என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வேலை வாய்ப்பு முகாமில் 22,689 பேர் பங்கேற்பு
  X

  வாலாஜா அரசு கலைக்கல்லூரியில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அமைச்சர் ஆர்.காந்தி பணி நியமன ஆணையை வழங்கிய போது எடுத்த படம். அருகில் கலெக்டர் வளர்மதி உள்பட பலர் உள்ளனர்.

  வேலை வாய்ப்பு முகாமில் 22,689 பேர் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 3,185 பேருக்கு அமைச்சர் ஆர்.காந்தி பணி ஆணை வழங்கினார்
  • குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது

  வாலாஜா:

  வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தி ஜி.கே.உலக பள்ளி ஆகியோர் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று அக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

  முகாமிற்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன் வரவேற்றார்.ஜிகே உலக பள்ளி மேலாண்மை இயக்குனர் வினோத் காந்தி, ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், வடிவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

  தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணைகளை நேற்று மாலை 4.00 மணிவரை நடைபெற்ற முகாமில் 131 தொழிற் நிறுவனங்கள் கலந்துகொண்டது.இதில் வேலை நாடுனர்கள் ஆண்கள் 8,347,பெண்கள் 14,342 என மொத்தம் 22,689 நபர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.இதில் 122 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இவர்களில் 28 மாற்றுத்திறனாளிகளும் 3157 நபர்களும் என மொத்தமாக 3,185 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10,000/-முதல் அதிகபட்சமாக ரூ.25,000/- வரை நிறுவனங்கள் தேர்வானவர்களுக்கு வழங்கவுள்ளது.

  நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, துணை இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அருணகிரி, உதவி இயக்குநர்கள் பரமேஸ்வரி, செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், தி ஜிகே உலக பள்ளி மேலாண்மை இயக்குநர்சந்தோஷ் காந்தி, நகரமன்றத் தலைவர்கள் ஹரிணிதில்லை, சுஜாதா வினோத், முகமது அமீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணக்குமார், கல்லூரி முதல்வர் சீனிவாசன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, மகளிர் திட்டம், தமிழ்நாடு ஊரக/நர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

  Next Story
  ×