ஆற்காடு அருகே மனைவி கழுத்தை நெரித்து கொலை- நாடகமாடிய கணவன் கைது

பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.
ஆற்காடு அருகே மனைவி கழுத்தை நெரித்து கொலை- நாடகமாடிய கணவன் கைது
Published on

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புக்கான சடாய் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 35). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பானுமதி (32). இவர்களுக்கு மதன்ராஜ், கார்த்திகேயன் என 2 மகன்கள் உள்ளனர்.

பானுமதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை மகன்கள் இருவரும் டியூசன் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சேட்டு பானுமதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். மனைவி பிணத்தை வீட்டுக்குள் போட்டு விட்டு அவர் எதுவும் தெரியாதது போல் வெளியே சென்றுவிட்டார்.

அவரது மகன்கள் டியூசன் விட்டு வீட்டிற்கு இரவு 7 மணி அளவில் வந்தனர். அப்போது பானுமதியை எழுப்ப முயன்றனர்.

பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் உதவியுடன் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பானுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி பானுமதியின் கணவர் சேட்டுவிடம் விசாரணை நடத்தினார். அப்போது சேட்டு மனைவி உடல்நிலை சரியில்லாததால் தான் இறந்தார் என கூறினார்.

மேலும் போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் சேட்டு மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com