என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் புத்தகத்திருவிழா
- புதுக்கோட்டையில் 6-வது புத்தகத்திருவிழா நடைபெற்றது
- சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து பேசினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து, புத்தகங்களை பார்வையிட்டு விழாப்பே ருரையாற்றினார்.இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 75 பதிப்பகங்களிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அறிவியல், அரசியல், கவிதை, வரலாற்றுக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் 112 அரங்குகளில் வைக்கப்பட்டுள்ளது.பின்னர் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியும், தனது நாகரீகத்தைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு வரலாறு மிக முக்கியமாகும். 3000 ஆண்டிற்கு மேற்பட்ட வரலாற்றுப் பெருமை கொண்ட நம்முடைய வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு புத்தகங்கள் மிக முக்கியமானதாகும். மேலும் நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு வாசிப்பு பழக்கத்தை நம்மிடையே வளர்த்துக்கொள்ள வேண்டும். விலைமதிப்புமிக்க செல்வமான கல்வி செல்வத்தை நம்மிடமிருந்து யாராலும் பறிக்க இயலாது. அப்படிப்பட்ட கல்வி செல்வத்தினை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசின் சார்பில், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.வாசிப்பு பழக்கத்தை மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் நூலகத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க 'கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினை" தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளுடன் உலகத்திலேயே சிறந்த நூலகமாக திகழ்ந்து வருகிறது.இதுபோன்ற திட்டங்களால் கல்வி வளர்ச்சியில் தமிழகம் சிறப்பிடம் பெற்று வருகிறது. எனவே தமிழனின் அடையாளமாக விளங்கும் வாசிப்பு பழக்கத்தை நம்மிடையே வளர்க்கும் வகையில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 28.07.2023 முதல் 06.08.2023 வரை 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி படித்து பயன்பெறலாம் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமை ச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .வை.மு த்துராஜா, கந்தர்வ க்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, காவல்துறை திருச்சி சரக துணைத் தலைவர் (சிறைத்துறை) ஜெயபாரதி, மாவட்ட வருவாய் அலுவலா; மா.செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசு.கவிதைப்பித்தன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா; த.ஜெயலட்சுமி தமிழ்செல்வன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலா; க.கருணாகரன், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், ஒருங்கிணைப்பாளர் தங்கம்மூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மு.க.ராமகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, வட்டாட்சியர் விஜயலட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனா;;.






