என் மலர்
உள்ளூர் செய்திகள்

துப்பாக்கி வைத்து வழிபறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
- குளித்தலை அருகே பொம்மை துப்பாக்கி வைத்து வழிபறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
- கைதானவர்களில் ஒருவர் மீது 3 வழக்கு நிலுவையில் உள்ளது
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குளித்தலை முதல் மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் சின்னரெட்டிபட்டி பெட்ரோல் பங்க் அருகில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொன் பேத்தி கிராமம், இளையமங்களத்தை சேர்ந்த மதன்குமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.கீழவெளியூரை சேர்ந்த சரத்குமார், பூபாலன், வசந்த், அருண்குமார் ஆகிய 4 ேபரும் சாலையில் நின்று கொண்டு மறித்து லிப்ட் கேட்டனர். வாகனத்தை மதன்குமார் நிறுத்தினர். உடனே அவர்கள் மறைத்து வைத்திருந்த பொம்மை துப்பாக்கி, கத்தியை காட்டி மதன்குமார் வைத்திருந்த பணத்தை கேட்டு மிரட்டினர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை கண்டு அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.இதுகுறித்து மதன்குமார் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார், அதன்பேரில் வழக்கு பதிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் 4 பேரையும் கைது செய்து குளித்தலை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், இதில் கைதான சரத்குமார் மீது தோகைமலை காவல்நிலையத்தில் கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகள் 3 நிலுவையில் உள்ளநிலையில் மேலும் ஒரு வழக்கில் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, வழிபறி கொள்ளையில் துப்பாக்கி, கத்தி காட்டி பணம் பறிக்க முயற்சி செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






