என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டையில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- பேரணியை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட குடும்ப நல அமைப்பின்சார்பில் உலக மக்கள்தொகை தினத்தினை முன்னிட்டு செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட கலெக்டர்ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணியானது பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை வழியாக சென்று மீண்டும் பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது.
முன்னதாக அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் உலக மக்கள் தொகை நாள் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரி சு மற்றும் சான்றிதழ்களையும், மாவட்ட குடும்ப நலத்துறையில் 20 வருடங்கள் விபத்தின்றி வாகனங்கள் இயக்கியமைக்காக தமிழக அரசால் ஊர்தி ஓட்டுநர்கள் எஸ்.செந்தில்குமார், தெ.சிங்காரவேலு ஆகியோர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிக்ழ்ச்சியில் இணைஇயக்குனர் இரவி, மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜ்மோகன், துணை இயக்குநர்கள்கோமதி, ராம்கணேஷ், சிவகாமி சிவசங்கர், மக்கள் கல்வி தகவல் அலுவலர் சேகர் , வட்டாட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது
- நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கேட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன.
புதுக்கோட்டை,
நகர்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சியையும் இணைக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்சங்கமும், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கமும் இணைந்து மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இதற்காக புதுக்கோட்டை சிறைச்சாலை ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்ட அவர்கள் கலெக்டர்அலுவலகம் வந்தடைந்தனர். இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோ கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் புதுக்கோட்டை நகரத் தலைவர்நிரஞ்சனாதேவி தலைமை வகித்தார்.
மாதர்சங்க மாநில செயலாளர்பொன்னுத்தாய், விவசாயத் தொழிலாளர்சங்க மாநில செயலாளர்சங்கர்ஆகியோர்சிற ப்புரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி விவசாயத் தொழிலாளர்சங்க மாவட்டச் செயலாளர்சலோமி, மாநிலக்குழு உறுப்பினர் சண்முகம், மாதர்சங்க மாவட்டச் செயலாளர்சுசிலா, தலைவர் பாண்டிசெல்வி, விதொச மாவட்ட துணைச் செயலாளர்சித்திரைவேல் மற்றும் மாதர்சங்க நிர்வாகிகள் காயத்ரி, பரமேஸ்வரி, சித்ரா, புவனேஸ்வரி, மகேஸ்வரி உள்ளிட்டோர்பேசினர். மாதர்சங்க நகர்செயலாளர் முத்துமாரி நன்றி கூறினார். போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேலுவிடம் நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கேட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன.
- அறந்தாங்கி மணமேல்குடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது
- வீரன் அழகு முத்துகோன் குருபூஜையை முன்னிட்டு நடைபெற்றது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மணமேல்குடியில் ஆண்டுதோறும் வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம் இந்தாண்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரிய மாடு பிரிவில் 11 ஜோடி மாடுகளும், நடு மாடு பிரிவில் 29 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். பந்தயம் நடைபெற்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- புதுக்கோட்டையில் இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 9 பேர் கும்பல் கைது செய்யபட்டனர்
- பணம், செல்போன்கள் பறிமுதல் செய்தனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகர் பகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பாலியல் தொழில் அதிகரித்துள்ள தாகவும், வெளி மாநில ங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடு த்து வதாகவும் புதுக்கோ ட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்துள்ளன.இதன் அடிப்படையில் இது போன்ற சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க எஸ்.பி. வந்திதா பாண்டே உத்தரவிட்டதன் அடிப்படையில் இரு வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்த ப்பட்டது.
புதுக்கோட்டை நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரியார் நகரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டதில் வேலூர் காட்பாடியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அனிதா, நந்தினி, அகஸ்தீஸ்வரன், பாலமுருகன், ரவி, கண்ணன் ஆகியோர் விப ச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதில் அகஸ்தீஸ்வரன் (வயது21), பாலமுருகன் (27) ஆகியோர் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இவர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தூது விட பயன்படுத்திய நவீன செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ரொக்க பணம் ரூ.4,240 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் சுப்பு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சோதனை மேற்கொண்டதில் கர்நாடக மாநிலம் பெங்களூர் தேனி மாவட்டம் போடி ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாலதி (40), ரவி( 52), முகமது(50) பேராவூரணியைச் சேர்ந்த கணபதி (33), ஆலங்குடியைச் சேர்ந்த வேலாயுதம் (46), திருமயத்தைச் சேர்ந்த ராமச்சந்திர (47), சேலத்தைச் சேர்ந்த சபரிநாதன் (40) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ரூ. 4680 ரொக்க பணம் 3 இரு சக்கர வாகனங்கள் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் விபச்சார கும்பல்கள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீட்கப்பட்ட அழகிகள் மற்றும் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- ஆலங்குடி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து செம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தெற்குப்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சுசிலா (வயது 39). இவர்களுக்கு சுகிலன் (14), தரண்யாஸ்ரீ (11) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அய்யப்பன் தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சுசிலா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுசீலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுக்கோட்டை:
ஆதனக்கோட்டை அருகே குப்பையன்பட்டி கிராமத்ைத சேர்ந்தவர் சின்னையா (வயது 70). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து மர்ம நபர் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சின்னையா ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சின்னையா வீட்டில் திருட முயன்றது ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த ரெங்கசாமி மகன் அரசு (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அரசுவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடக்குகிறது.
- குரூப்-1 மற்றும் குரூப்-2 ஆகிய போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்டு) வெளியிடப்பட உள்ளது.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2023-ம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலின்படி குரூப்-1 மற்றும் குரூப்-2 ஆகிய போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்டு) வெளியிடப்பட உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 மற்றும் குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களை கொண்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி-வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும். எனவே போட்டித்தேர்வர்கள் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் சேருவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரிலோ அல்லது 043322-222287 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- சில ஜோடிகளின் சேட்டைகள் பக்தர்கள் மனதை பெரிதும் புண்படுத்துகிறது.
- மலைப்பகுதிக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்திருத்தலத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கிறார்கள். இயற்கை எழில் சூழ்ந்த இந்த மலைக்கோவிலில்
தோகை விரித்தாடும் வண்ண மயில்களின் நடமாட்டம் பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் அடர்ந்த வனப்பகுதி, வித்தியாசமான பாறைகள் குழந்தைகளை பெரிதும் கவர்ந்துள்ளது. இதனால் உள்ளூர் பக்தர்கள் குடும்ப சகிதம் மலைக்கோவிலுக்கு இயற்கை காட்சிகளை ரசித்த வண்ணம் மலையேறி முருகப்பெருமானை தரிசிக்கின்றனர். இவ்வாறான சூழலில் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் அருவருக்கத்தக்க சம்பவங்கள் நாளும் நடந்தேறுவது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது.
சமீப காலமாக உள்ளூர் மற்றும் வெளியூர் காதல் ஜோடிகளின் வரத்து அதிகரித்துள்ளது. திருச்சி, திண்டுக்கல், மதுரை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய காதல் ஜோடிகள் மணிக்கணக்கில் அங்குள்ள பாறை இடுக்குகளில் அமர்ந்து கடலை போடுகிறார்கள். மேலும் சில ஜோடிகளின் சேட்டைகள் பக்தர்கள் மனதை பெரிதும் புண்படுத்துகிறது.இதனைக் கண்டு பக்தர்கள் முகம் சுளிக்கிறார்கள். ஆகவே அத்து மீறும் காதல் ஜோடிகளை மலை அடிவாரத்திலேயே அடையாளம் கண்டு மலைப்பகுதிக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, எங்கள் காவல் நிலையத்தில் போதிய அளவுக்கு போலீசார் இல்லை. சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற வழக்குகளை கையாள்வதற்கு கூட நேரம் போதுமானதாக இல்லை. பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தால் நிரந்தரமாக மலைக்கோவிலில் காவல்துறையினரை கண்காணிப்பில் ஈடுபடுத்த இயலவில்லை என்றனர்.
எனவே மாவட்ட காவல்துறை மேற்கண்ட பிரச்சனையின் அதி தீவிரத்தை உணர்ந்து விராலிமலை காவல் நிலையத்திற்கு போதிய காவலர்களை பணியமர்த்த வேண்டும் அதோடு பொது மக்கள் அதிகம் கூடும் முக்கிய சாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
- கந்தர்வகோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கந்தர்வகோட்டை கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அங்கன்வாடிகளை இணைப்பது மற்றும் மூடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், பதவி உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டார சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- கீரமங்கலம் பகுதியில் எலுமிச்சம்பழம் ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, அணவயல், பனங்குளம், குளமங்கலம், பேற்பனைக்காடு, நெய்வத்தளி, பெரியாளூர், பாண்டிக்குடி உள்பட கீரமங்கலத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 10 வருடங்களாக தென்னை, பலா உள்ளிட்ட தோப்புகளில் ஊடுபயிராக எலுமிச்சை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 5 டன் முதல் 10 டன் வரை உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மதுரை, கோயம்புத்தூர், கேரளா உள்பட பல பெரு நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
கீரமங்கலம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் கீரமங்கலம், கொத்தமங்கலம், பனங்குளம், கைகாட்டி, மாங்காடு பூச்சிகடை, மறமடக்கி உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள காய்கனி கமிஷன் கடைகள் மூலமாகவும், தனியாகவும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் அங்கு குளிர்பான கடைகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ ரூ.20-க்கும் ரூ.10-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. சில நாட்களாக ரூ.10-க்கும் கீழே குறைந்தது. இந்நிலையில், நேற்று ஒரு கிலோ ரூ.7-க்கும் ரூ.5-க்கும் கொள்முதல் செய்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது குளிர் பானங்களின் விற்பனை குறைந்துள்ளதால் கடந்த சில மாதங்களாக படிப்படியாக விலை குறைந்து கிலோ ரூ.10-க்கும் கீழே விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவாக விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
இதனால் தோட்டங்களில் பழங்கள் சேகரிக்கும் கூலிக்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை என்றனர். எலுமிச்சம்பழம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கூறுகையில், கீரமங்கலம் சுற்றியுள்ள விவசாயிகள் கொண்டு வரும் எலுமிச்சம்பழங்களை அன்றாடம் வெளிச்சந்தை விலையை வைத்தே கொள்முதல் செய்கிறோம். கடந்த சில நாட்களாக கொள்முதல் விலையைவிட வெளியூர்களில் விற்பனை விலை குறைவதால் பலத்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆனாலும் விவசாயிகளிடம் கொள்முதலை நிறுத்தாமல் வாங்கி வருகிறோம் என்றனர்.
- வீட்டின் முன்பு நின்று கொண்டு விஜயராகவன் என்னை ஆபாச வார்த்தையால் வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டினார்.
- போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 47). என்ஜினீயரான இவர், சென்னையில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அவரது ஓழுங்கினத்தால் அந்நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கியது. அதன் பின்னர் ஊருக்கு வந்து விட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள். 2 பேரும் கருத்து வேறுபாட்டால் விஜயராகவனை பிரிந்து சென்றனர்.
பின்னர் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று மதியம் அவரது வீட்டின் அருேக கழுத்து மற்றும் வயிற்று பகுதி அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் விஜயராகவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
இதில் கொலை குறித்து உடனடியாக துப்பு துலங்கியது.
விஜயராகவனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சோமசுந்தரம் (60) என்பவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர், விஜயராகவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதில் நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம். அடிக்கடி இரண்டு பேரும் சேர்ந்து மது அருந்துவோம். வழக்கம் போல் நேற்று மதியம் என் வீட்டின் அருகில் அமர்ந்து இருவரும் மது அருந்தினோம். அப்போது எங்களுக்குள் திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றோம். இந்நிலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டு விஜயராகவன் என்னை ஆபாச வார்த்தையால் வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டினார். நான் அவரை எச்சரித்தேன். ஆனால் அவர் ஆபாச அர்ச்சனையை அவர் விட வில்லை. இதில் பொறுமை இழந்த நான்
கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பிச் சென்றேன். இதில் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளார். போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- புதுக்கோட்டையில் காய்கறி வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சேங்கைதோப்பு பகுதியை சோ்ந்தவர் சுகுமாறன் (வயது 50). இவர் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தற்கொலை செய்த சுகுமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






