கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. சிறந்த கிடேரி கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
Published on

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் காத்தாகுளம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா புயல்நாதன், கால்நடை உதவி இயக்குநர்கள் சிவக்குமார், நேருகுமார், கால்நடை மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் முனீஸ்வரி, வீரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் விஜயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் 126 விவசாயிகள் பயனடைந்தனர். 153 மாடுகளுக்கும், 612 வெள்ளாடுகளுக்கும், 432 செம்மறியாடுகளுக்கும், 198கோழிகளுக்கும், 24 நாய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு சான்றிதழ்கள், சிறந்த கிடேரி கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com