என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
- புதுக்கோட்டையில் 14,285 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
- அமைச்சர் ரகுபதி தகவல்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர்மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி வழங்கினார்.மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.பின்னர் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் பேசும்போது, புதுக்கோட்டைமாவட்டத்தில் 6,028 மாணவர்களுக்கும், 8,257 மாணவிகளுக்கும் என மொத்தம் 14,285 நபர்களுக்கு ரூ.6.88 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் இந்த வருடத்தில் வழங்கப்பட உள்ளன என்று அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்டா க்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர்கே .கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில்,வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்ரெ.மதியழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, பள்ளித் துணை ஆய்வாளர்கள் குரு மாரிமுத்து, வேலுச்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், நகர்மன்ற உறுப்பினர்கள்செந்தாமரை பாலு, பால்ராஜ், வட்டாட்சியர் விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;






