search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோபோட்டிக் பொருட்காட்சி
    X

    ரோபோட்டிக் பொருட்காட்சியை காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ரோபோட்டிக் பொருட்காட்சி

    • ராமநாதபுரத்தில் ரோபோட்டிக் பொருட்காட்சியை காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டைன்மெண்ட் நடத்தும் மாபெரும் ரோபோட்டிக் பொருட்காட்சி நேற்று (25-ந்தேதி) முதல் 30 நாட்களுக்கு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன்னிலை வகித்தார். நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் செல்வராணி விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பொருட்காட்சியில் குழந்தைகளை மகிழ்விக்க பறவைகளின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாடி மகிழ வித, விதமான ராட்டினங்கள், ஜெயன்ட்வீல், கொலம்பஸ், டிஸ்கோ, ஹெலிகாப்டர், டிராகன் ராட்டினங்கள், ஜம்பிங் பலுான், யானை கார், பைக், படகு சவாரி, 3டி ஷோ, திகிலூட்டும் பேய் வீடு போன்ற பொழுது போக்கு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

    சாப்பிட்டு மகிழ வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள், குழந்தை களுக்கு தேவையான பொம்மை வகைகள், மகளிருக்கு தேவையான பேன்சி பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏராளமான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் செய்திருந்தார்.

    Next Story
    ×