என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • மாநில போட்டிகளில் 300 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
    • இப்போட்டியானது இன்று முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பள்ளி கல்வித்துறையின் மூலம் மாநில அளவில் நடைபெற உள்ள கலை திருவிழாவில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது:-

    பள்ளிக் கல்வித்துறையின் மூலம் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவி களுக்கான பல்வேறு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற 300 மாணவ, மாணவிகள் மாநில அளவில் மதுரை, கோயம்புத்தூர், திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடை பெறுகின்ற கலைப்போட்டிகளில் பங்கேற்ப தற்காக செல்கின்றனர்.

    இப்போட்டியானது இன்று முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகின்றன. போட்டியில் பங்கேற்கின்ற மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளியில் இருந்து பயிற்சி ஆசிரியர்கள் அழைத்து செல்கின்றனர். இவர்கள் சென்று வர அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவில் பங்கேற்றுள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்கள் பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகள் செல்கின்ற பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பத்மகுமார், பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைப்பு அலுவலர் கர்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மாணவிகள் விடுதியில் காய்கறி தோட்டம் அமைத்தவர்களை கலெக்டர் பாராட்டினார்.
    • அனைத்து விடுதிகளிலும் காய்கறி தோட்டம் வளர்த்து பயன் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு சீர்மரபினர் மாணவிகள் கல்லூரி விடுதியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் மாணவிகள் விடுதிக்கு சென்று மாணவி களை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து விசாரித்தார். மேலும் அடிப்படை வசதி கள் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து மாணவிகள் விடுதி யின் வளாகத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் காய்கறி தோட்டம் அமைத்து கொடுக்கப்பட்டு அதை மாணவிகள் பரா மரிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு அதன் பயன்கள் குறித்து மாணவி களிடம் கேட்டறிந்து பாராட்டினார்.

    மேலும் மாணவிகள் காய்கறி தோட்டம் வளர்ப்ப தில் ஆர்வம் காட்ட வேண்டும். இதே போல் அனைத்து விடுதிகளிலும் காய்கறி தோட்டம் வளர்த்து பயன் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

    பின்னர் காய்கறி தோட்டத்தில் விளைந்த காய்கறி வகைகளை மாணவிகள் முன்னிலையில் பறித்து மதியம் உணவிற்கு பயன்படுத்த வழங்கினார். அனைத்து மாணவிகளையும் பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், தோட்ட கலைத்துறை இணை இயக்குநர் நாகராஜன், விடுதி காப்பாளர்கள் கிருஷ்ண வேணி, மணிமொழி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் ராகேஷ், புனிதா சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முடக்கப்பட்ட மதுரை யாதவர் கல்லூரியை மீட்டெடுப்போம் என மாநில பொது செயலாளர் பேசினார்.
    • இறுதியில் ராமநாதபுரம் யாதவ சங்க செயலாளர் செல்லத்துரை நன்றி கூறி னார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு யாதவ மகாசபையின் மாநில பொது செயலாளராக ராமநாதபுரம் வேலு மனோகரன் மகளிர் கல்லூரி தாளாளர் தொழிலதிபர் வேலு மனோகரன் பொறுப்பேற்றார். அவருக்கு பாராட்டு விழா ராமநாதபுரம் யாதவ சங்க திருமண மகாலில் நடந்தது. ராமநாதபுரம் யாதவ சங்க தலைவர் மணிமாதவன் தலைமை தாங்கினார். பாலமுருகன் வரவேற்றார்.

    முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், தாலுகா யாதவ சங்க தலைவர்கள் ராமு யாதவ் (பரமக்குடி), நாகலிங்கம் (முதுகுளத்தூர்), தில்லைமுத்து யாதவ் (ராமே சுவரம்), ராமு (திருவாடனை), வழக்கறிஞர் முனியசாமி, அன்பு பாலகிருஷ்ணன், ராமேசுவரம் தொழிலதிபர் சந்திரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநில புதிய பொது செயலாளர் வேலு மனோ கரனை வாழ்த்தி பேசினர். ராமநாதபுரம் தாலுகா யாதவ வர்த்தகர்கள் சங்க செயலாளர் ஜெயக்குமார், மூத்த வழக்கறிஞர் அன்புச் செழியன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    கூட்டத்தில் மாநில தலைவர் ராமச்சந்திரன் ஒப்புதலுடன் மாவட்டத்தில் யாதவ மகா சபை புதிய தலைவராக புத்தேந்தல் குரு பிரகலாதன், செயலாளராக முதுகுளத்தூர் கருப்பசாமி, பொருளாளராக பரமக்குடி கனகராஜ் ஆகியோர் நிய மிக்கப்படுவதாக தமிழ்நாடு யாதவ மகாசபையின் மாநில பொது செயலாளர் வேலு மனோகரன் அறிவித்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்க உள்ளோம். மக்கள் தொகையில் நாம் 3-வது இடத்தில் இருந்து வருகிறோம். நமக்குரிய உரிமைகளை பெறுவோம். மாநில, மாவட்ட அமைப்பை வலுப்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நமது கோரிக்கையை அரசி டம் இருந்து சுலபமாக பெற முடியும். முடக்கப்பட்ட மதுரை யாதவர் கல்லூரியை கள ஆய்வு மேற்கொண்டு மார்ச் மாதத்திற்குள் மீட்டெடுப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இறுதியில் ராமநாதபுரம் யாதவ சங்க செயலாளர் செல்லத்துரை நன்றி கூறினார்.

    • கீழக்கரை, உத்திரகோசமங்கை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    கீழக்கரை

    கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (27-ந்தேதி) மாதாந்திர பரா மரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    கீழக்கரை மற்றும் வள்ளல் சாலை, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, கோகுல்நகர், சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம்பஜார், சங்கு வெட்டி, தெரு இந்துபஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழைய மீன்மார்கெட், பைத்துமால், அலவாய்கரைவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம்.

    இடிந்தல்கல்புதிர், கிழக்கு தெரு, புதுகிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டாணி அப்பா தர்கா பகுதி, பெத்தரி தெரு, ஸ்ரீ நகர், 21 குச்சி, பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர் மற்றும் சின்ன மாயாகுளம் பீடர்க்கு உப்பட்ட பகுதிகளான 500 பிளாட்.

    மேல தெரு, வடக்கு தெரு, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, சின்ன மாயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மாயாகுளம் விவேகானந்தபுரம், உத்திரகோசமங்கை பீடர்க்கு உட்பட்ட பகுதிகளான பாளையரேந்தல், சின்ன பாளையரேந்தல், பணயங்காள், அணைகுடி, மோர்குளம், குளபதம், களரி, வேளானூர், எக்ககுடி, நல்லாங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.மேற்கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    • ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் நாளை மண்டல பூஜை நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் கடந்த 18-ந்தேதி மண்டல பூஜைக்கான கொடியேற்றம் நடந்தது. 10 நாட்கள் தினமும் காலை, மாலையில் சுவாமி நகர்வலம் கோவில் வளாகத்திற்குள் நடைபெற்று பின்னர் பூதபலி பூஜை நடந்தது.

    வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்ட ளையின் நிர்வாக அறங்கா வலரும், கோவில் தலைமை குருக்களுமான ஆர்.எஸ்.மோகன் கூறியதாவது:-

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் நடைபெறும் மண்டல பூஜையானது சபரிமலையில் நடைபெறுவது போன்றே ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நாளை (27-ந்தேதி) காலை 8 மணிக்கு மண்டல பூஜையன்று பேட்டை துள்ளல், ஆராட்டு விழா நடைபெறும்.

    அலங்காரம் செய்யப்பட்ட வல்லபை அய்யப்பன் உற்சவர் பஸ்ம குளத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து சென்று அங்கு உற்சவருக்கு 16 வகையான அபிஷே கதத்துடன் ஆராட்டு விழா நடைபெறும். சன்னி தானத்தின் முன்புறம் உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் கொடியிறக்கம் செய்யப்பட்டு, மூலவருக்கு 33 வகையான அபி ஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை, பஜனை நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 31-ந்தேதி காலை 6 மணி முதல் பகல் 1 மணிவரை இருமுடி கட்டுதல் நடைபெறுகிறது.

    இரவு 10 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். இரவு 12 மணிக்கு 2023ம் ஆண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை ரகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் நடைபெற உள்ள மண்டல பூஜை மகா அபிஷேகத்திற்கு, பல ஆண்டுகளாக ராம நாதபுரத்தில் இருந்து வேண்டுதல்களுடன் விரதம் இருந்து பாதயாத்திரையாக அய்யப்ப பஜனைப் பாடல்கள் பாடி, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிஷேகத்திற்கு நெய் கொண்டு வருவது வழக்கம்.

    அதே போல் இந்த ஆண்டும் ராமநாதபுரம் மல்லம்மாள் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக சரணகோசம் முழங்க அபிஷேக நெய் கொண்டு வந்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என விதைச்சான்று உதவி இயக்குநர் ஆலோசனை வழங்கினார்.
    • விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபும் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகவே விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பு வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விதைப்பண்ணை அமைப்ப தற்கு தேவையான ஆதார நிலை மற்றும் சான்றுநிலை நெல் விதைகளை தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    கோ 51, ஏடிடீ 45 போன்ற குறுகிய கால விதை ரகங்கள் மற்றும் டி.கே.எம். 13, என் .எல். ஆர். 34449, போன்ற மத்திய கால விதை ரகங்களை தேர்வு செய்யலாம். விதைகளை வாங்கும் போது காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும். விற்பனை ரசீது மற்றும் சான்றட்டைகள் ஆகியவற்றை விதைப்பு அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக விதைப்பண்ணைகளை பதிவு செய்திடல் வேண்டும்.

    விதைப்பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு விதைப்பு அறிக்கைக்கு பதிவுக்கட்டணம் ரூ.25, வயலாய்வு கட்டணம் ரூ.100, விதை பரிசோதனைக் கட்டணம் ரூ.80 செலுத்த வேண்டும்.

    விதைத்த 35-வது நாள் அல்லது பயிர் பூப்பதற்கு 15 நாட்கள் முன்பு இதில் எது முன்னதோ அதற்குள் பதிவு செய்ய வேண்டும். விதைப்பண்ணையில் இரு வேறு பகுதிகள் 50 மீட்டர்க ளுக்கு அதிக இடைவெளியில் இருந்தாலோ, விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்த விதை பண்ணைகள் விதைச் சான்று அதிகாரிகளால் உரிய காலங்களில் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு கல வன்கள் அகற்றப்பட்டு, பயிரின் வளர்ச்சி கண்காணிக்கப்படுவதால் தரமான விதை உற்பத்தி செய்யப்படுகிறது.

    இவ்வாறு கலவனற்ற, இனத்தூய்மை உள்ள விதைப்பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் விதைகளுக்கு கொள்முதல் மற்றும் விற்பனை மானியம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெல் விதைப்பண்ணை அமைத்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம்.

    இது தவிர சிறுதானி யங்களான குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, பயறுவகைகளான உளுந்து, பாசிப்பயறு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை, எள் ஆகிய ரகங்களில் விதைப்பண்ணை அமைக்க இருக்கும் விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ராமநாதபுரத்தில் ரோபோட்டிக் பொருட்காட்சியை காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டைன்மெண்ட் நடத்தும் மாபெரும் ரோபோட்டிக் பொருட்காட்சி நேற்று (25-ந்தேதி) முதல் 30 நாட்களுக்கு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன்னிலை வகித்தார். நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் செல்வராணி விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பொருட்காட்சியில் குழந்தைகளை மகிழ்விக்க பறவைகளின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாடி மகிழ வித, விதமான ராட்டினங்கள், ஜெயன்ட்வீல், கொலம்பஸ், டிஸ்கோ, ஹெலிகாப்டர், டிராகன் ராட்டினங்கள், ஜம்பிங் பலுான், யானை கார், பைக், படகு சவாரி, 3டி ஷோ, திகிலூட்டும் பேய் வீடு போன்ற பொழுது போக்கு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

    சாப்பிட்டு மகிழ வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள், குழந்தை களுக்கு தேவையான பொம்மை வகைகள், மகளிருக்கு தேவையான பேன்சி பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏராளமான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் செய்திருந்தார்.

    • ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அதன்பின் ராமேசுவரம் சென்ற அவர் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்த மாவட்ட பா.ஜ.க. தலைவர் கதிரவன் தலைமையில் உயர்நீதிமன்ற வக்கீலும், கட்சி பிரமுகருமான சண்முகநாதன் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

    குறிப்பாக கிராமங்கள் தோறும் சென்று பா.ஜ.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் மாவட்டத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டங்கள், தெரு முனை பிரசாரம் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளை வக்கீல் சண்முகநாதன் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ராமநாத புரம் மாவட்ட பா.ஜனதா சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை கட்சி மாவட்ட தலைவர் கதிரவன் தலைமையில் வக்கீல் எஸ்.சண்முகநாதன் ஏற்பாடுகள் செய்திருந்தார். இதற்காக பட்டணம் காத்தான் இ.சி.ஆர். சாலை அருகில் உள்ள பா.ஜனதா 100 அடி கொடிகம்பத்தின் அருகே வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த விளை யாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவை சேர்ந்த அமர் பிரசாந்த் ரெட்டி கலந்து கொண்டு வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    அதன்பின் ராமேசுவரம் சென்ற அவர் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அப்துல்கலாம் இல்லத்திற்கு சென்றார். அப்போது அப்துல்கலாமின் பேரன் சலீம் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. மண்டபம் ஒன்றிய தலைவர் விக்ராந்த், மண்ட பம் ஒன்றிய செயலாளர் இளசு என்ற இளையராஜா, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் சண்முகநாத சேதுபதி உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.=

    • வக்பு வாரிய சொத்துக்களை மீட்க கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • முதல்-அமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    கீழக்கரை

    கீழக்கரையில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை தனியார் சங்கத்தின் பெயரில் வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யக் கோரியும், போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றி கொடுத்த அப்போதைய வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வக்பு சொத்தை முறைகேடாக விற்பனை செய்த சங்க நிர்வாகிகள் மீது குற்றவியல் வழக்கு தொடரவும், முறைகேடான பத்திரப்பதிவு ஆவண எண் 324/2370 ஐ ரத்து செய்து அந்த இடத்தை மீண்டும் வக்பு வாரியத்தின் பெயரில் பட்டா வழங்க வேண்டியும் கையெழுத்து இயக்கம் நடந்தது.

    கீழக்கரை வெல்பர் அசோசியேஷன் தலைவர் சீனி முகம்மது, சாலைத்தெரு பேங்க் அப்துல் காதர், முகமது இப்ராஹிம் ஆகியோர் தலைமையில் காட்டு வாப்பா முன்னிலையில் நடத்தப்பட்டது.

    முதல்-அமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணைத் தலைவர் கீழை முகமது சிராஜுதீன் செய்தார்.

    • எம்.ஜி.ஆர். படத்துக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
    • முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம்.



    ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் முத்து முருகன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

     ராமநாதபுரம்

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமை யில் நகர் சார்பில் செயலாளர் பொறியாளர் பால் பாண்டியன் ஏற்பாட்டில் அரண்மனை முன்பு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து துறை துணைச் செயலாளர் ரத்தினம், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக் குமார், நகர அவை தலைவர் ராமமூர்த்தி, வட்ட செயலாளர் ராம சேது, சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சரவணகுமார் (தகவல் தொழில்நுட்ப பிரிவு), சேது பாலசிங்கம் (பேரவை), ஸ்டாலின் என்ற ஜெயசந்திரன் (இளை ஞரணி), செந்தில்குமார் (மாணவரணி), நகர் துணைச் செயலாளர் ஆரிப்ராஜா, இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்ட ஓ.பி.எஸ். அணி செயலாளர் தர்மர் வழிகாட்டுதலின்படி எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் ராமநாதபுரம் நகர செயலாளர் பாலசுப்பி ரமணியன் தலைமையில் நடந்தது.

    நகர் இளைஞர் பாசறை செயலாளர் பார்த்தசாரதி, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்து முருகன், கோட்டைசாமி, நிர்வாகிகள் முனிய சாமி, கோவிந்தராஜ், ராஜ்கு மார், செல்வம், சேகர், அறிவழகன், கணேசன், ஸ்ரீபாகன் மணிகண்டன், முத்துகிருஷ்ணன், அழகம்மாள், பிரியா, தொகுதி நிர்வாகி முத்துப் பாண்டி, மாவட்ட விவசாய பிரிவு மாரிமுத்து, மூத்த நிர்வாகி முத்துகிருஷ்ணன் உள்பட பலர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் முத்து முருகன் தலைமையில், ராமநாதபுரம் பாரதி நகரில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட அவைத் தலைவரும், ஒன்றிய முன்னாள் தலைவருமான ராஜேந் திரன், நாரணமங்கலம் ஊராட்சி செயலாளர் சுரேஷ், ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைச்சாமி, ராமநாத புரம் நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் கழுகூரணி பூபதி, புத்தேந்தல் கல்யாணி, காருகுடி முத்துராமலிங்கம், சுப்புத்தேவன் வலசை ஊராட்சி செயலாளர் சோம சுந்தரம், தூளிவலசை கிளை செயலாளர் திருமுருகன், சக்கரக்கோட்டை ஊராட்சி உறுப்பினர் நல்லதம்பி உள்பட பலர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • சிறந்த கிடேரி கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் காத்தாகுளம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா புயல்நாதன், கால்நடை உதவி இயக்குநர்கள் சிவக்குமார், நேருகுமார், கால்நடை மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் முனீஸ்வரி, வீரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் விஜயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 126 விவசாயிகள் பயனடைந்தனர். 153 மாடுகளுக்கும், 612 வெள்ளாடுகளுக்கும், 432 செம்மறியாடுகளுக்கும், 198கோழிகளுக்கும், 24 நாய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு சான்றிதழ்கள், சிறந்த கிடேரி கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

    • ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்தார்.
    • 21.1.2023 அன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருஉத்திர கோசமங்கை கிராமத்தில் உள்ள மங்கள நாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக இருக்கும். அதனை ஈடு செய்யும் பொருட்டு 21.1.2023 அன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களும் 21.1.2023 அன்று வழக்கம்போல் இயங்கும். மேலும் 6.1.2023 வெள்ளிக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்தி லுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×