என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் மத்திய குழு ஆய்வு
- அரசுபள்ளிகளின் சுகாதாரம் குறித்து மத்திய குழு ஆய்வு நடத்தியது
- கந்தர்வகோட்டை தொடக்கப்பள்ளியில் ஆய்வு நடைபெற்றது
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் சுகாதாரம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றி யத்திற்கு உட்பட்ட அரியா ணிப்பட்டி பல்லவரா யன்பட்டி ஊராட்சி களில் சுவேஜ் சர்வேசன் கிராமின் 2023 திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையைச் சார்ந்த மத்திய குழுவினர் அரசு அலுவ லகங்கள், தொட க்கப்பள்ளி கழிவறை கள், சமையல் கூடம், சுகாதார வளாகம், அங்கன்வாடி மையங்கள் மற்றும் கழிப்பறைகள், உறிஞ்சி குழி, தனிநபர் கழிப்பறைகள், அங்காடி குப்பை பிரிக்கும் கூடாரம், மண்புழு உரக்கூடம், தூய்மை காவலர் பணி ஆகியவை களை நேரில் சென்று ஆய்வு மேற்கொ ண்டனர்.தொடர்ந்து பொது மக்களிடையே சுகாதாரக் குழுவினர் சுகாதாரத்தை பற்றி எடுத்துக் கூறி விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் சுகாதார ஒருங்கி ணைப்பாளர்கள், தன்னா ர்வலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.






