என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் தொடர் கொள்ளையன் கைது
- புதுக்கோட்டையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருச்சியை சேர்ந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்
- கொள்ளையனிடம் இருந்து 30 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, கணேஷ்நகர், கந்தர்வகோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து தொடர் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது ஒரே நபர் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து திருச்சி ஏர்போர்டை சேர்ந்த விஷ்வபிரகாஷ்(வயது 20) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அனைத்து கொள்ளைகளிலும் ஈடுபட்டது அவர்தான் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 30 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இலுப்பூர் டி.எஸ்.பி. ஜெயந்தி தலைமையில் அமைக்கப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், போலீசார் பிரவீன்குமார், பிரபாகரன், செல்வராசு ஆகியோர் கொண்ட தனிப்படையினரை, மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே பாராட்டினார்.இது குறித்து போலீசார் கூறும்போது, தொடர் திருட்டில் ஈடுபட்ட விஷ்வபிரகாஷ் மீது ஏற்கனவே திருச்சியில் திருட்டு வழக்கு பதிவாகி உள்ளது.இதில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் தனது கைவரிசையை காட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் பதிவான விரல் ரேகைகளை வைத்தும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் வைத்து விஷ்வபிரகாஷை பிடித்ததாக கூறினர்.






