என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி
    X

    தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி

    • கந்தர்வகோட்டையில்தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
    • மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை தீயணைப்பு துறை சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது, முதலுதவி மற்றும் காயம் அடைந்த வர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் அறிவழகன் தலைமையில் காவலர்கள் செய்து வருகின்றனர்.பயிற்சியின் போது பள்ளி கல்லூரி மாணவர்களை பயிற்சியில் ஈடுபடுத்தி அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி பேரிடர் காலங்களில் தங்களை காத்துக் கொள்வது மற்றும் மற்றவர்களுக்கு உதவுவது போன்ற பயிற்சிகளை செய்து காண்பித்தனர்.

    Next Story
    ×