search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில போட்டிகளில் 300 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
    X

    கலை திருவிழாவில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழியனுப்பி வைத்தார்.

    மாநில போட்டிகளில் 300 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

    • மாநில போட்டிகளில் 300 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
    • இப்போட்டியானது இன்று முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பள்ளி கல்வித்துறையின் மூலம் மாநில அளவில் நடைபெற உள்ள கலை திருவிழாவில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது:-

    பள்ளிக் கல்வித்துறையின் மூலம் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவி களுக்கான பல்வேறு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற 300 மாணவ, மாணவிகள் மாநில அளவில் மதுரை, கோயம்புத்தூர், திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடை பெறுகின்ற கலைப்போட்டிகளில் பங்கேற்ப தற்காக செல்கின்றனர்.

    இப்போட்டியானது இன்று முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகின்றன. போட்டியில் பங்கேற்கின்ற மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளியில் இருந்து பயிற்சி ஆசிரியர்கள் அழைத்து செல்கின்றனர். இவர்கள் சென்று வர அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவில் பங்கேற்றுள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்கள் பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகள் செல்கின்ற பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பத்மகுமார், பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைப்பு அலுவலர் கர்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×