என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை
- நமது மக்கள் கட்சி சார்பில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை
- இந்தியா முழுவதும் உள்ள ஓபிசி மக்கள் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
புதுக்கோட்டை,
ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நமது மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சரவண தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள ஓபிசி மக்கள் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என போராடிவரும் சூழலில் பல மாநிலங்களில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த அந்தந்த மாநில அரசு முடிவு செய்து அதற்கு நிதியை ஒதுக்கி, தரவுகளை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களின் உண்மையான நேர்மையான ஜாதிவாரியான கணக்கெடுப்புகளை நடத்தி, அந்தந்த சமூகத்தின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிவிப்பினை வெளியிட்டு உண்மையான ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள 255 சமூக ஓபிசி மக்கள் சார்பில் அனைத்து சமூகத்தின் தலைவர்கள் தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தங்கள் தலைமையிலான அரசு சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு தொடர்ந்து போராடிவருகின்றனர். தமிழகத்தில் பெரும்பான்மையாக ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்களான முத்தரையர்களின் கல்வி வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓ பி சி மக்களின் சம உரிமை கிடைக்க சமூகநீதி காக்க ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்






