என் மலர்
ராணிப்பேட்டை
- கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
- ராணிப்பேட்டை நகர சபை கூட்டம் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகர மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நேற்று நடைபெற்றது.
துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 என ரூ.7000 கோடி நிதியையும் மற்றும் பட்ஜெட்டில் தமிழக மக்களின் அறிய பல பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி நேற்றைய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நேற்று நடந்த ராணிப்பேட்டை நகர மன்ற சாதாரணக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
பன்றி தொல்லைகள் அதிகமாக உள்ளது இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கவுன்சிலர்கள் வார்டுகளில் கொசு மருந்து தெளிப்பதில்லை.குடிநீர் பிரச்சினை உள்ளது.மின்விளக்குகள் அமைக்க வேண்டும.ஈமச்சடங்கு நிதி சரியாக வரவில்லை.மேற்கண்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்கள்.
மேலும் கவுன்சிலர்கள் பிரதான சாலைகள் நடுவே தடுப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் விபத்துகள் நடக்கின்றன. மேலும் வார்டுகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ராணிப்பேட்டை நகரில் எல்.இ.டி. மின்விளக்குகள் பிரகாசமாக எறிவது போல் கோயில் பள்ளிவாசல் தேவாலயம் சந்திப்புகள் இடங்களில் எல்.இ.டி. பல்புகளை அமைக்க வேண்டும். பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று பெய்த மழையில் கால்வாய் அடைப்பினால் அங்கு மழை நீர் அதிக அளவில் தேங்கியது.மேற்கண்ட கால்வாயை சீரமைக்க வேண்டும்.ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் சில விஷமிகள் ஆட்டு இறைச்சி மாட்டு இறைச்சி கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.அவ்வாறு கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதத்தோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டாட்சியர் அலுவலகம் ஒட்டியுள்ள வீடுகளில் பாம்பு தொல்லை அதிகளவில் உள்ளது. பாம்புகள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் 30 வார்டுகளில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என திமுக, காங்கிரஸ், விசிக, அதிமுக கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் இதற்கு பதில் அளித்து பேசிய நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன் என உறுதியளித்தார்.
- விவசாயிகள் மகிழ்ச்சி
- 2 நாட்களாக பெய்து வருகிறது
நெமிலி:
நெமிலி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று வரலாறு காணாத அளவில் எதிர்பாராத விதமாக ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் வியந்து பார்த்தனர். மேலும் இந்த ஆலங்கட்டி மழை பெய்யும் போது விவசாய நிலத்தில் வேலை செய்தவர்கள் கற்களை கொண்டு எறிவது போல உடம்பின் மீது ஆலங்கட்டி விழுந்ததாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது போன்ற பெரிய அளவிலான ஆலங்கட்டி மழை இதற்கு முன் பார்த்தது இல்லை என பெரும்பாலானோர் கூறினர். இந்த எதிர்பாராத மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- 2 நாட்கள் நடக்கிறது
- தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி தொடங்கி வைத்தார்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை முகாமில் அணு சக்தியின் கதிர்வீச்சு மூலம் பேரிடர் காலங்களில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்தும் இவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் கதிர்வீச்சின் தன்மைகள் குறித்தும்.
மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மூலம்தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
2-ம் நாளான பயிற்சி இன்று காலை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு உட்பட ஒரிசா விஜயவாடா இமாச்சலப் பிரதேஷ் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் செயல்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேசிய பேரிடர் மீட்பு படை உயர் அதிகாரி மொக்சென் ஷெகத்தி கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக மும்பை பாபா அணுசக்தி துறை விஞ்ஞானி டாக்டர் முரளி கலந்து கொண்டு ரேடியோலாஜிக்கல் நியூக்ளியர் கதிர்வீச்சின் தன்மைகளையும் அதன் பாதிப்பையும் அதை தடுக்கும் சிறப்பம்சங்களை திரையில் விளக்கி கூறினார்.
உள்ளரங்கில் இதற்கான அறிவுப்பூர்வமான பயிற்சியும் நாளை வெளிப்புற உடல் சம்பந்தமான செயல்முறை பயிற்சியும் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி மொக்சன் ஷெகத்தி கூறியதாவது:-
என்டிஆர் எப் புயல் பாதிப்பு பூமி அதிர்ச்சி போன்ற பல்வேறு இடர்பாடுகளில் இருந்து மக்களை காப்பாற்ற சிறப்பான பயிற்சியையும் மேற்கொண்டு அதில் சிறப்பாக செய்து வருகின்றனர் .
ஜி 20 மாநாட்டின் ஓர் அங்கமாக கதிர்வீச்சு மூலமாக ஏற்படும் பாதிப்பை எவ்வாறு சமாளிப்பது மக்களை எவ்வாறு காப்பாற்றுவது மேலும் அது தன்மையை தடுத்து நிறுத்துவதற்கான பயிற்சியை அளிப்பதற்காக பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மூலம் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்கான கருவிகள் ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு படையினரிடம் இருப்பதால் இந்த பயிற்சி மிக அவசியம் என்பதாலும் தற்போது இந்த பயிற்சி வேண்டும் என அவர் தெரிவித்தார்.
- பிரதோஷத்தை முன்னிட்டு நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் ஆலயத்தில் பிரதோஷம் முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால் தயிர் தேன் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து பட்டு வஸ்திரம் அணிவித்து, அருகம்புல் மாலை மலர் மாலை அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது.
இதில் 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள்.
- மாணவர்கள் ெரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு
- 9 இடங்களில் கியூ ஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது
அரக்கோணம்:
அரக்கோணம் ெரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் ெரயிலில் பயணிகள் செல்கின்றனர்.
இவர்கள் டிக்கெட் எடுப்பதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதால் ெரயில் டிக்கெட் எடுக்கும் செயலி 'கியூஆர் கோடு' வசதி ஏற்படுத்த ப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் முன்பதிவு டிக்கெட் தவிர்த்து சாதாரண ெரயில், விரைவு ெரயில், அதிவிரைவு ெரயில் நடைமேடை டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை பெற முடியும். அரக்கோணம் ெரயில் நிலையத்திலிருந்து 50 மீட்டர் தொலைவு வரை இந்த செயலியை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
ெரயில் நிலைய வளாகத்திற்குள் 9 இடங்களில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது.
செங்குட்டுவன் மற்றும் அப்துல் கலாம் சாரணர், மணிமேகலை மதர் தெரசா சாரணியர் இயக்கம் தென்னக ெரயில்வே மத்திய மாவட்டம் இணைந்து பயண சீட்டு செயலி வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.
செங்குட்டுவன் சாரணர் இயக்க குழு தலைவர் குமாரசாமி தலைமையில் அப்துல் கலாம், சாரணர் இயக்க குழு தலைவர் திலீப் குமார் முன்னிலையில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
பயண சீட்டு முதன்மை அலுவலர் காதர் ஷெரிப், ஸ்டேஷன் மாஸ்டர் சுபாஷ் குமார், ெரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் வின்சென்ட் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கியூ ஆர் கோடு குறித்து சாரண சாரணியர் இயக்க மாணவ- மாணவிகள் ெரயில் பயணிகளிடம் விளக்கிக் கூறினர்.
இந்நிகழ்ச்சியில் சந்திரசேகர், பிந்து புவனேஸ்வரி, ரம்யா, ஷர்வன் குமார், கஸ்தூரிபாய், ராம் தயால் போலி, கீர்த்தி வாசன், சுகன்யா, பிரியங்கா, சங்கீதா, மற்றும் சாரணர் சாரணியர் இயக்க மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு
- தேர்வு நேரங்களில் மின்சாரம் சீராக விநியோகிக்க வலியுறுத்தல்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நேற்று நள்ளிரவில் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
காலை 7 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் காலையில் எழுந்து படிக்கலாம் என்று நினைத்திருந்த அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்பொழுது பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 தேர்வு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பலத்த மழை காரணமாக நள்ளிரவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் காலை வரை வராததால் மாணவர்கள் காலையில் எழுந்து படிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினர். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் வசதி வாய்ப்பு இல்லாத ஒரு சில மாணவர்கள் காலையில் பள்ளி வளாகத்திற்கு வந்து தங்கள் படிப்பை மேற்கொண்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறும் பொழுது துண்டிக்கப்படும் மின்சாரம் உடனடியாக சரி செய்து அதை இயக்குவதற்கான வழிமுறை களை மின்சாரத்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் கால தாமதமாக செய்வதால் இன்று அரசு பொதுத் தேர்வு எழுதும் பிளஸ்-1 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எனவே தேர்வு நேரங்களில் மாணவர் நலன் கருதி மின்சார துறை பல்வேறு காரணங்களால் துண்டிக்கப்படும் மின்சாரத்தை சிறப்பு கவனம் செலுத்தி விரைவில் சரி செய்து இயக்குவதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
- சிறப்பு தீபாராதனை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள மரகதாம்பிகை உடனுறை ஆதி மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் ஆதி மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு, அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட துணைச் செயலாளர் சி.ஜி. ராமசாமி தலைமையில் நடந்தது.
நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.குணசேகரன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் க.சரவணன், சோளிங்கர் ஒன்றிய குழு உறுப்பினரும் மாவட்ட தலைவருமான அ.மா. கிருஷ்ணன் சிறப்புரையாற்றினர்.
அன்புமணி ராமதாஸ் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்கு வர இருப்பதால் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் கிளைகளிலும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து பெரிய அளவில் வரவேற்பை தர வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் மருதாலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு முட்டவாடி பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா, மகளிர் உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய பகுதி நேர ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, அரிசி, பருப்பு வழங்கினார். 6 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 46 லட்சத்து 85 ஆயிரம் கடன் உதவி வழங்கினார்.
அப்போது மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம் தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட விவசாய அணி வெங்கடேசன், தலைமை கழக பேச்சாளர் சீனிவாசன் மற்றும் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சோளிங்கர் அடுத்த கரிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட ரெண்டாடியிலும் புதிய பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நாகராஜ், ஒன்றிய குழு துணை பூங்கொடி ஆனந்தன், முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா அனைவரையும் வரவேற்றார்.
- உடல்நிலை சரியில்லாததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 50), கூலி தொழிலாளி. இவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது சமையலறை யில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண் டார்.
இதுகுறித்து அவரது மனைவி கமலாராணி ஆற் காடுடவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருவாய்த் துறையினர் சோதனையில் சிக்கியது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த அன்வர்திக்கான்பேட்டை பகுதி யில் ஏரி புறம்போக்கு இடத்தில் இருந்து மண் எடுத்து செங் கல் சூளைக்கு பயன்படுத்தி வருவதாக அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிற்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அந்த வழியாக மினி லாரியில் மண் கடத்தி வந்தவர்கள் அதிகாரிகளை கண்டதும் மினி லாரியை அங் கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் மினி லாரியை பறிமுதல் செய்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத் தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிறப்பு தீபாராதனை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து தங்க கேடயத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






