என் மலர்
புதுக்கோட்டை
- புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
- தி.மு.க. பிரமுகர் என்பதாலோ கூடுதலாக சலுகை வழங்கப்படவில்லை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு சிறைவாசிக்கு எந்தளவு சலுகைகள் வழங்கப்படுமோ அது மட்டுமே அவருக்கு வழங்கப்படுகிறது. ஏசி வசதிகள் கிடையாது. ஒரு வாரத்திற்கு ஒதுக்கப்படும் ரூ.1000த்தில் கேண்டீனில் உணவுகளை அவர் வாங்கி சாப்பிடலாம். மற்றப்படி வெளியிலிருந்து எந்த உணவும் உள்ளே செல்லாது. அவர் அமைச்சர் என்பதாலோ, தி.மு.க. பிரமுகர் என்பதாலோ கூடுதலாக சலுகை வழங்கப்படவில்லை.
வழக்கு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் இருப்பதால் அவருக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், ஊடகங்கள், பத்திரிக்கைகள் மூலம் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். மேலும் அவர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது போல் மாயதோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். எக்காரணம் கொண்டும் முதல்வர் இதுபோன்ற செயலுக்கு துணை நிற்கமாட்டார்.
காவிரி பிரச்சினைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். மத்திய நீர்வளத்துறை மந்திரியிடம் பேசியுள்ளார். நீதிமன்றத்தில் அம்பேத்கர் படம் விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியை முதல்வரின் அறிவுரைபடி நேரில் சந்தித்து சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் ஒரு மனுவை வழங்கினேன். அப்போது எந்த படத்தையும் எடுக்க சொல்லவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது என கூறி வருகிறார். ஆனால் நாங்கள் விலைவாசியை கட்டுக்குள்வைத்துள்ளோம். சிலர் பதுக்கலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான லஞ்ச ஒழிப்பு புகாரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்ற உத்தரவுபடியாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2-ம் நபரிடம் ஒப்படைக்க முடியாது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- காதல் திருமணம் செய்த மனைவியை கடத்தி மாந்திரீக பூஜை செய்த சைகோ கணவர்
- சென்னையில் அடைத்து வைக்கப்பட்டவரை போலீசார் அதிரடியாக மீட்டனர்
திருச்சி,
புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்தார்.
திருமணம் முடிந்தபின்னர் மனைவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு தினமும் அவரை அடித்து துன்புறுத்தியதால், திருமணமான 4 மாதத்தில் உமா மகேஸ்வரி கணவரை பிரிந்து தாயார் தனலெட்சுமியுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தாயாருடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை மாரிமுத்து தனது நண்பர்களுடன் வந்து காரில் கடத்திச் சென்றார். இதுகுறித்து, தனலெட்சுமி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது த ாய் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.இந்நிலையில் மகேஸ்வரி தான் சென்னையில் உள்ளதாக தாயாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உமாமகேஸ்வரியை மீட்டு மயிலாடுதுறை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், போலீசாரிடம் உமாமகேஸ்வரி அளித்து ள்ள வாக்குமூலத்தில், தன்னை காரில் கடத்திய கணவன் மாரிமுத்து, மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய செய்தார். தொடாந்து ராமநாதபுரம் அழைத்து சென்று தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக அங்கு தர்கா ஒன்றில் மாந்திரீகம் செய்தார். பின்னர் சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்ததார். அவருடன் வாழ மறுத்ததால் சென்னையில் நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார் தெரிவித்துள்ளார்.கணவன் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக உமாமகேஸ்வரி கூறியதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாயாருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்படுகிறார். உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
- விராலிமலை அருகே காரில் கடத்தி வந்த 141 கிலோ கஞ்சா பறிமுதல்
- 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை
விராலிமலை,
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அனுமதியின்றி விற்பதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் விராலிமலை தாலுகா கொடும்பாளூர் அருகே உள்ள லஞ்சமேடு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக எடுத்து சென்ற அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 141கிலோ 923கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த சேலம் மாவட்டம் வாழப்பாடி கொட்டவாடிப் பகுதியைச் சேர்ந்த கலியன் மகன் பெரியசாமி(வயது 41) மற்றும் விராலிமலை தாலுகா லஞ்சமேடு பகுதியைச் சேர்ந்த கருத்தக்கண்ணு மகன் பிரசன்ன வெங்கடேஷ்(28) ஆகிய இருவரையும் போலீசார் விராலிமலை போலீஸ் நிலையம் அழைத்து வந்து 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமிருந்தும் 3 செல்போன், புகையிலை பொருள்களுக்கான ரசீது மற்றும் ரொக்க பணம் ரூ.10ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- இளைஞர்களுடன் இணைந்து எம்எல்ஏ வாலிபால் ஆடினார்
- நன்கு விளையாட இளைஞர்களுக்கு அறிவுரை
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தீத்தானிப்பட்டி ஊராட்சியில் இளைஞர்கள் வாலிபால் ( கைப் பந்து ) விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து தானும் அவர்களுடன் இணைந்து விளையாடினார்.
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர்
- மணிப்பூர் பாலியல் கொடுமையை கண்டித்து அனுப்பப்பட்டது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நரேந்திர மோடிக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.போராட்டத்தில் ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சிபிஐ மாவட்டத்துணைச் செயலாளர் ராஜேந்திரன்,தேசியக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பவிதாரணி,ஏஐடியுசி மாவட்ட செயலாளர் பெரியசாமி,முன்னாள் மாவட்ட தலைவர் தண்டாயுதபாணி,சிபிஐ நகர செயலாளர் அஜய் குமார்கோஷ், ஒன்றிய தலைவர் வீராச்சாமி, ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார்,ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய நிர்வாகிகள் அஜித்,பாரதிராஜன், பிரசாத்,ஹரி,கார்த்திக், பாலசுப்பிரமணியன், கண்ணன், பவிதிரன், ராஜேந்திரன், பாலசுப்ரமணியன், சிபிஐ நகரத் துணைச் செயலாளர் பாலமுருகன், சாலையோர வியாபாரிகள் சங்க பொருளாளர் ராஜேந்திரன், ராஜபகதூர்,கீர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குடியில் தி.மு.க.ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி கலந்து கொண்டனர்
ஆலங்குடி,
திருச்சியில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கான பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம், 26ம் தேதி, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது . இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாகநிலை முகவர்களிடையே ஆலோசனை கூட்டம் ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் கேசவன் மாவட்டத் துணை செயலாளர் ஞான. இளங்கோவன், ஒன்றிய செயலாளர் வடிவேல், ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார், துணைசெயலாளர் செங்கோல், கீரமங்கலம் நகர செயலாளர் சிவகுமார், கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சஷ்டிமுருகன், சையது இப்ராஹிம் ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன், நேஷனல் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கறம்பக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம்.
- கண் அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பன்னீர் தேவர் கல்வி அறக்கட்டளை மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.. முகாம் பன்னீர் தேவர் திருமண மஹாலில் நடைபெற்றது. முகாமை பன்னீர் தேவர் அறக்கட்டளையின் செயலாளரும் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளருமான பெரும் தொழில் அதிபர் ப கருப்பையா தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்து பேசும்போது இந்த அறக்கட்டளையின் மூலம் வருடம் தோறும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த வருடத்தில் இது இரண்டாவது முறையாக நடத்தப்படும் இலவச கண் சிகிச்சை முகாம் ஆகும் என்றும் மேலும் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து மக்களின் கல்வித் தரம் மற்றும் சுகாதாரத்தை பேணி காக்கும் என்றும் கூறினார். மேலும் பகுதி பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கண் சம்பந்தமான நோய்கள் அதனை தீர்க்கும் வழிமுறைகளை மருத்துவர்கள் எடுத்துக் கூறினார்கள். மேலும் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கண் அறுவை சிகிச்சை கண் லென்ஸ் பொருத்துதல் ஆகியவை இலவசமாக செய்யப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் வேலம்மாள் மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் செவிலியர்கள் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு கழகத்தின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பன்னீர் தேவர் அறக்கட்டளை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
- மாட்டுக் கொட்டகை தீப்பற்றி எரிந்து நாசமானது
- கீரமங்கலம் போலீசார் விசாரணை
புதுக்கோட்டை,
கீரமங்கலம் அருகே உள்ள பெரியாளூர் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர், விவசாயி. நேற்று முன்தினம் இரவு ஜெய்சங்கர் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மாட்டுக் கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஜெய்சங்கர் குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். அதற்குள் தீமளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் மாட்டுக்கொட்டகை எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுக்கோட்டையில் 6-வது புத்தக திருவிழா
- 10 நாட்கள் நடைபெறுகிறது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6-வது புத்தகத் திருவிழா வரும் 28-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றன.மாவட்ட கலெக்டரும், புத்தகத் திருவிழாக்குழுத் தலைவருமான மெர்சி ரம்யா தலைமையில், மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். தொடர்ந்து மாலையில் சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.தினகரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.29-ந் தேதி அன்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனின் சிறப்புரை, மூத்த விஞ்ஞானித.வி.வெங்கடேஸ்வரனின் அறிவியல் உரை, கவிச்சுடர் கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.30-ந் தேதி அன்று செந்தில்கணேஷ், ராஜலட்சுமியின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜூலை 31-ந் தேதி கவிஞர் நந்தலாலா, வழக்குரைஞர் த.ராமலிங்கம் ஆகியோரின் இலக்கியச் சொற்பொழிவுகள் இடம் பெறுகின்றன.
ஆகஸ்ட் 1-ந் தேதி அன்று எழுத்தாளர் ச.தமிழ்ச்செ ல்வன், பேராசிரியர் ஆத்ரேயா ஆகியோரின் உரைவீச்சு இடம்பெறுகிறது. 2-ந் தேதி எழுத்தாளர் பவா.செல்லதுரை, எழுத்தாளர் நக்கீரன், முன்னாள் துணைவேந்தர் சொ.சுப்பையா ஆகியோர் உரையாற்றுகின்றனர். 3-ந் தேதி அன்று கவிதா ஜவகரின் இலக்கிய உரையும், கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் கவியரங்கமும் நடைபெறுகிறது.4-ந் தேதி அன்று எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில்பட்டிமன்றம் நடைபெறுகிறது. 5-ந் தேதி அன்றுஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரைத் தொகுதி மக்களவை உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர் நிறைவு நாளான 6-ந் தேதி அன்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் கவிதா ராமு,நடிகர் தாமு,எழுத்தாளர் விழியன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.இந்த புத்தக திருவிழாவிற்கான அழைப்பிதழை கலெக்டர் வெளியிட்டார். இந்த நிழ்ச்சியில் கவிஞர்கள் தங்கம் மூர்த்தி, ஜூவி, முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா, வீரமுத்து, மணாளன் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மணிப்பூர் பாலியல் கொடுமையை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அனைத்திந்தியஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகளில் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், நகரச் செயலாளர் ஆர். சோலையப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம். தலைவர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி. சுசிலா, வாலிபர் சங்க நகரச் செயலாளர் கு. ஜெகன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், தலைவர் அ.சந்தோஷ்குமார் , தமுஎகச மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் சரவணன், மாற்றுத்திறனாளிகள் சங்க நகரச் செயலாளர் ரமேஷ், உள்ளிட்டோர் கண்ட உரையாற்றினார்.
- ஆலங்குடி பேரூராட்சியில் பேரூராட்சி ஆணையரக இயக்குனர் ஆய்வு
- திட்டப்பணிகளை அதிகளவு வழங்கிட கோரிக்கை
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் குளங்கள் மேம்பாடு, மின்மயானம் சாலை பணிகள் மேம்பாடு புறவழிச்சாலை போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பேரூராட்சி ஆணையரக இயக்குனர் கிரண் குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், தி.மு.க. நகர செயலாளர் பழனிகுமார் மற்றும் கவுன்சிலர்கள் உடன் சென்றனர். அப்போது ஆலங்குடி பேரூராட்சிக்கு மேலும் பல வளர்ச்சி திட்ட பணிகளை கொண்டு வருமாறு பேரூராட்சி இயக்குனரிடம் கோரிக்கை விடுத்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியன், அ.தி.மு.க. நகர செயலாளர் பழனிவேல், கவுன்சிலர் சையது இப்ராஹிம், மூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.
- பொன்னமராவதி ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
- ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள ஆவுடையே சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான், தாயார் சாயாதேவியுடன் அருள் பாலிக்கிறார். கால பைரவர் சனீஸ்வர பகவானை பார்த்து வீற்றீருப்பதால் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 1008 பெண்கள் கலந்துகொண்டனர்.
திருவிளக்கு பூஜையில் சிவாச்சாரியார் பாலாஜி தலைமையில் வேத மந்திரங்களை பெண்கள் உச்சரித்து, மற்றும் குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.அதன் பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.






