என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்
    X

    கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்

    • மஞ்சள், ஆரஞ்சு, கருப்பு உள்ளிட்ட பெல்ட் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஸ்ரீ காஞ்சி போதிதர்மர் சிட்டோ ரியு கராத்தே பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் கராத்தே ராஜன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி பொருளாளர் மணி அனைவரையும் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக குட் லெட் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாமுவேல் ஜெயசீலன் கலந்து கொண்டு கராத்தே பயிற்சி பெற்ற நூறு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மஞ்சள், ஆரஞ்சு ப்ளூ, கருப்பு உள்ளிட்ட பெல்ட் வாங்கினார்கள். அப்போது கராத்தே பயிற்சியாளர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் தொழில்நுட்ப இயக்குனர் பிச்சாண்டி நன்றி கூறினார்.

    Next Story
    ×