என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டையில் 14,285 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
    • அமைச்சர் ரகுபதி தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர்மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி வழங்கினார்.மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.பின்னர் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் பேசும்போது, புதுக்கோட்டைமாவட்டத்தில் 6,028 மாணவர்களுக்கும், 8,257 மாணவிகளுக்கும் என மொத்தம் 14,285 நபர்களுக்கு ரூ.6.88 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் இந்த வருடத்தில் வழங்கப்பட உள்ளன என்று அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்டா க்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர்கே .கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில்,வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்ரெ.மதியழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, பள்ளித் துணை ஆய்வாளர்கள் குரு மாரிமுத்து, வேலுச்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், நகர்மன்ற உறுப்பினர்கள்செந்தாமரை பாலு, பால்ராஜ், வட்டாட்சியர் விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;

    • புதுக்கோட்டையில் புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில 6-வது புத்தகத் திருவிழா வருகின்ற ஜூலை 28 முதல்ஆகஸ்ட் 6 வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது.புத்தகத்திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி,கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தின் முன்பாகத் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கொடி அசைத்துத்தொ டங்கி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா கோட்டாட்சியர்முருகேசன்,ஆதிதிராவிட நல அலுவலர் கருணாகரன், புதுக்கோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமி ஆகியோர்முன்னிலை வகித்தனர்.முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி ,புத்தகத் திருவிழா மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம் மூர்த்தி ,மணவாளன், பாலகிருஷ்ணன், வீரமுத்து, முத்துக்குமார், சதாசிவம், விமலா,ராசி.பன்னீர்செல்வம், பவனம்மாள்,மு.கீதா மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள் வரவேறப்புக்குழு உறுப்பினர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் புத்தகங்களை கையில் ஏந்தியும், பாலூன்களைப்பறக்கவிட்டும், புத்தகங்களின் அவசியம் குறித்து முழுக்கங்களை எழுப்பியவாறும் நடைபெற்ற இப்பேரணி பழைய பேருந்து நிலையம்அண்ணா சிலை,வழியாக கீழ ராஜ வீதி,வடக்கு வீதிவழியாக நகர் மன்றத்தை வந்தடைந்தது. இதைப்போல பொன்னமராவதி,கந்தர்வகோட்டை,கறம்பக்குடி மாத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் பேரணி நடைபெற்றது.

    • வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொள்ள புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • திருச்சியில் மூன்று நாட்கள் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளின்கௌ ரவ நிதித் திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் நேரடி சிட்டா உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000/- வீதம்ஒரு வருடத்திற்கு ரூ.6000/- மூன்று தவணைகளாக ஏப்ரல் - செப்டம்பர்,ஆக்ஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில்விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவருகிறது. விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்குதங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து டிபிடி மோடுக்கு மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைசார்பாக திருச்சி மாநகரில் கேர் பொறியியல் கல்லூரியில் இம்மாதம்ஜூலை 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் வேளாண் சங்கமம்2023 - வேளாண் சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்குநடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் அனைவரும் இலவசஅனுமதியில் கலந்துகொள்ளலாம். இங்கு வேளாண்மைத்துறை,தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, விதை மற்றும் அங்ககச்சா ன்றளிப்புத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும்வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி, வேளாண்அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் கருவி விற்பனைநிறுவனங்கள், நுண்ணீர் பாசன நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறுதுறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொழில்நுட்பங்கள்ஆகியன விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது என்று அவர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, தனிமாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு)ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்டவன அலுவலர் கணேசலிங்கம், மத்திய கூட்டுறவு மேலாண்மைஇயக்குநர் தனலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள், அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமத்தில் நடந்தது

    அறந்தாங்கி,

    அறந்தாங்கி தாலுகா ரெத்தினக்கோட்டை கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பெரும்பாலானோர் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக வீட்டுமனை பட்டா மற்றும் குடிநீர் சாலை வசதி கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் தலைமை வகித்து உரையா ற்றினார்.

    அப்போது ரெத்தின கோ ட்டையிலிருந்து பட்டு க்கோட்டை சாலை வரை தார்ச்சாலை செப்பனிட வேண்டும், இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் சாலைகளை செப்பனிட வே ண்டும், ஆதிதிரா விடர்களுக்கு மயானச் சாலை, குடிநீர் உள்ளிட்ட பல் அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விளக்க ஆர்பாட்டம் நடைபெற்றது. ஒன்னியச் செயலாளர் தென்றல்க ருப்பையா, நகரச் செயலர்ளர் கணேசன், சிஜடியு ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் கர்ணா, மாவட்ட குழு உறுப்பினர் தங்கராசு, வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் அலாவுதீன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விஷம் கலந்த உணவை உண்ட 2 நாய்கள் செத்தன
    • 2 பெண்கள் உள்பட 5 பேர் மீது புகார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை உய்யக்கொண்டான் காலனி பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 48). விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்த இவர் கணேஷ்நகர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் தனது வீட்டின் அருகே 2 தெரு நாய்கள் விஷம் கலந்த உணவை தின்றதால் இறந்ததாகவும், சிலர் வேண்டுமென்றே உணவில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகப்படும்படியாக 2 பெண்கள் உள்பட 5 பேர் மீது புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளித்தலை அருகே பொம்மை துப்பாக்கி வைத்து வழிபறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
    • கைதானவர்களில் ஒருவர் மீது 3 வழக்கு நிலுவையில் உள்ளது

    குளித்தலை, 

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குளித்தலை முதல் மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் சின்னரெட்டிபட்டி பெட்ரோல் பங்க் அருகில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொன் பேத்தி கிராமம், இளையமங்களத்தை சேர்ந்த மதன்குமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.கீழவெளியூரை சேர்ந்த சரத்குமார், பூபாலன், வசந்த், அருண்குமார் ஆகிய 4 ேபரும் சாலையில் நின்று கொண்டு மறித்து லிப்ட் கேட்டனர். வாகனத்தை மதன்குமார் நிறுத்தினர். உடனே அவர்கள் மறைத்து வைத்திருந்த பொம்மை துப்பாக்கி, கத்தியை காட்டி மதன்குமார் வைத்திருந்த பணத்தை கேட்டு மிரட்டினர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை கண்டு அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.இதுகுறித்து மதன்குமார் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார், அதன்பேரில் வழக்கு பதிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் 4 பேரையும் கைது செய்து குளித்தலை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், இதில் கைதான சரத்குமார் மீது தோகைமலை காவல்நிலையத்தில் கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகள் 3 நிலுவையில் உள்ளநிலையில் மேலும் ஒரு வழக்கில் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, வழிபறி கொள்ளையில் துப்பாக்கி, கத்தி காட்டி பணம் பறிக்க முயற்சி செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கள்ளுகுண்டு கரைகுளத்தை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்
    • நடைபாதை, மின்விளக்க அமைக்க அமைச்சர் மெய்யநாதன் உத்தரவிட்டார்

    ஆலங்குடி,

    ஆலங்குடியில் புரணமைக்கப்பட்டு வரும் கள்ளுகுண்டு கரை குளத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்லுக்குண்டு கரை ஊரணி புனரமைக்கப்பட்டு வருகிறது. குளத்தை சுத்தம் செய்து ஆழப்படுத்தி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தண்ணீரை நிரப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் குளத்தை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ள பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரப்ப ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என்றும் நடை பயிற்சி செல்வதற்கு ஏதுவாக அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை அமைக்க வேண்டும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் உத்தரவிட்டார். பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சையது இப்ராஹிம், உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • புதுக்கோட்டையில் 1584 பயனாளிகளுக்கு ரூ.82.19 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது
    • கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் ஒருங்கிணைந்து நடத்தும், தொழில்களுக்கான அரசு மானியத்துடன் கூடிய தொழில் கடன் முகாம் நடைபெற்றது. முன்னோடி வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளி ன் மூலம் 1,584 பயனாளி களுக்கு ரூ.82.19 கோடி முதலீட்டு தொகைக்கான கடன் உதவிகளை தொழில் முனை வோர்களுக்கு, மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் சு.திரிபுரசுந்தரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம்.ஆனந்த், தாட்கோ மேலாளர் ஆர்.விஜயகுமார், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் கலை ச்செல்வி, புதுக்கோ ட்டை மாவட்ட சிறு தொழில் அதிபர்கள் நலச்சங்கத் தலைவர் ராஜ்குமார், வங்கி மேலாளர்கள், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • ஸ்ரீ வெங்கடேஸ்டவரா மெட்ரிக். பள்ளி அதிக பரிசுகளை வென்றது
    • பத்து ஆண்டுகளாக கம்பன் விழாவில் சாதனை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்டவரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 10-வது ஆண்டாக கம்பன் பெருவிழா போட்டிகளில் அதிக பரிசுகள் வென்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கம்பன் பெருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கம்பன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளியின் எல்.கே.ஜி. முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். கம்பன் கழக வெற்றிக் கோப்பையை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், மற்றும் கம்பன் கழக நிர்வாகிகள் வழங்கிட பள்ளியின் ஆசிரியர்கள் பெற்று க்கொண்டர். இவ்வாண்டு பெற்ற மொத்த பரிசுகள் 24 ஆகும். பரிசு பெற்ற மாணவர்களை கம்பன் கழகத் தலைவர் எஸ்.ஆர் .என்ற ராமச்சந்திரன், செயலாளர் ரா.சம்பத்குமார் கம்பன் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி துணை முதல்வர் குமாரவேல், மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

    • அறந்தாங்கியில் 4 இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்றை போலீசார் தடுத்து நிறுத்தினர்
    • இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்

    புதுக்கோட்டை,

    அறந்தாங்கி எல் என் புரம் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 5 பேரை மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அறந்தாங்கி எல்என்புரம் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாவட்ட தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் ஒரு வீட்டில் 4 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்றுள்ளதை கண்டுள்ளனர். அதனையடுத்து இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 5 நபர்களை காவல்த்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட 4 இளம் பெண்களையும் மீட்டு ஆவுடையார்கோவில் ரீக்கோ காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பொன்னமராவதி அருகே புரவி எடுப்பு விழா நடைபெற்றது
    • மண் குதிரைகளை பொதுமக்கள் அரண்மனைக்கு சுமந்து சென்றனர்

    பொன்மராவதி

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் ஏன்காட்டு அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில்ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஆடி மாத புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டுகாப்பு கட்டப்பட்டு நாள்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜையும் அபிஷேகங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. எட்டாம் நாளான மூலங்குடியில் இருந்து காட்டுப்பட்டி அரண்மனை குதிரை உள்ளிட்ட 10 குதிரைகள், ஏராளமான காளைகள், புறவிகள் சிலைகளுக்கு வேஸ்டி துண்டு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ரெ மேளதாள முழக்கத்துடன் வெள்ளையாண்டிப்பட்டி, காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக கோவில் திடலில் வைத்து வழிபாடு செய்தனர்.இவ்விழாவையொட்டி காட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டோர் மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

    • தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் ஒரு வீட்டில் 4 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்றுள்ளதை கண்டுள்ளனர்
    • குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்என்புரம் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 5 பேரை மாவட்ட தனி ப்படை போலீசார் கைது செய்து நடவ டிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அறந்தாங்கி எல்என்புரம் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாவட்ட தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் ஒரு வீட்டில் 4 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்றுள்ளதை கண்டுள்ளனர். அதனையடுத்து இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 5 நபர்களை காவல்த்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட 4 இளம் பெண்களையும் மீட்டு ஆவுடையார்கோவில் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×