என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை கம்பன் கழக விழாவில் பள்ளி மாணவர்களுக்கு  போட்டி
    X

    புதுக்கோட்டை கம்பன் கழக விழாவில் பள்ளி மாணவர்களுக்கு போட்டி

    • ஸ்ரீ வெங்கடேஸ்டவரா மெட்ரிக். பள்ளி அதிக பரிசுகளை வென்றது
    • பத்து ஆண்டுகளாக கம்பன் விழாவில் சாதனை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்டவரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 10-வது ஆண்டாக கம்பன் பெருவிழா போட்டிகளில் அதிக பரிசுகள் வென்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கம்பன் பெருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கம்பன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளியின் எல்.கே.ஜி. முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். கம்பன் கழக வெற்றிக் கோப்பையை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், மற்றும் கம்பன் கழக நிர்வாகிகள் வழங்கிட பள்ளியின் ஆசிரியர்கள் பெற்று க்கொண்டர். இவ்வாண்டு பெற்ற மொத்த பரிசுகள் 24 ஆகும். பரிசு பெற்ற மாணவர்களை கம்பன் கழகத் தலைவர் எஸ்.ஆர் .என்ற ராமச்சந்திரன், செயலாளர் ரா.சம்பத்குமார் கம்பன் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி துணை முதல்வர் குமாரவேல், மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

    Next Story
    ×