என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கந்தர்வகோட்டையில் சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது
    • தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பங்கேற்பு

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அவரம்பட்டியில் சர்வதேச புலிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கந்தர்வக்கோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா தலைமை வகித்தார்.வட்டாரச் செயலாளர் சின்னராஜா அனைவரையும் வரவேற்றார். மேலும் புதுக்கோட்டையில் நடைபெறும் 6வது புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் மகேஸ்வரி , சங்கீதா, கிருஷ்ணவேணி, வேம்பரசி, வைஷ்ணவி, கிருத்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • புதுக்கோட்டையில் 6-வது புத்தகத்திருவிழா நடைபெற்றது
    • சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து பேசினார்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து, புத்தகங்களை பார்வையிட்டு விழாப்பே ருரையாற்றினார்.இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 75 பதிப்பகங்களிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அறிவியல், அரசியல், கவிதை, வரலாற்றுக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் 112 அரங்குகளில் வைக்கப்பட்டுள்ளது.பின்னர் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியும், தனது நாகரீகத்தைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு வரலாறு மிக முக்கியமாகும். 3000 ஆண்டிற்கு மேற்பட்ட வரலாற்றுப் பெருமை கொண்ட நம்முடைய வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு புத்தகங்கள் மிக முக்கியமானதாகும். மேலும் நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு வாசிப்பு பழக்கத்தை நம்மிடையே வளர்த்துக்கொள்ள வேண்டும். விலைமதிப்புமிக்க செல்வமான கல்வி செல்வத்தை நம்மிடமிருந்து யாராலும் பறிக்க இயலாது. அப்படிப்பட்ட கல்வி செல்வத்தினை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசின் சார்பில், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.வாசிப்பு பழக்கத்தை மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் நூலகத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க 'கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினை" தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளுடன் உலகத்திலேயே சிறந்த நூலகமாக திகழ்ந்து வருகிறது.இதுபோன்ற திட்டங்களால் கல்வி வளர்ச்சியில் தமிழகம் சிறப்பிடம் பெற்று வருகிறது. எனவே தமிழனின் அடையாளமாக விளங்கும் வாசிப்பு பழக்கத்தை நம்மிடையே வளர்க்கும் வகையில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 28.07.2023 முதல் 06.08.2023 வரை 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி படித்து பயன்பெறலாம் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமை ச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .வை.மு த்துராஜா, கந்தர்வ க்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, காவல்துறை திருச்சி சரக துணைத் தலைவர் (சிறைத்துறை) ஜெயபாரதி, மாவட்ட வருவாய் அலுவலா; மா.செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசு.கவிதைப்பித்தன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா; த.ஜெயலட்சுமி தமிழ்செல்வன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலா; க.கருணாகரன், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், ஒருங்கிணைப்பாளர் தங்கம்மூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மு.க.ராமகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, வட்டாட்சியர் விஜயலட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனா;;.

    • மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்தது

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வனத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில், மாநிலத்தின் பசுமை போர்வையினை அடுத்த 10 ஆண்டுகளில் தற்போது உள்ள 23.27 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்தும் வகையில், பசுமை தமிழகம் இயக்கம் உருவாக்கப்பட்டு அனைத்து துறைகளின் மூலம் மரக்கன்றுகளை நடவு செய்யவுள்ளது.அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை 7.89 மூ ஆக உள்ள பசுமைப் போர்வையினை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்தும் வகையில், ஆண்டுதோறும் சராசரியாக 61.1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்திட வேண்டும். இம்மாபொரும் இலக்கினை அடையும் வகையில், மாவட்ட கலெக்டரின் தலைமையில் மாவட்ட பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வனத்துறையுடன் இணைந்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மரக்கன்றுகளை ஆண்டுதோறும் நடுவதற்கு இலக்கீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.எனவே அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2023-2024, 2024-2025, 2025-2026 ஆம் ஆண்டிற்கான இலக்கினை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தினை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றிட ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மேலும் மரக்கன்றுகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் hவவி:ஃஃபவஅ.ழசப.inஃபவஅயிpஃடழபin.யளிஒ. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்), ப.ஜஸ்டின் ஜெபராஜ் (அறந்தாங்கி), துணை இயக்குநர் (தோட்டக்கலை) குருமணி, செயற்பொறியாளர் (காவேரி-வைகை-குண்டாறு) சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் உமாசங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கறம்பக்குடி பேரூராட்சியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது
    • திமுக நகர செயலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார்

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க செயல்பாடு அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பேரூராட்சி தலைவரும் திமுக நகர செயலாளருமான உ முருகேசன் தலைமை வைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலை குழுவினர் குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் மற்றும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்துதல் மேலும் மழைநீர் சேகரிப்பு சுற்றுப்புற தூய்மை மற்றும் கழிப்பறை பயன்பாடுகள் குறித்தும் கலை குழுவினர் சார்பாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பணியாளர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி அறந்தாங்கியில் நடைபெற்றது
    • உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுக்காக 35 கிமீ நீளத்திற்கு நடைபெற்றது

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உடல் ஆரோக்கியம் குறித்து கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.புதுக்கோட்டை ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பேரணியில் கல்லூரி மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியானது குளவாய்ப்பட்டி வழியாக 35 கிலோ மீட்டர் தூரம் கடந்து அறந்தாங்கியை அடைந்தது. அறந்தாங்கி சோதனைச் சாவடி அருகே வந்த பேரணியை ஜெசிஐ அமைப்பினர் வரவேற்பளித்தனர். வரவேற்பை தொடர்ந்து பெரியகடைவீதி, கட்டுமாவடிச்சாலை முக்கம் வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது.பேரணியின் போது எவ்வாறு ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது குறித்த பதாகைகளை ஏந்தி மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டம் அறந்தாங்கியில் நடைபெற்றது
    • 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதம் ஓய்வூதியம் உயர்த்தி தர கோரிக்கை

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் பேரவை ஆண்டுவிழா கூட்டம் நடைபெற்றது. ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய வட்ட ஆதாரக்கிளைகள் சார்பில் வட்ட ஆதாரக்கிளை தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு அரசிடமிருந்து பெறக்கூடிய மற்றும் வலியுறுத்த வேண்டிய சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் அனைத்து ஓய்வூதியருக்கும் கிடைத்திடவும், அகவிலைப்படி நிலுவை தொகையினை உடன் வழங்கவும், நடுவண் அரசு அறிவிக்கும் அகவிலைப்படியினை மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே தினங்களில் கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும், அனைத்துவகை நோய்களுக்கும் சிகிச்சைப் பெற்றிடும் வகையில் மருத்துக்காப்பீடு அமைக்கிட அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.விழாவில் அனைத்து கிளை நிர்வாகிகள், ஓய்வு பெற்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நமது மக்கள் கட்சி சார்பில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை
    • இந்தியா முழுவதும் உள்ள ஓபிசி மக்கள் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

    புதுக்கோட்டை,

    ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நமது மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சரவண தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இந்தியா முழுவதும் உள்ள ஓபிசி மக்கள் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என போராடிவரும் சூழலில் பல மாநிலங்களில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த அந்தந்த மாநில அரசு முடிவு செய்து அதற்கு நிதியை ஒதுக்கி, தரவுகளை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களின் உண்மையான நேர்மையான ஜாதிவாரியான கணக்கெடுப்புகளை நடத்தி, அந்தந்த சமூகத்தின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிவிப்பினை வெளியிட்டு உண்மையான ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள 255 சமூக ஓபிசி மக்கள் சார்பில் அனைத்து சமூகத்தின் தலைவர்கள் தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    தங்கள் தலைமையிலான அரசு சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு  தொடர்ந்து போராடிவருகின்றனர். தமிழகத்தில் பெரும்பான்மையாக ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்களான முத்தரையர்களின் கல்வி வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓ பி சி மக்களின் சம உரிமை கிடைக்க சமூகநீதி காக்க ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்

    • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாமுக்கு மலரஞ்சலி
    • மாணவர்களும் ஆசிரியப்பெருமக்களும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றம் சார்பாக மேன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்த ப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கலந்துகொண்டு அப்துல் கலாம் நினை வுகளை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார். இதுபோல தேசத் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தலைவர்களின் தியாகங்கள், வாழ்நாள் அனுபவங்களை அறிந்துகொண்டு வாழ்வில் முன்னேற வாய்ப்பாக அமைகின்றது என்று குறிப்பிட்டார். ஏராளமான மாணவர்களும் ஆசிரியப்பெருமக்களும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

    • கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்நிறுத்தம்
    • மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு

    கந்தர்வகோட்டை,

    மின்தடை கந்தர்வகோட்டை பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொ றியாளர் அறிவிப்பு.புதுக்கோட்டை மா வட்டம் ஆதனக்கோட்டை, புதுப்பட்டி ,பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 28-ந் தேதி வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் ஆதனகோட்டை, மின்னாத்தூர் ,கணபதிபுரம், பெருங்களூர் ,தொண்டைமான் ஊரணி ,வாராப்பூர் அண்டக்குளம், மண விடுதி, சோத்துப் பாலை ,சொக்கநாத பட்டி, மாந்தான்குடி ,,காட்டு நாவல், மட்டையன்பட்டி ,மங்கல த்துப்பட்டி, கந்த ர்வகோட்டை, அக்கட்சி ப்பட்டி, பல்லவரா யன்பட்டி, கல்லாக்கோ ட்டை, சங்கம் விடுதி, மட்டங்கால், வேம்பன் பட்டி ,சிவன் தான் பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி ,நம்புறான் பட்டி, மோகனூர், பகட்டுவான் பட்டி, பல்லவ ராயன்பட்டி, அரவம்பட்டி ,வடுகப்ப ட்டி ,பிசானத்தூர் துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, வெள்ளாள விடுதி, சங்கம் விடுதி,ஆகிய பகுதிகளு க்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செய ற்பொறியாளர் அறிவித்து ள்ளார்.

    • அரசுபள்ளிகளின் சுகாதாரம் குறித்து மத்திய குழு ஆய்வு நடத்தியது
    • கந்தர்வகோட்டை தொடக்கப்பள்ளியில் ஆய்வு நடைபெற்றது

     கந்தர்வகோட்டை, 

    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் சுகாதாரம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றி யத்திற்கு உட்பட்ட அரியா ணிப்பட்டி பல்லவரா யன்பட்டி ஊராட்சி களில் சுவேஜ் சர்வேசன் கிராமின் 2023 திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையைச் சார்ந்த மத்திய குழுவினர் அரசு அலுவ லகங்கள், தொட க்கப்பள்ளி கழிவறை கள், சமையல் கூடம், சுகாதார வளாகம், அங்கன்வாடி மையங்கள் மற்றும் கழிப்பறைகள், உறிஞ்சி குழி, தனிநபர் கழிப்பறைகள், அங்காடி குப்பை பிரிக்கும் கூடாரம், மண்புழு உரக்கூடம், தூய்மை காவலர் பணி ஆகியவை களை நேரில் சென்று ஆய்வு மேற்கொ ண்டனர்.தொடர்ந்து பொது மக்களிடையே சுகாதாரக் குழுவினர் சுகாதாரத்தை பற்றி எடுத்துக் கூறி விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் சுகாதார ஒருங்கி ணைப்பாளர்கள், தன்னா ர்வலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கறம்பக்குடி அருகே தைல மரக்காட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன் பத்தை ஊராட்சி குழப்பென்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விவசாயி இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் தைல மரக்காடு உள்ளது. இந்த தைல மரக்காடு நேற்று திடீரென தீ பற்றி எரிந்தது. இது குறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலை அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அனைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    பொன்னமராவதி, 

    மணிப்பூர் வன்முறையை கண்டித்து திருமயம் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொ ன்னமராவதியில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொ ன்னமராவதி பேரூந்து நிலையம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பி னர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார், நகரத் தலைவர் பழனியப்பன், வட்டார தலைவர் கிரிதரன் ஆகி யோர் முன்னிலை வகி த்தனர்.மாவட்டச் செயலா ளர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் இப்ராஹிம், சுலைமான் ஐயோ சிறப்பு ரையாற்றினார் இதனைத் தொடர்ந்து மணிப்பூர் வன்முறையை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை க ண்டித்தும் முழக்கமிட்டனர்.இதில் மாநில சிறுபா ன்மை பிரிவு அக்பர்அலி, வட்டார தலைவர் குமார், ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் பிரபு, ஊராட்சித் தலை வர்கள் அடைக்கண், செல்வராஜ், நிர்வாகிகள் நாட்டு க்கள் ரா ஜேந்திரன், வைத்தி யநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர் ராஜேந்திரன், சுப்பையா திருமயம், அரிமளம், பொ ன்னமராவதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×