நகரில் நேற்று அதி காலை ஒரு ஆண் புள்ளி மான் ரத்த காயத்துடன் வந்தது. இதைக்கண்ட அப்பகுதிமக்கள் மானை மீட்டு அங்குள்ள கோயில் அருகே கட்டினர்.
இதுகு றித்து அரக்கோணம் வரு வாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், டவுன் விஏஓ கலைவாணன் அங்கு வந்து ஆற்காடு வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதைய டுத்து, அரக்கோணம் வன காப்பாளர் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து கால்நடை டாக்டர்கள் உதவியுடன் மானுக்கு சிகிச்சை அளித்தார். ஆனால், மான் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி இறந்தது. இதைத்தொடர்ந்து, அரக் கோணம் கணேஷ் நகரில் உள்ள கால்நடை மருத் துவமனையில் இறந்த மானுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. வனத் துறையினர் முன்னிலையில் மானை அங்கேயே தீயிட்டு கொளுத்தினர்.
நாய்கள் கடித்து காயம் மானுக்கு ஏற்பட்டதா? அல்லது தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடி பட்டதா? இரும்பு கம்பி யில் குத்தி கொண்டதா? என அதிகாரிகள் விசாரிக் கின்றனர்.
- தாசில்தார் பேச்சுவார்த்தை
- போக்குவரத்து பாதிப்பு
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் கிராமத்தில் ஏரி கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் தூர்வாரி பல ஆண்டுகள் ஆவதால் தற்போது தூர்வார வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இது நாள் வரை ஏரி கால்வாய் தூர்வாரப்படவில்லை என தெரிகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் நேற்று சர்வந்தாங்கல் பஸ் நிறுத்தத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ராணிப் பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், ஆற்காடு தாசில்தார் வசந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படவே மறியலை கைவிட்டு அனைவ ரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வாலாஜா:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வாராகி ஹோமத்துடன் பஞ்ச மஹா யக்ஞம் நடந்தது.
பஞ்சமி திதியை முன்னிட்டு வாழ்வில் வளம் பல பெறவும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறவும் சூலினி, காளி, திரிபுர பைரவி, பகுளாமுகி, வாராகி என பஞ்சமுகங் களுடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பஞ்சமுக வாராகிக்கு விசேஷ மூலிகைகள், மஞ்சள் கிழங்கு, கோரைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, போன்ற எண்ணற்ற கிழங்கு வகைகளைக் கொண்டு சிறப்பான வாராகி ஹோமமும் பஞ்ச திரவிய அபிஷேகம், அர்ச்சனை மற்றும் வாராகி தீபம் ஏற்றப்பட்டது.
அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாராகி அம்மனை தரிசித்து சென்றனர். மேலும் சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சத்ரு சம்ஹார ஹோமமும் அபிஷேகமும் நடைபெற்றது.
- பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புக்கான சடாய் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 35). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பானுமதி (32). இவர்களுக்கு மதன்ராஜ், கார்த்திகேயன் என 2 மகன்கள் உள்ளனர்.
பானுமதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை மகன்கள் இருவரும் டியூசன் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சேட்டு பானுமதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். மனைவி பிணத்தை வீட்டுக்குள் போட்டு விட்டு அவர் எதுவும் தெரியாதது போல் வெளியே சென்றுவிட்டார்.
அவரது மகன்கள் டியூசன் விட்டு வீட்டிற்கு இரவு 7 மணி அளவில் வந்தனர். அப்போது பானுமதியை எழுப்ப முயன்றனர்.
பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் உதவியுடன் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பானுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி பானுமதியின் கணவர் சேட்டுவிடம் விசாரணை நடத்தினார். அப்போது சேட்டு மனைவி உடல்நிலை சரியில்லாததால் தான் இறந்தார் என கூறினார்.
மேலும் போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் சேட்டு மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெமிலி அருகே பரிதாபம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் விக்னேஷ் (19).இவர் ராமச்சந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லூரி மாணவர்
இவர் நெமிலி அடுத்த அசநெல்லிப்குப்பம் பகுதியில் இரவு நடந்த திருவிழாவை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியில் இருந்த வயல்வெளியில் சிறுநீர் கழிப்பதற்காக இறங்கியுள்ளார்.வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் அரக்கோணம் ஏ.எஸ்.பி. கிரிஸ்யாதவ் விசாரணை மேற்கொண்டார்.
இது தொடர்பாக விளை நிலத்தின் உரிமையாளர் அலிநெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த வரதன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அரக்கோணம் தொகுதி பொறுப்பாளர் பேச்சு
- தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த ெநல்லூர்பேட்டை பகுதியில் பா.ஜ.க. கிளை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு நெமிலி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சுதாகர்ஜி தலைமை தாங்கினார்.மாவட்ட பொதுச் செயலாளர் தேவராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக அரக்கோணம் பாராளுமன்ற பார்வையாளர் ரமேஷ்குமார் கலந்து கொண்டார் அவர் பேசியதாவது:-
மாதந்தோறும் பா.ஜ.க. சார்பில் அனைத்து கிராமங்களிலும் கிளைக் கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும். பெண்கள் உள்ளிட்டர்வர்களை அதிகளவில் கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.
பா.ஜ.க. கொள்கை செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ஜ.க. மட்டுமே என்பதற்கு எடுத்துக்காட்டாக வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்கு இன்றுமுதல் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது ஒன்றிய பார்வையாளர் கீதா ரகுபதிராஜ் ,கிளைத் தலைவர்கள் செல்வம், கார்த்திக், சக்தி கேந்திரா பொறுப்பாளர் புருஷோத்தமன் மற்றும் கிளைக்கு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 200-க்கும் மேற்பட்டோர் மேல்சிகிச்சைக்கு கோவைக்கு அனுப்பி வைப்பு
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு சோளிங்கர் நகர திமுக, சோளிங்கர் லயன்ஸ் சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், ஆயுக்தா மருத்துவமனை மோகன் அறக்கட்டளை இணைந்து கண் சிகிச்சை முகாம், உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முகாம், உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சோளிங்கர் நகர திமுக செயலாளரும், சோளிங்கர் லயன்ஸ் சங்க தலைவருமான கோபி தலைமை தாங்கினார். லயன்ஸ் சங்க செயலாளர் திருமால் முன்னிலை வகித்தார். சங்க பொருளாளர் சலீம் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமிற்கு மாநில சுற்றுச்சூழல் துணைச் செயலாளர் வினோத் காந்தி கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாம் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார்.
உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டு கண் அறுவை சிகிச்சைக்காக 200க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சைக்காக கோவை சங்கரா மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம் தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகராட்சி துணை தலைவர் பழனி, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகராட்சி உறுப்பினர்கள் அன்பரசு, லோகேஸ்வரி சரத்பாபு, மாவட்ட பிரதிநிதி சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மஞ்சள், ஆரஞ்சு, கருப்பு உள்ளிட்ட பெல்ட் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஸ்ரீ காஞ்சி போதிதர்மர் சிட்டோ ரியு கராத்தே பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் கராத்தே ராஜன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி பொருளாளர் மணி அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக குட் லெட் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாமுவேல் ஜெயசீலன் கலந்து கொண்டு கராத்தே பயிற்சி பெற்ற நூறு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மஞ்சள், ஆரஞ்சு ப்ளூ, கருப்பு உள்ளிட்ட பெல்ட் வாங்கினார்கள். அப்போது கராத்தே பயிற்சியாளர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் தொழில்நுட்ப இயக்குனர் பிச்சாண்டி நன்றி கூறினார்.
- வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 19 வயதான கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வயல்வெளி உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே அசநெல்லிக்குப்பம் பகுதியல் கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.
வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 19 வயதான கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வயல்வெளி உரிமையாளர் வரதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- பக்தர்களுக்கு அண்ணதானம்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருமான் பிள்ளையார் கோவிலில் மாசி மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு கருமான் பிள்ளையாருக்கு திருநீறு ,சந்தனம்,பால், தயிர், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து அருகம்புல்,எருகம் பூமாலை, மாலை மலர் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் கடன் தொல்லை தீர்வும் , செல்வம் செழிக்கவும் தேங்காய் மாலை செலுத்தினார்கள்.
இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள். ஏற்பாட்டை பாண்டியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஜெயா கோபி செய்திருந்தார்.
- அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- விவசாயிகள் வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் அதே பகுதியை சேர்ந்த குருநாதன் என்பவருடைய விவசாய நிலத்தின் வழியாக செல்லும் மின்சார ஒயர் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளதால் ஒன்றோடு ஒன்று உரசி அடிக்கடி நெருப்பு பொறி உண்டாவதாக பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் 2 மின் கம்பங்கள் இடையே உள்ள தூரம் அதிகமாக இருப்பதால் பலத்த காற்று வீசும் போது ஒன்றோடு ஒன்று உரசி விவசாய பம்பு செட் மோட்டார்கள் அடிக்கடி சேதம் அடைவதாக அப்பகுதி யில் உள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் மின்சார வாரிய அலுவ லர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த ஒயரானது ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கற்களை கட்டி மின்சார ஒயரின் மீது தொங்கவிட்டு உள்ளனர்.
இதனால் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- 4 வாகனங்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இரு சக்கர வாகன திருட்டை கண் டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி உத்தரவிட்டார்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பி ரண்டு பிரபு மேற்பார்வை யில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டி ருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கி ளில் வந்த ஆற்காட்டை சேர்ந்த ஜெயசந்திரன் (வயது 22), வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20) ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் இருவரும் சேர்ந்து ஆற்காடு பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள் களை திருடியது தெரியவந்தது மேலும் அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் களை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






