என் மலர்
ராணிப்பேட்டை
- வருகிற 18-ந்தேதி நடக்கிறது
- கலெக்டர் வளர்மதி ஆய்வு
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் வருகின்ற 18-ந்தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வாலாஜாப்பேட்டை நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன், தாசில்தார் நடராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
- போலீசாரின் அறிவுரையை ஏற்று நடவடிக்கை
- 4 பேர் கைது
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலம் பஜார் வீதியில் தூத்துக்குடி சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். அவருடைய கடையில் கஞ்சா கும்பல் வந்து தகராறு ஈடுபட்டதாகவும், இதுகுறித்து தக்கோலம் போலீசாரிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த முத்துராமலிங்கம் கடையை மூடிவிட்டு "கஞ்சா போதையில் உலாவரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்பட்டது" என்ற நோட்டீசை கடையின் ஷட்டரில் ஒட்டி விட்டு தன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றார். இதனை தொடர்ந்து தக்கோலம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர். போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து முத்துராமலிங்கத்திற்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் ஆகவே மீண்டும் கடையை திறக்க கோரி அவரிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற முத்துராமலிங்கம் இன்று காலை கடையைத் திறந்து வழக்கம் போல தன் பணியை மேற்கொண்டார்.
இது குறித்து முத்துராமலிங்கம் கூறியதாவது:-
வியாபாரிகள் சங்கத்தின் கோரிக்கை ஏற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கஞ்சா கும்பலை கைது செய்வது, பாதுகாப்பு அளிப்பதாக உறுதியின் பேரில் கடை திறந்ததாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அனைத்து வியாபாரி சங்க தலைவர் ஆரோக்கியசாமி தக்கோலத்தில் தற்போது கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் போலீசார் தனிக் கவனம் செலுத்தி இதை முற்றிலும் களைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தக்கோலம் போலீசாரிடம் கேட்டபோது:-
தற்போது பழைய கஞ்சா குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளோம். முத்துராமலிங்க கடையில் தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறோம் என்றார்.
- வருவாய்த்துறையினர் நடவடிக்கை
- முரம்பு மண் கடத்துவதாக புகார்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த குமரகிரி மலை அடிவாரத்தில் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் முரம்பு மண் கடத்துவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஆற்காடு தாசில்தார் வசந்தி, வருவாய் ஆய்வாளர் சந்தியா, கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மண் கடத்துவதை தடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் ராட்சத பள்ளம் தோண்டினர்.
- போலீசார் பாராட்டு
- 500 ரூபாய் சன்மானம் வழங்கினர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்தசயனபுரம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
அவருடைய ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் தொலைந்து விட்டது. இதுகுறித்து அவர் நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த பனைமரம் ஏறும் தொழிலாளி ஒருவர் செல்போன் கிடைத்ததாக நெமிலி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை சப்-இன்ஸ் பெக்டர் சிரஞ்சீவி பாராட்டி சால்வை அணிவித்து, 500 ரூபாய் சன்மானம் வழங்கினார். மேலும் அந்த வாலிபரிடம் செல்போன் ஒப்படைக்கப்பட்டது.
- தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடந்தது
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
விழிப்புணர்வு பேரணிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு தமிழ் ஆட்சிமொழி சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது ராணிப்பேட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு தொடங்கி எம்.எப். ரோடு, நவல்பூர், எம்.பி.டி ரோடு வழியாக சென்று முத்துக்கடையில் முடிந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகர செயலாளர் பூங்காவனம், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத், கோபிகிருஷ்ணா மற்றும் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், தமிழ் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- இந்த நோட்டீசை கண்ட அந்தப் பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
- புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர்.
அரக்கோணம் :
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கீழ் பஜாரில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 38) என்பவர் சிமெண்டு மற்றும் கட்டுமானத்திற்கான இரும்பு கம்பி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன்பு கடந்த 11-ந் தேதி கஞ்சா போதையில் வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து முத்துராமலிங்கம் தக்கோலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனை அறிந்ததும் தகராறில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் முத்துராமலிங்கத்தின் கடைக்கு சென்று அவரை மிரட்டியுள்ளார். இதனால் முத்துராமலிங்கம் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி மீண்டும் அவரது கடை முன்பாக இரண்டு வாலிபர்களும் வந்து கற்களை வீசியும், கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் தராசு ஆகியவற்றை சேதப்படுத்தியும் முத்துராமலிங்கத்திடம், கடையை திறந்தால் ஒழித்து கட்டுவேன் என மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துராமலிங்கம் மீண்டும் தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபோது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன முத்துராமலிங்கம் கடையின் ஷட்டரை மூடி பூட்டிவிட்டு, அதன் மீது நோட்டீஸ் ஒன்றை ஒட்டி உள்ளார். அதில் கஞ்சா போதையில் வரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்படுகிறது என்று எழுதி உள்ளார். இந்த நோட்டீசை கண்ட அந்தப் பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக தக்கோலம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முத்துராமலிங்கத்துக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். கடையை திறந்து வியாபரம் செய்யுங்கள் என தெரிவித்தனர். இதையடுத்து முத்துராமலிங்கம் கடையை திறந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் விசாரணை
- வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
ஆற்காடு:
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்வந்த் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 20- ந் தேதி ரத்தினகிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூட்டுத்தாக்கு தேசிய நெடுஞ்சா லையில் சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள தனியார் கல் லூரி எதிரே சென்றபோது 7 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் காட் பாடி தாலுகா இளைய நல் லூர் அடுத்த வாணியகாட்டூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 35) இந்த வழக்கில் தலைமறைவானார்.
அவரை ரத்தினகிரி போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சுரேசை ரத்தினகிரி போலீசார் கைது செய்து ஆற்காடு கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- 450 கிலோ சிக்கியது
- குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய லட்சுமி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக வந்து செல்லும் ரெயில்கள், நடைமேடை பகுதிகளில் நேற்று காலை சோதனை நடத்தினர்.
அப்போது 5-வது நடைமேடையில் அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா வரை செல்லும் ரெயில் பெட்டிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நடைமேடை அருகே பைகளில் சுமார் 450 கிலோ ரேசன் அரிசி இருப்பதை கண்டு அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த ராணி (வயது 60), பாஞ்சாலம்மாள் (58), நாராயணன் (62) மற்றும் செந்தாமரை (66) ஆகியோர் ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- சைபர் கிரைமில் புகார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தற்போது வீட்டில் இருந்தபடியே பணிகளை செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு லிங்க் வந்தது. அதனை அவர் ஓபன் செய்ததும், டெலிகிராம் செயலிக்கு சென்றது. எதிர் முனையில் இருந்த நபர் பகுதிநேர வேலை தருவதாகவும், அதற்காக ரூ.1000 கட்டுங்கள் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதனை நம்பி பணம் கட்டினார். உடனடியாக பணம் இரட்டிப்பாக வந்தது.
பின்னர் 5 நிலையை அடைந்தால், அதிக அளவில் பணம் கிடைக்கும் என சவால் கேள்விகள் கேட்கப்பட்டது. அதிலும் அவர் பதில் அளித்து பணம் சம்பாதித்தார். அடுத்தடுத்து நிலை மாறி கேள்விகள் கேட்கப்பட்டது.
பதில் தெரியாமல் பணத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். விட்ட பணத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என அடுத்தடுத்து விளை யாட்டுகளை விளையாடியதால் லட்சக்க ணக்கில் பணத்தை இழந்தார்.
மேலும் நண்பர்களிடம் கடன் வாங்கி மீண்டும் அதே விளையாட்டை விளையாடி இருக்கிறார். அப்போதும் விளையாட்டில் தோற்று ரூ.55 லட்சம் வரை இழந்து விட்டார்.
இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அமைச்சர் காந்தி வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி, 17 பயனாளிகள் மற்றும் 7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 9 ஆயிரம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-
முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் உள்ளாட்சிக்கு முக்கியத்துவம் அளித்து மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு வருகின்றார். மேலும் உள்ளாட்சிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டுமென அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் திட்டப்பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். பணிகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை தன்னிடம் தெரிவிக்கு மாறும் பின்னர் மாவட்ட கலெக்டரிடம் தெரியப்படுத்தி அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
முதலமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கிட வேண்டும். அதற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சப்பை பையினை பயன்படுத்திட அறிவுருத்திட வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாட்டிலேயே முன்மாதிரியாக திகழ வேண்டும். மக்களுக்கான திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் தரத்தில் எந்த ஒரு சமரசமும் இருக்கக் கூடாது. தரமானதாக இருக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தங்களுக்கு பதவி கிடைத்திருக்கிறது என எண்ண வேண்டாம்.
மக்கள் உங்களுக்கெல்லாம் ஒரு பொறுப்பினை வழங்கியுள்ளார்கள் என எண்ணி அதனை சரியான முறையில் பயன்படுத்தி மக்களுக்கு அரசின் திட்டப்பணிகளை நிறைவேற்றி, மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.
முதலமைச்சர் மக்க ளுக்கு என்னவெல்லாம் செய்ய நினைக்கின்றாரோ அதனை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
- 2 ஆண்டுகளாக வீட்டு வேலைகளை செய்து வருகிறேன்
- கணவர் வாக்குமூலம்
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த தோப்புக்கான சடாய் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 35). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பானுமதி (32). இவர்களுக்கு மதன்ராஜ், கார்த்திகேயன் என 2 மகன்கள் உள்ளனர். பானுமதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் மாலை மகன்கள் இருவரும் டியூஷன் சென்று விட்டனர். அந்த நேரத்தில் கணவன் மனைவியிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சேட்டு பானுமதி கழுத்தை நெறித்தார்.
மேலும் தலையானால் முகத்தை அமுக்கி கொலை செய்தார். பின்னர் எதுவும் நடக்காதது போல் வெளியே சென்று விட்டார்.
டியூசன் முடிந்து வந்த அவரது மகன்கள் தாய் படுத்திருப்பதாக நினைத்து எழுப்பினர். அவர் எழுந்தி ருக்காததால் உடனடியாக பானுமதியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாய கமூர்த்தி விசாரணை நடத்தினார். இதில் சேட்டு பானுமதியை கொலை செய்தது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக சேட்டு போலீசில் அளித்த வாக்குமூ லத்தில் கூறியிருப்பதாவது:-
எனது மனைவி பானுமதிக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. 10 நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பை பிரச்சனை காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் 2 ஆண்டுகளாக வீட்டில் வேலைகளை நான் தான் கவனித்து வந்தேன். ஆனாலும் எனது மனைவி வேலை சரியாக செய்யவில்லை எனக் கூறி திட்டிக் கொண்டே இருந்தார். சம்பவத்தன்று எனது மகன்கள் டியூசன் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் நான் சரியாக கவனிப்பதில்லை வேலை செய்வதில்லை எனக்கூறி பானுமதி என்னை திட்டினார்.
இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரது கழுத்தை நெரித்தும் தலையனையை முகத்தில் வைத்து அழுத்தியும் கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாதது போல நடந்து கொண்டேன். மருத்துவ பரிசோதனையில் நான் கொலை செய்ததை கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கலெக்டர் வழங்கினார்
- மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள்கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், லவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை கூட்டுறவு கடனு தவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடு கள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடி நீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
மொத்தம் 486 மனுக்கள் குமார் பெறப்பட்டது. அந்த மனு
களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசா ரணை மேற்கொண்டு தகுதி யானதாக இருப்பின் உடனடி யாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வும் கலெக்டர் உத்தரவிட் டார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனா ளிகள் 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்து 500 வீதம் சக்கர நாற்காலி, 2 பேருக்கு கைய டக்க திறன்பேசி, ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கப்பட் டது.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குனர் லோகநாயகி, துணை கலெக்டர் தாரகேஷ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையர் சத் திய பிரசாத், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி. மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நல அலுவலர் சரவணக் குமார்
உள்ளிட்ட அதிகாரி கலந்து கொண்டனர்.






