நெமிலி பகுதியில் ஆலங்கட்டி மழை

விவசாயிகள் மகிழ்ச்சி 2 நாட்களாக பெய்து வருகிறது
நெமிலி பகுதியில் ஆலங்கட்டி மழை
Published on

நெமிலி:

நெமிலி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று வரலாறு காணாத அளவில் எதிர்பாராத விதமாக ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் வியந்து பார்த்தனர். மேலும் இந்த ஆலங்கட்டி மழை பெய்யும் போது விவசாய நிலத்தில் வேலை செய்தவர்கள் கற்களை கொண்டு எறிவது போல உடம்பின் மீது ஆலங்கட்டி விழுந்ததாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது போன்ற பெரிய அளவிலான ஆலங்கட்டி மழை இதற்கு முன் பார்த்தது இல்லை என பெரும்பாலானோர் கூறினர். இந்த எதிர்பாராத மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com