search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கதிர்வீச்சு, பேரிடரின் போது செயல்படுவது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி
    X

    கதிர்வீச்சு, பேரிடரின் போது செயல்படுவது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி

    • 2 நாட்கள் நடக்கிறது
    • தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி தொடங்கி வைத்தார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை முகாமில் அணு சக்தியின் கதிர்வீச்சு மூலம் பேரிடர் காலங்களில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்தும் இவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் கதிர்வீச்சின் தன்மைகள் குறித்தும்.

    மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மூலம்தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    2-ம் நாளான பயிற்சி இன்று காலை நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு உட்பட ஒரிசா விஜயவாடா இமாச்சலப் பிரதேஷ் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் செயல்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேசிய பேரிடர் மீட்பு படை உயர் அதிகாரி மொக்சென் ஷெகத்தி கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினராக மும்பை பாபா அணுசக்தி துறை விஞ்ஞானி டாக்டர் முரளி கலந்து கொண்டு ரேடியோலாஜிக்கல் நியூக்ளியர் கதிர்வீச்சின் தன்மைகளையும் அதன் பாதிப்பையும் அதை தடுக்கும் சிறப்பம்சங்களை திரையில் விளக்கி கூறினார்.

    உள்ளரங்கில் இதற்கான அறிவுப்பூர்வமான பயிற்சியும் நாளை வெளிப்புற உடல் சம்பந்தமான செயல்முறை பயிற்சியும் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி மொக்சன் ஷெகத்தி கூறியதாவது:-

    என்டிஆர் எப் புயல் பாதிப்பு பூமி அதிர்ச்சி போன்ற பல்வேறு இடர்பாடுகளில் இருந்து மக்களை காப்பாற்ற சிறப்பான பயிற்சியையும் மேற்கொண்டு அதில் சிறப்பாக செய்து வருகின்றனர் .

    ஜி 20 மாநாட்டின் ஓர் அங்கமாக கதிர்வீச்சு மூலமாக ஏற்படும் பாதிப்பை எவ்வாறு சமாளிப்பது மக்களை எவ்வாறு காப்பாற்றுவது மேலும் அது தன்மையை தடுத்து நிறுத்துவதற்கான பயிற்சியை அளிப்பதற்காக பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மூலம் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதற்கான கருவிகள் ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு படையினரிடம் இருப்பதால் இந்த பயிற்சி மிக அவசியம் என்பதாலும் தற்போது இந்த பயிற்சி வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×