என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி
    X

    கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி

    • கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி அறந்தாங்கியில் நடைபெற்றது
    • உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுக்காக 35 கிமீ நீளத்திற்கு நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உடல் ஆரோக்கியம் குறித்து கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.புதுக்கோட்டை ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பேரணியில் கல்லூரி மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியானது குளவாய்ப்பட்டி வழியாக 35 கிலோ மீட்டர் தூரம் கடந்து அறந்தாங்கியை அடைந்தது. அறந்தாங்கி சோதனைச் சாவடி அருகே வந்த பேரணியை ஜெசிஐ அமைப்பினர் வரவேற்பளித்தனர். வரவேற்பை தொடர்ந்து பெரியகடைவீதி, கட்டுமாவடிச்சாலை முக்கம் வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது.பேரணியின் போது எவ்வாறு ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது குறித்த பதாகைகளை ஏந்தி மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    Next Story
    ×