என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா வாலிபர்களின் மிரட்டலுக்கு பயந்து மூடப்பட்டிருந்த கடை இன்று மீண்டும் திறக்கப்பட்ட காட்சி.
கஞ்சா வாலிபர்களின் மிரட்டலுக்கு பயந்து மூடப்பட்ட கடை திறப்பு
- போலீசாரின் அறிவுரையை ஏற்று நடவடிக்கை
- 4 பேர் கைது
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலம் பஜார் வீதியில் தூத்துக்குடி சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். அவருடைய கடையில் கஞ்சா கும்பல் வந்து தகராறு ஈடுபட்டதாகவும், இதுகுறித்து தக்கோலம் போலீசாரிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த முத்துராமலிங்கம் கடையை மூடிவிட்டு "கஞ்சா போதையில் உலாவரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்பட்டது" என்ற நோட்டீசை கடையின் ஷட்டரில் ஒட்டி விட்டு தன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றார். இதனை தொடர்ந்து தக்கோலம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர். போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து முத்துராமலிங்கத்திற்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் ஆகவே மீண்டும் கடையை திறக்க கோரி அவரிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற முத்துராமலிங்கம் இன்று காலை கடையைத் திறந்து வழக்கம் போல தன் பணியை மேற்கொண்டார்.
இது குறித்து முத்துராமலிங்கம் கூறியதாவது:-
வியாபாரிகள் சங்கத்தின் கோரிக்கை ஏற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கஞ்சா கும்பலை கைது செய்வது, பாதுகாப்பு அளிப்பதாக உறுதியின் பேரில் கடை திறந்ததாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அனைத்து வியாபாரி சங்க தலைவர் ஆரோக்கியசாமி தக்கோலத்தில் தற்போது கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் போலீசார் தனிக் கவனம் செலுத்தி இதை முற்றிலும் களைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தக்கோலம் போலீசாரிடம் கேட்டபோது:-
தற்போது பழைய கஞ்சா குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளோம். முத்துராமலிங்க கடையில் தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறோம் என்றார்.






