என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கான கூட்டம் நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் மெர்சி தலைமையில் ஆலோசனை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில், பத்தாவது செயற்குழு கூட்டம், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.மாவட்டச் செயல் அலுவலர் மற்றும் செயல் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்ய ப்பட்டது மற்றும் புதிய அலுவலர்கள் பணியில் சேர்ந்த விவரங்கள் குறித்தும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கான உள் தணிக்கை மற்றும் வெளித் தணிக்கை நடைபெ ற்றதற்கான ஒப்புதல் குறித்தும், திட்டத்தின் மூலம் புதிதாக துவங்கப்பட்டஃ ஏற்கனவே செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன ங்களுக்கு நிதி விடுவித்த விபரம் தெரிவித்தல் குறித்தும் கலந்தாலோசனை நடைபெற்றது இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் செல்வம், தோட்டக்கலை துணை இயக்குநர் குருமணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- புதுக்கோட்டையில் கம்பன் கழக 48-வது ஆண்டு விழாவிற்கான தொடக்கவிழா நடைபெற்றது.
- அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாண முன்னாள் வெளியுறவுத்துறை துணை செயலர் நடராஜன் பங்கேற்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் 48 -ஆவது ஆண்டு கம்பன் விழாவின், தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு, அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாண முன்னாள் வெளியுறவுத்துறை துணை செயலர்ராஜன் கே. நடராஜன் தலைமை வகித்தார். விழாவில் அவர் பேசும்போது, 18 -ஆம் நூற்றாண்டிலேயே என்றைக்கும் மனித குலத்துக்குத் தேவையான முத்தான கருத்துகளைத் தொகுத்து ராமாயணத்தைப் படைத்திருக்கிறார். கம்பன் ராமாயணத்தை ஓர் இலக்கியமாக மட்டுமே படைக்கவில்லை. மாறாக,மக்களின் வாழ்வியலுக்கான காவியமாக ராமாயணத்தைப் படைத்திருக்கிறார். ராமாயணத்தை அனைவரும் வாசிக்க வேண்டும். உலகெங்கும் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
புதுச்சேரி கம்பன் கழகச் செயலரும் முன்னாள் பேரவைத் தலைவருமான வே. பொ.சிவ க்கொழுந்து பேசும்போது, உலகெங்கும் கம்பன் விழாக்கள் ஏதோ சம்பிராதயமாகவோ, மகிழ்ச்சிக்காகவோ நடத்தப்படுவதில்லை. சான்றோர்களை மரியாதையாக நடத்தும் பாங்கு எதுவும் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை. இன்றைய இளைஞர்கள் எதை நோக்கிச் செல்கிறார்கள் எனத் தெரியவில்லை. அறிவியலை அறிந்திருக்கிறார்கள்,ஆனால்,அறிவால் நிறைந்திருக்கிறார்களா என்றால் இல்லை. இதனை மாற்றுவதற்காகத்தான் கம்பன் விழாக்கள் உலகெங்கும் நடத்தப்பட்டு வருகின்றன என்றார் . கள்ளிப்பட்டி கம்பன் கழகத் தலைவர் கா.கு.கார்த்திகேயன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ஜி.ஏ. ராஜ்மோகன்,டீம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களை கம்பன் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். இதைத்தொ டர்ந்து 'கம்பன் யார்?' என்ற தலைப்பில் நடைபெற்ற சுழலும் சொல்லரங்குக்கு இலங்கை ஜெயராஜ் தலைமை வகித்தார். 'கம்பன் மனிதனே' என்ற தலைப்பில் பே.சே. சுந்தரம்,'கவிஞனே' என்ற தலைப்பில் கு. பாஸ்கர்,'சித்தனே' என்ற தலைப்பில் ரா. சம்பத்குமார் ஆகியோரும் பேசினர்.
- அமலாக்கத்துறையினர் வணிகர்களை சோதிக்க அனுமதிக்க கூடாது என்று விக்கிரம ராஜா கூறி உள்ளார்
- புதுக்கோட்டையில் பேக்கரி திறந்து வைத்தபின்னர் பேட்டி
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் மஹராஜா பேக்கரியின் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி வைக்க வருகை தந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரம ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;-வணிகர்களை அமலாக்கத்துறை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான முடிவு எடுக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகிறது.கொள்ளையடி ப்பவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தான் அதனை பயன்படுத்த வேண்டுமே தவிர வியாபாரிகள் மீது அந்த துறையை பயன்படுத்தினால் கார்ப்ப ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படு வதாக ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடும். ஆகவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாக சந்தித்து எக்காரணத்தைக் கொ ண்டும் அமலாக்கத்துறை என்பது வணிகர்கள் மத்தியில் வந்து விடக்கூடாது என வலியுறுத்த இருக்கி ன்றோம்.இதற்காக நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.தக்காளி விலை உயர்வுக்கு வியாபாரிகள் தான் காரணம் என்று பொ துமக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தக்காளி விலை போகவில்லை என்றால் அதனை கீழே கொட்டுவது வாடிக்கையாக நடக்கிறது.ஆகவே நெல் கொள்முதல் செய்வதை போன்று தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும். தக்காளி பொடியாக மாற்றி அதனை கொடுத்தாலும் நாங்கள் விற்க தயார். நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளி ப்பதாக கூறி விட்டு நுழைந்த பின்னர் யார் யாருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்பதை அரசு சோதிப்பது கிடையாது.தமிழ்நாட்டில் 5சதவீத வேலைவாய்ப்பை கூட அவர்கள் வழங்கவில்லை. ஆனால் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, பேக்கரி மஹராஜா உரிமையாளர் அருண் சின்னப்பா, புதுக்கோட்டை தலைவர் சாகுல் ஹமீது மற்றும் பலர் இருந்தனர்.
- புதுக்கோட்டை-விராலிமலையில் ரூ.34.64 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப மைய புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டது
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மற்றும் விராலிமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், தொழில் 4.0 திட்டத்தின் கீழ், டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து, ரூ.34.64 கோடி மதிப்பீட்டில் எந்திரங்கள், தளவாடங்களுடன் கூடிய அதிநவீன தொழில்நுட்ப மைய புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் மெர்சி ரம்யா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, உயர் தொழில்நுட்ப எந்திரங்களை பார்வையிட்டார். இந்த அதிநவீன தொழில்நுட்ப மையத்தில், மேனுபாக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் டெக்னீசியன் ஆகிய ஒரு வருட தொழிற்பிரிவுகளும், அட்வான்ஸ் சி.என்.சி. மெஷினிங் டெக்னீசியன், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிகிள் ஆகிய 2 வருட தொழிற்பிரிவுகளும், ஐ.ஓ.டி, பிராசஸ் கண்ட்ரோல், ப்ராடக்ட் டிசைன், ஆட்டோ எலக்ட்ரிக் மெயின்டனன்ஸ், அட்வான்ஸ்டு பெயிண்டிங் போன்ற 23 தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது. இதுநாள் வரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், அடிப்படை தொழிற்பிரிவுகளில் மட்டுமே பயிற்சி பெற்று வந்த பயிற்சியாளர்கள் இனிவரும் காலங்களில் கூடுதலாக மேம்படுத்தப்பட்ட திறன் பயிற்சி பெறும் வகையில், இந்த அதிநவீன தொழில்நுட்ப மையம் மிகவும் பயனுள்ளதாக அமையும். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. டாக்டர் வை.முத்துராஜா, ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, நகர்மன்றத் தலைவர்திலகவதி செந்தில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற துணைத்தலை வர்லியாகத்அலி, மாவட்ட கருவூல அலுவலர் ராஜலக்ஷ்மி, செயற் பொறியாளர் வெ.சுகுமாரன், உதவி செயற்பொறியாளா; சிந்தனைசெல்வி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பெ.வேல்முருகன், உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சு.ராமர், புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்அ.குப்புராஜ், உதவி பொறியாளர்பாஸ்கர், வட்டாட்சியர்விஜயலட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்திற்கு பகுதி நேர அங்காடி - பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது
- போராட்டம் எதிரொலி நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையை அடுத்த செம்பாட்டூர் பகுதிக்கு பகுதிநேர அங்காடி, பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் சி.ராஜா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி, துணைச் செயலாளர் எஸ்.பெருமாள் ஆகியோர் உரையாற்றினார். போராட்டத்தை ஆதரித்து சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர் கி.ஜெயபாலன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் எம்.மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.சுமார் ஒரு மணிநேரமாக நீடித்த போராட்டத்தை அடுத்து புதுக்கோட்டை வட்டாட்சியர் எஸ்.விஜயலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பழனிவேல், ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தா பரமசிவம் உள்ளிட்டோர் சங்கத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்திற்கு விரைவாக பகுதிநேர அங்காடி திறப்பது, வரும் திங்கள் கிழமை முதல் செம்பாட்டூர் வழியாக தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்திற்கு காலையும், மாலையும் அரசு நகரப் பேருந்து இயக்குவது, செம்பாட்டூர் சிவன்கோவில் அருகில் உள்ள பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டிக்குப் பதிலாக புதிய நீர்த்தேக்கத்தொட்டி அமைப்பது, குடிநீர்த் தேவைக்காக புதிய ஆழ்துளைக்கிணறு அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
- நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.
- தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சத்திய மூர்த்தி நகரில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;-
வணிகர்களை அமலாக்கத்துறை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான முடிவு எடுக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகிறது.
கொள்ளையடிப்பவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தான் அதனை பயன்படுத்த வேண்டுமே தவிர வியாபாரிகள் மீது அந்த துறையை பயன்படுத்தினால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும். ஆகவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாக சந்தித்து எக்காரணத்தைக் கொண்டும் அமலாக்கத்துறை என்பது வணிகர்கள் மத்தியில் வந்து விடக்கூடாது என வலியுறுத்த இருக்கின்றோம்.
இதற்காக நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.
தக்காளி விலை உயர்வுக்கு வியாபாரிகள் தான் காரணம் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தக்காளி விலை போகவில்லை என்றால் அதனை கீழே கொட்டுவது வாடிக்கையாக நடக்கிறது.
ஆகவே நெல் கொள்முதல் செய்வதை போன்று தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும். தக்காளி பொடியாக மாற்றி அதனை கொடுத்தாலும் நாங்கள் விற்க தயார். நாங்கள் தேர்தலில் நிற்கமாட்டோம்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறி விட்டு நுழைந்த பின்னர் யார் யாருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்பதை அரசு சோதிப்பது கிடையாது. தமிழ்நாட்டில் 5சதவீத வேலைவாய்ப்பை கூட அவர்கள் வழங்கவில்லை. ஆனால் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, அருண் சின்னப்பா, சாகுல் ஹமீது மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- அன்னவாசல், காரையூர், குன்றாண்டார் கோவில் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யபடுகிறது
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது
புதுக்கோட்டை,
அன்னவாசல், அண்ணாபண்ணை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அன்னவாசல் பேரூராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி, வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலுர், காரசூராம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஆலம்பட்டி, நல்லூர், அரசமலை, எம்.உசிலம்பட்டி, சடையம்பட்டி, ஒலியமங்களம், காயாம்பட்டி, படுதனிப்பட்டி, நல்லூர், அரசமலை மேலத்தானியம், காரையூர் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று பொன்னமராவதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
அம்மாசத்திரம், குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கீரனூர் பேரூராட்சி பகுதிகள், பரந்தாமன் நகர், கீழ காந்திநகர், மேல காந்திநகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமை நகர், அழகு நகர், குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கதம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
- திருவரங்குளம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா தொடங்கியது
- வருகின்ற 21-ந் தேதி தேேராட்டம் நடைபெறும்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் சமேத அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மனை எழுந்தருள செய்தனர். இதையடுத்து அம்பாளுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்தில் காமதேனு படம் பொறித்த வெண்கொடியை சிவாச்சாரியார்கள் மேள தாளம், மந்திரம் முழங்க, பக்தர்கள் சிவ, சிவ... ஹர, ஹர... கோஷத்துடன் கொடியேற்றப்பட்டு தீபாரானை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் கொடி மரத்தில் காமதேனு படம் பொறித்த வெண்கொடியை சிவாச்சாரியார்கள் மேள தாளம், மந்திரம் முழங்க, பக்தர்கள் சிவ, சிவ... ஹர, ஹர... கோஷத்துடன் கொடியேற்றப்பட்டு தீபாரானை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் மேற்பார்வையாளர் மற்றும் மண்டகப்படிதாரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள், கோவில் பணியாளர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது.
- பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மவுண்ட் சீயோன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
- நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்களும், கோப்பைகளை வழங்கப்பட்டது
புதுக்கோட்டை,
மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளியில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைவர் டாக்டர்.ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வர் டாக்டர்.ஜலஜாகுமாரி, மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் குமரேசன் மற்றும் கிருபா ஜெபராஜ் ஆகியோர் முன்னிலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (மதுவிலக்குமற்றும் அமலாக்கத்துறை) டாக்டர்.வருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுத்தேர்வில் மாநிலஅளவில் மூன்றாமிடமும், மாவட்டஅளவில் முதலிடம் பெற்ற மவுண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி மாணவி, சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வில் மாவட்டஅளவில் முதல் ஆறு இடங்களைப் பிடித்த மவுண்ட் சீயோன் சி.பி.எஸ்.இ பள்ளிமாணவன, மாணவிகளுக்கும், பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்களும், கோப்பைகளை வழங்கி உரையாற்றினார். தொடர்ந்து பள்ளியின் முதல்வர் நன்றி கூறினார்.
- ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது
- பெற்றோர்களுக்கு பாம்பினோ பாஸ்தா நிறுவன உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கோயமுத்தூர ;பாம்பினோ பாஸ்தாபுட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் விவேகானந்தன் கலந்து கொண்டு மாணவர்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் பற்றி விரிவாக உரையாற்றினார்.
பின்னர் பெற்றோர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார் நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு பாம்பினோ பாஸ்தா நிறுவன உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பளர் கௌரி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் உதயகுமார், கணியன் செல்வராஜ், காசாவயல் கண்ணன், ராமன், உடற் கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விசாலி, தஞ்சாவூர் தொழிலதிபர் செல்வம், பாம்பினோ பாஸ்தா நிறுவனத்தைச் சார்ந்த மணிசேகரன், ஆனந்த், பிரதீப் மற்றும் ஏராளமான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கான உணவுமுறைகள் பற்றிய இந்தக் கூட்டம் மிகவும் பயனுள்ளதாத அமைந்ததாக பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
- ேவறு எந்த அலுவலகத்தற்கும் விராலிமலை அரசு பள்ளி வளாகத்திற்குள் இடம் கொடுக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
- 600 மாணவிகள் படித்து வந்த நிலையில் தற்போது 1100 க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
விராவிமலை,
விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு இடம் ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் கேட்டிருந்தது. அதற்கு பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர். அந்த அம்மனுவில் கூறியிருப்பதாவது:- விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு இடம் ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் கேட்டிருந்ததாக தெரியவந்தது.
இப்பள்ளிக்கு ஏற்கனவே இடம் குறைவாக உள்ளது. 600 மாணவிகள் படித்து வந்த நிலையில் தற்போது 1100 க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். வகுப்பறை கட்டிடங்கள் போக மீதி உள்ள இடத்தில்தான் விளையாட்டு மைதானம், கழிப்பறைகள் உள்ளது. இப்பள்ளி மாணவிகள் கல்வியில் மாவட்ட அளவில் சாதனை செய்து வருவதால் ஆண்டு தோறும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்ட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இப்பள்ளி வளாகத்தில் வேறு அலுவலக கட்டிடத்திற்கு இடம் ஒதுக்கினால் நிச்சயம் இப்பள்ளிக்கு இடப்பற்றாக்குறை ஏற்படும். வேறு அலுவலகம் உள்ளே இயங்கும்பட்சத்தில் வெளி நபர்கள் வாகனங்களில் வந்து போகும்போது பள்ளியின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும். மாணவிகளுக்கு வெளி நபர்கள் தொந்தரவு கொடுக்கும் நிலையும் ஏற்படும்.மேலும் இந்த அலுவலகத்திற்கு நில மாற்றம் செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் பள்ளி நிர்வாகத்தில் உள்ள யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. எனவே விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் வேறு எந்த ஒரு அரசு அலுவலகத்திற்கும் இடம் ஒதுக்கிதர வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் கூறியிருந்தனர்.
- புதுக்கோட்டையில் நண்பரை கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
- கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை நரிமேடு லட்சுமி நகரை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 47). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதன்பின் புதுக்கோட்டை வந்த அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை. மனைவி பிரிந்து சென்ற நிலையில் விஜயராகவன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் விஜயராகவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகா்ணம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் விஜயராகவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளியை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், விஜயராகவனை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரத்தை (60) போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், விசாரணையில், அவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதும், ஒன்றாக சேர்ந்து மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் விஜயராகவன் குடிபோதையில் சோமசுந்தரம் வீட்டு வாசல் முன்பு நின்று தகராறில் ஈடுபட்டதால் கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்ததாக சோமசுந்தரம் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து சோமசுந்தரத்தை போலீசார் நேற்று புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். கொலை சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்.






