என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை கம்பன் கழக பெருவிழா
- கம்பன் கழக பெருவிழாவில் ஐகோர்ட் நீதிபதிகள் நூல்களை வெளியிட்டு பேசினர்
- கம்பன் கழக தலைவர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கம்பன் கழக பெருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் அம்சவேணி தயாரித்து, புதுச்சேரி ரவி குணவதி மைந்தன் எழுத்து இயக்கத்தில் தயாரான கவிச்சக்கரவர்த்தி கம்பர் திரைப்படம் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து பல்பணி அரங்கம் நடைபெற்றது. இதில் இலக்கிய மாமணி விருது பெற்ற புதுகை தென்றல் ஆசிரியர் தர்மராஜன், கம்பன் பணிவள்ளல் விருது பெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி, தங்கமாளிகை உரிமையாளர் சோம.நடராஜன் மற்றும் முத்து மீனாட்சி மருத்துவமனை டாக்டர்.பெரியசாமி, கண் தான ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினர். நிலாவைப்பழனியப்பன் உள்ளிட்டவர்கள் எழுதிய நூல்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரங்க மகாதேவன், சுரேஷ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் தலைமை தாங்கி பேசுகையில், கம்பனின் படைப்புகள் உலகில் தத்துவங்களை மிஞ்சும் வகையில் இருந்து வருகிறது. உலகில் உன்னதமான படைப்பாக கம்பராமாயணம் இருந்து வருகிறது. இயல், இசை, நாடகம், மானிடம் வாழ்க்கை முறை என பலவற்றை உணர்த்தியுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழி காப்பியங்கள் வாழ்வியலை உலகிற்கு காட்டியது. கம்பனின் படைப்புகள் தமிழில் தனித்தன்மையுடன் இருந்து வருகிறது. வாழ்வில் நல்லதை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கம்பனின் காவியங்கள் உயர்த்தியுள்ளது, என்றனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலை வகித்து பேசுகையில், கம்பனின் எழுத்துகள் புதிய பரிமானத்தை தந்து கொண்டிருக்கிறது. கம்பனின் ஆரன்ய காண்டத்தை படித்த போது புதிய வினாக்கள் தோன்றுகிறது. காவியங்கள் அனைத்தும் இன்று வரை படித்து கொண்டே இருக்கலாம் என்றார். அதை தொடர்ந்து உள்ளத்தனையது உயர்வு என்ற பொருளில் இலங்கை ஜெயராஜ் பேசினார்.விழா ஏற்பாடுகளை கம்பன் கழகத் தலைவர் ச. ராமச்சந்திரன், செயலர் ரா. சம்பத்குமார், மாவட்ட செயலாளர் அறிவியல் இயக்கம் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்ட அறிவியல் இயக்கத்தலைவர் வீரமுத்து , செயலாளர் முத்துகுமார், மணவாளன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், டெல்லி தமிழ் சங்கம் பெருமாள், பரணி, முன்னாள் எம்எல்ஏ சுப்ராம், வழக்கறிஞர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






