என் மலர்

  நீங்கள் தேடியது "Women's Self Help Group"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
  • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவில் சேர்ந்து 3 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

  சேலம்:

  சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

  முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வரும் கல்வி ஆண்டு முதல் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

  சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தினைச் செயல்படுத்தும் பொருட்டு காலை உணவு தயாரிக்க கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி, அளவிலான முதன்மை குழு மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பின்வரும் நிபந்தனைகள் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவில் சேர்ந்து 3 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அதே ஊராட்சியில், பேரூராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே தொடக்கப் பள்ளியில் படிக்க வேண்டும். அக்குழந்தை அப்பள்ளியில் தொடக்கப் படிப்பு முடிந்து வேறு பள்ளிக்கு சென்று விட்டால் அச்சுய உதவிக்குழு உறுப்பினர் காலை உணவு தயாரிப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறு தகுதியான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார்.

  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்த பட்சம் 10 -ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். உணவு சமைப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். அதனை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானதாகும்.

  இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

  சமையல் செய்வதற்கு அனுபவம் தேவை என்பது இதில் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக ஆர்வம் மட்டுமே இருந்தால் போதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் நிபந்தனையில் வயது வரம்பும் இடம்பெறவில்லை. இதனால் இப்பணியில் சேர மகளிர் சுய உதவி குழுவினர் மத்தியில் கடும் போட்டி ஏற்படும் என தெரிகிறது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
  • பயன்பாட்டை ஒழித்து மீண்டும் மஞ்சபை பயன்பா ட்டிற்கு கொண்டு வருதல் குறித்து ஆலோசிக்க ப்பட்டது.

  விழுப்புரம்: 

  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சும் கணேசன் தலைமையில், செயல் அலுவலர் ஆனந்தன் முன்னிலையில் வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருடன் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

  திருவெண்ணைநல்லூர் கடைவீதியில் உள்ள கடைகள் மற்றும் பேரூராட்சி குடியிருப்பு பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்தல் குறித்து மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல், மேலும் வணிகர் சங்க நிர்வாகிகள் கடைவீதியில் உள்ள அனைத்து கடை களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வைத்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தல். மேலும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை ஒழித்து மீண்டும் மஞ்சபை பயன்பா ட்டிற்கு கொண்டு வருதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க ப்பட்டது.

  கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேரூராட்சி சார்பில் மஞ்ச ப்பை வழங்கப்பட்டது. வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவின் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இளநிலை உதவியாளர் பாலமுருகன் நன்றி கூறினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அமைச்சர் காந்தி வழங்கினார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  ராணிப்பேட்டை:

  ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி, 17 பயனாளிகள் மற்றும் 7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 9 ஆயிரம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார்.

  கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-

  முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் உள்ளாட்சிக்கு முக்கியத்துவம் அளித்து மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு வருகின்றார். மேலும் உள்ளாட்சிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டுமென அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

  உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் திட்டப்பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். பணிகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை தன்னிடம் தெரிவிக்கு மாறும் பின்னர் மாவட்ட கலெக்டரிடம் தெரியப்படுத்தி அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

  முதலமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கிட வேண்டும். அதற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சப்பை பையினை பயன்படுத்திட அறிவுருத்திட வேண்டும்.

  ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாட்டிலேயே முன்மாதிரியாக திகழ வேண்டும். மக்களுக்கான திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் தரத்தில் எந்த ஒரு சமரசமும் இருக்கக் கூடாது. தரமானதாக இருக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தங்களுக்கு பதவி கிடைத்திருக்கிறது என எண்ண வேண்டாம்.

  மக்கள் உங்களுக்கெல்லாம் ஒரு பொறுப்பினை வழங்கியுள்ளார்கள் என எண்ணி அதனை சரியான முறையில் பயன்படுத்தி மக்களுக்கு அரசின் திட்டப்பணிகளை நிறைவேற்றி, மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.

  முதலமைச்சர் மக்க ளுக்கு என்னவெல்லாம் செய்ய நினைக்கின்றாரோ அதனை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார்,
  • கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  வெள்ளகோவில்:

  வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த 103 மகளிர் சுய குழுக்களை சேர்ந்த ஆயிரத்து 31 நபர்களுக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்திற்கான கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மொத்தம் ரூ. 5 லட்சத்து 42 ஆயிரத்து 541 மதிப்பிலான 3 நபர்களுக்கு பேட்டரி வீல் சேர், 9 நபர்களுக்கு செல்போன், 15 நபர்களுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 27 நபர்களுக்கு வழங்கினார்.

  முன்னதாக வெள்ளகோவில் ஒன்றியம், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் சடையப்பா நகர் மற்றும் கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார்.

  இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசிமுத்துக்குமார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசி கே. ஆர்.முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,வருவாய்த்துறையினர், கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  ×