என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 3,185 பேருக்கு அமைச்சர் ஆர்.காந்தி பணி ஆணை வழங்கினார்
    • குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது

    வாலாஜா:

    வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தி ஜி.கே.உலக பள்ளி ஆகியோர் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று அக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    முகாமிற்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன் வரவேற்றார்.ஜிகே உலக பள்ளி மேலாண்மை இயக்குனர் வினோத் காந்தி, ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், வடிவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணைகளை நேற்று மாலை 4.00 மணிவரை நடைபெற்ற முகாமில் 131 தொழிற் நிறுவனங்கள் கலந்துகொண்டது.இதில் வேலை நாடுனர்கள் ஆண்கள் 8,347,பெண்கள் 14,342 என மொத்தம் 22,689 நபர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.இதில் 122 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இவர்களில் 28 மாற்றுத்திறனாளிகளும் 3157 நபர்களும் என மொத்தமாக 3,185 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10,000/-முதல் அதிகபட்சமாக ரூ.25,000/- வரை நிறுவனங்கள் தேர்வானவர்களுக்கு வழங்கவுள்ளது.

    நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, துணை இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அருணகிரி, உதவி இயக்குநர்கள் பரமேஸ்வரி, செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், தி ஜிகே உலக பள்ளி மேலாண்மை இயக்குநர்சந்தோஷ் காந்தி, நகரமன்றத் தலைவர்கள் ஹரிணிதில்லை, சுஜாதா வினோத், முகமது அமீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணக்குமார், கல்லூரி முதல்வர் சீனிவாசன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, மகளிர் திட்டம், தமிழ்நாடு ஊரக/நர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
    • பொதுமக்கள் பீதி

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சிக்கு உட் பட்ட 17-வது வார்டு கிழக்கு பஜார் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் உள்ளது.

    இதன் அருகே ஒரே இடத்தில் ஏராளமான பாம்பு குட் டிகள் இருந்தன. இதனைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூடப்பட்டிருந்த கழிவுநீர் கால்வாயை உடைத்து பார்த்தனர். அதில் 25 பாம்பு குட்டிகள் இருந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து சாக்கு பையில் அடைத்து கொண்டு சென்றனர்.

    கால்வாயில் பாம்பு குட்டிகள் இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கதவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அடுத்த சூரை கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் உமாபதி (வயது 45) விவசாயி. நேற்று காலை உமாபதி, அவரது மனைவி, பிள்ளைகளுடன் வீட்டை பூட் டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றார். மதியம் வீட் டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் நிலத்திற்கு சென்றுள்ளனர்.

    மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உமாபதி வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான சுமார் 9 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பாணாவரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    நகை திருடு போன பீரோ, உடைக்கப்பட்ட கதவில் இருந்த மர்ம கும்பலின் கைரேகை களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். அதன் அடிப்ப டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    • பொதுமக்கள் பீதி
    • நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மாசா பேட்டை பகுதியில் அதிகப்படியான நாய்கள் தெருக்களில் சுற்றித்திரிகின்றன. இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் அச்சம டைந்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று காலை அதே பகுதி யைச் சேர்ந்த கோகுல் (வயது 10), திவ்யா (12), கோபால் (8), நிலா (II), கோடீஸ்வரி (23) உள்பட 7 பேரை நாய் கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் ஆற்காடு அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்றனர்.

    மக்களை பெரிதும் அச்சுறுத்தும் தெரு நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பட்டா வழங்காததை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், சிறுவளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சொந்தமான இடம் உளியநல்லூர் கிராமத்தில் உள்ளதாகவும், அந்த இடத் தில் விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்ட இருப்ப தால் அந்த இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வருவாய்துறையினருக்கு கடந்த சில மாதங்களாக கோரிக்கை வைத்துவந்தனர்.

    இந்நிலையில் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் வருவாய் துறையினரை கண்டித்து பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார், மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் சுபாஷ், ராஜமாணிக்கம், சுப்பிரமணி, மணி, ஆதிமூலம், தினகரன், ரவிச்சந்திரன், கிருஷ்ணன், தேவராஜ், நரசிம்மன், சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பெற்றோருக்கு ஆறுதல்
    • மாடு ஓட்டி வந்த போது பரிதாபம்

    காவேரிப்பாக்கம்:

    வாலாஜா அடுத்த அனந்தலை கிராமம் கணபதி நகரை சேர்ந்தவர் முனுசாமி.ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

    இவரது மகன் விக்னேஸ்வ ரன் (வயது 18) இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது.

    அப்போது வயலில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டினை பிடித்துக்கொண்டு வந்த போது இடி தாக்கியதில் விக்னேஷ் பேச்சு மூச்சுயின்றி மயங்கி விழுந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே விக்னேஷ் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையில் வைக்க ப்பட்டுள்ள விக்னேஷின் உடலுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் வளர்மதி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.இதனை தொடர்ந்து அவரின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் அமைச்சர் காந்தி ஆறுதல் கூறினார்.

    இடி தாக்கி உயிரிழந்த இளைஞருக்கு தமிழ்நாடு அரசின் மூலம் உடனடியாக நிவாரண நிதி உதவி பெற்று வழங்கப்படும் அதற்கான நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் அமைச்சர் காந்தி கேட்டுக்கொண்டார்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பெயரில் நடவடிக்கை
    • மன அழுத்தம் குறைக்கும் என அறிவுரை

    அரக்கோணம்:

    அரக்கோணம் பகுதிக்கு உட்பட்ட போலீசார் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான யோகா பயிற்சி அரக்கோணம் தூய அந்தரய ஆலய வளாகத்தில் ஏ.எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் தலைமையில் நடைபெற்றது.

    தன்னார்வ தொண்டு நிறுவன சார்பாக நடைபெற்ற யோகா பயிற்சியில் இதயம் மூளை சிந்தனை போன்ற செயல்பாட்டிற்கான விளக்கங்களையும் அதன் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளையும் பயிற்சி வாயிலாக கற்றுத் தரப்பட்டது.

    போலீசாருக்கு பணி நிமித்தமாக ஏற்படும் தூக்கமின்மை போன்ற நேரங்களில் மேற்கொள்ளப்படும் யோகா அதன் மூலம் பயன்கள் விளக்கி பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி மூலம் மன அழுத்தம் குறைந்து உடல் வலிமை பெறும் என்றும் தொடர்ந்து இந்த பயிற்சி வாயிலாக உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள இந்த யோகா பெரும் உதவி ஆக இருக்கும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    • வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் பிரேதபரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கலர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 75), இவர் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் படுக்க சென்றார்.

    நேற்று அதிகாலை குடும்பத்தினர் சென்று பார்த்தபோது சுந்தர மூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 300 கிராம் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    தக்கோலம் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகை யில் நேற்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது தக்கோலம் -திருவாலங்காடு ரோட்டின் புதர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின் றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் தக்கோலம் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 21) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை போலீசார் சோதனை செய்த போது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதே போன்று நேற்று மாலை அரக்கோணம் தாலுகா போலீசார் சாலை, மின்னல், நரசிங்கபுரம், வேடல் மற்றும் மாறன் கண்டிகை ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் இருந்த போது மின்னல் பகுதியில் அஜித் (23). நரசிங்கபுரம் பகுதியில் அகிலன் (20) மற்றும் மாறன் கண்டிகை பகுதியில் தேவராஜ் (27) ஆகிய வாலிபர்கள் அந்த பகுதிகளில் இருந்த போது சந்தேகத்தின் பேரில் பிடித்து அவர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்து தலா 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • மது குடித்துவிட்டு பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள அவரக்கரை கிராமத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு (வயது 25). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் பர்னீச்சர் கடையில் பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த டெல்லி பாபு சோகமாக காணப்பட்டார். அவரிடம் தாயார் சரஸ்வதி கேட்டதற்கு, உடல் நலம் சரியில்லை என கூறினார்.

    இந்த நிலையில் டெல்லி பாபு நேற்று மது அருந்தி விட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சிப்காட் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் டெல்லி பாபு உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1.37 கோடியில் கட்டப்படுகிறது
    • நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ஏற்பாடு

    ஆற்காடு:

    ஆற்காடு நகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.137.20 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை,சிறுபாலம், கழிவுநீர் கால்வாய், அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தார், நகராட்சி கமிஷனர் பார்த்த சாரதி, துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர் குணாளன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாவட்ட பொருளாளர் சாரதி ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்தனர்.

    நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள் பொன் ராஜசேகரன், ஆனந்தன், காமாட்சி பாக்கியராஜ்,அனு அருண்குமார், விஜயகுமார், ராஜலட்சுமி துரை, தட்சிணாமூர்த்தி, முனவர் பாஷா மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி வாசி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அன்பழகன், தீயணைப்பு துறையில் ஓய்வு பெற்ற அலுவலர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 20-வது வார்டு பார்த்தீபன் நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பூங்கா அமைக்கும் பணிகளை ஈஸ்வரப்பன் எம் எல் ஏ,நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    உடன் நகர மன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

    • மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தல்
    • வாரசந்தை கட்டிடங்களின் தரம் குறித்து சோதனை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தணிகை போளூர், உள்ளியம்பாக்கம், பள்ளியாங்குப்பம், கீழாந்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் கட்டப்படும் பள்ளி கட்டிடங்கள் தரம் குறித்தும் மற்றும் ரேசன் கடைகளில் எடை மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் உளியம்பாக்கம் பள்ளிகளில் மாணவ -மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என எச்சரித்தார். 8 பேர் உள்ள பள்ளிக்கு புதிய கட்டிடம் எதற்கு என்றும் 2 ஆசிரியர்கள் ஏன் என கேள்வி எழுப்பினர்.

    மேலும் தணிகை போளூர் வாரசந்தை கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது திட்ட இயக்குனர் லோகநாயகி, தாசில்தார் சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சுரேஷ் சவுந்தர்ராஜன், வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, பஞ்சாயத்து தலைவர்கள் வெங்கடேசன், ஜீவா, அருள், கிராம நிர்வாக அலுவலர் கலைவாணன், மூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×