என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கறம்பக்குடி பேரூராட்சி வார்டுகளில் ரூ.1.7 கோடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது
    • பச்ச நாயகம் குளக்கரை அருகே நடந்த பூமி பூஜையில் பேரூராட்சி தலைவர் முருகேசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பல்வேறு வார்டுகளில் பிளாக் சாலை அமைப்பது உள்ளிட்ட ரூ.1.7 கோடி திட்டபணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.கறம்பக்குடி பேரூராட்சி 9வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பச்சநாயகம் குளக்கரை அருகே நடைபெற்ற பூமி பூஜையில் கறம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சி திமுக தலைவர் உ.முருகேசன் கலந்து கொண்டார். விழாவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் 9வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் ராஜா மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களான வளர்மதி கருப்பையா, செண்பகவள்ளி, முருகேஸ்வரி ராஜசேகர், பேரூராட்சி அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பேரூராட்சி பொறியாளர் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • புதுக்கோட்டை கிளை யில் எல்.ஐ.சி. அலுவலகத்திற்கு முன்பாக விளக்கக் கூட்டம் நடை பெற்றது.
    • தமிழ் மாநில செயல் தலைவர் அன்பு நடராஜன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான விளக்க உரை ஆற்றினார்

    புதுக்கோட்டை

    அகில இந்திய எல்.ஐ.சி.முகவர்கள் சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பில்  அடுத்த மாதம் 13-ந் தேதி  சென்னை தென்மண்டல அலுவலகம் முன்பாக தமிழ்நாடு,கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்ட லிகாய் சங்கம் சார்பில் சென்னையில்  7 அம்ச கோரிக்கைகள் தொட ர்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இதுதொடர்பாக வலி யுறுத்தி புதுக்கோட்டை கிளை யில் எல்.ஐ.சி. அலுவலகத்திற்கு முன்பாக விளக்கக் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு கிளையின் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.செயலாளர், மதியழகன் வரவேற்றார் , பொருளாளர் பானுமதி, கௌரவ  தலைவர் தங்கவேல் ஆகி யோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினர்.

     தமிழ் மாநில செயல் தலைவர் அன்பு நடராஜன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான விளக்க உரை ஆற்றினார். நிறைவாக செயற்குழு உறுப்பினர் தெய்வா நன்றி கூறினார். கூட்டத்திற்கு செயற்குழு மற்றும் பொது உறுப்பி னர்கள் என சுமார் 47 முகவ ர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏழைகள் அதிகம் வசிக்கும்புதுக்கோட்டை மாவட்டதிற்கு சிறப்பு திட்டங்கள்
    • இந்திய மாதர் சம்மேளத்தின் கூட்டத்தில் வலியுறுத்தல்

    புதுக்கோட்டை

    இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின்  புதுக்கோட்டை மாவட்ட நிர்வா கக்குழு கூட்டம்  மாவட்ட துணைத் தலைவர்  ஜெயா தலைமையில்  வடக்கு ராஜ வீதி  சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  மாநில செயலாளர்  ஜி.மஞ்சுளா இன்றைய அரசியல் நிலை குறித் தும்  சங்கத்தின் செயல்பாடு கள் குறித்தும் பேசினார் .

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்  த.செங்கோடன் வாழ்த்துரை வழங்கினார். சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கள்  தனலட்சுமி, கோமதி, விமலா, பரமேஸ்வரி, பஞ்சவர்ணம் ஆகியோர் பங்கேற்றனர்.

    மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய ங்களில் பெண் மருத்து வர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண் டும், கேரளாவை போல்  ரேஷன் கடைகளில் தக்காளி வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும்,  புதுக்கோட்டை மாவட்டம் ஏழைகள் அதிகம் வசிக்கும் மாவட்டம் என  நிதி ஆயோக் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது, வறுமையிலும் கல்வியிலும் இந்ம மாவட்டம் பின் தங்கியுள்ளதால்  மத்திய அரசும் மாநில அரசும் அதற்கு ஏற்ப  சிறப்பு திட்டங்களை  அறிவித்து செயல்படுத்திட வேண்டும் என்ற தீர்மானங்கள்  ஏக மனதாக நிறைவேற்ற ப்பட்டன.

    • அறந்தாங்கி அருகே கட்டுமாவடியில் அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் 9 பேர் மீது வழக்குபதிவு
    • ஆண்டின் முதல் 6 மாதம் வரை பந்தயங்கள் நடத்திக்கொள்ளவும், அதன் பிறகு அனுமதி வழங்கக்கூடாது

    அறந்தாங்கி

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. அதில் காவல் துறையினர் மருத்துவம், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் போன்ற துறைகளை சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுத்தப் படுகின்றனர். அரசுக்கு செவு ஏற்படுத்துவதோடு அரசு அலுவலர்கள், பொது மக்கள் பணிகள் பாதிக்கப்ப டுகிறது.

    எனவே இதனை கட்டுப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகையிலிருந்து ஆண்டின் முதல் 6 மாதம் வரை பந்தயங்கள் நடத்திக்கொள்ளவும், அதன் பிறகு அனுமதி வழங்கக்கூடாது எனவும் அரசின் சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் கட்டுமாவடி ஸ்ரீ வள்ளிதேவயான சமேத கல்யாண சுப்பிரமணிய சாமி ஆலய ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடத்திக் கொள்வதாக அப்பகுதி கிராம இளைஞர்கள் சார்பில் மணமேல்குடி காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்த்துறையினரின் தடையை மீறி கமிட்டி சார்பில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணமேல்குடி காவல்த்துறையினர், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒன்று கூடி பந்தயம் நடத்திய கமிட்டியாளர்கள் முருகேசன்,ராஜாராம், கார்த்தி, ஹரிஹரசுதன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனர். 

    • தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்
    • கைபேசி எண் பதிவு மாற்றம் ஆகிய சேவைகளை பெற முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும், நாளை 12-ந்தேதி காலை 10மணி முதல் மதியம் 1மணி வரை குடும்ப அட்டைகள், நியாயவிலைக்கடை

    தொடர் பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த வட்டாட்சியாரர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    மேற்படி முகாமில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு மாற்றம் ஆகிய சேவைகளை பெற முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம்.

    பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 -இன் படி மேற்கொண்டும் பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் .மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

    • மருத்துவ விடுப்பில் இருந்த சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சவரியார் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனைவிக்கு ஆதரவாக வக்கீல் கலீல் ரகுமான் செயல்பட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது,

    இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே ஆரோக்கிய ராஜை கைது செய்ய வலியுறுத்தி இரு தினங்களுக்க முன்தினம் வக்கீல்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்வதாக கூறியதன் பேரில் போரட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் ஆரோக்கிய ராஜை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என மீண்டும் வக்கீல்கள் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு முன்பாக வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

    மேலும் அலட்சிய போக்கில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே திருக்கோகர்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து மருத்துவ விடுப்பில் இருந்த சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து ள்ளனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    வக்கீல்கள் போராட்டத்தால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விராலிமலை ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • வெயிலின் தாக்கம் உணராமல் படிகளில் கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டது

    விராலிமலை,

    விராலிமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோவில் வருடம் தோறும் ஆடி கார்த்திகை நாள் அன்று மலை மேல் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் நேற்று காலை மலைமேல் உள்ள முருகனுக்கு வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர். பக்தர்கள் வெயிலின் தாக்கத்தை உணராமல் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய ஏதுவாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் படிகளில் கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டது.மேலும் உள்ளுர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்கள் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சத்குரு சம்ஹாரமூர்த்தி கோவிலில் இருந்து பால்குடம், காவடி எடுத்து முருகன் கோவில் மலைமீது ஏறி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    • அறந்தாங்கியில் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • ௨௧ ஜோடி மாடுகளும், 16 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி வள்ளி தேவயானை சமேத கல்யாண சுப்பிரமணிய சாமி ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் 21ஜோடி மாடுகளும், 16 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளுக்கு ஒன்றரை லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.மேலும் மாடு மற்றும் குதிரைகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வக்கீல்கள் போராட்டத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட திருக்கோகர்ணம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயன்றுள்ளார்
    • தூக்க மாத்திரை சாப்பிட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை சவரியார் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருக்கும் அவரது மனைவிக்கு ம் குடும்ப தகராறு ஏற்பட்டது.இதில் மனைவிக்கு ஆதரவாக வக்கீல் கலீல் ரகுமான் செயல்பட்டார்.இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது,இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே ஆரோக்கியராஜை கைது செய்ய வலியுறுத்தி இரு தினங்களுக்க முன்தினம் வக்கீல்கள் திடிரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்வதாக கூறியதன்பேரில்போரட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில் ஆரோக்கியராஜை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என மீண்டும் வக்கீல்கள் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு முன்பாக வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .மேலும் அலட்சிய போக்கில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் .இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே திருக்கோகர்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து மருத்துவ விடுப்பில் இருந்த சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.வக்கீல்கள் போராட்டத்தால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பெண் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அகரப்பட்டி கிராம மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1. 55 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • 655 பயனாளிகள் பயனடைந்தனர்

    விராலிமலை,

    தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாதம் தோறும் ஒரு குக்கிராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி அகரப்பட்ட்டி கிராமத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பல்லுயிர் பரவல், பசுமையாக்குதல் மற்றும் காலநிலைமாற்றம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 655 பயனாளிகளுக்கு ரூ 1கோடியே 54லட்சத்தி 70ஆயிரத்து 104 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பின்னர் கலெக்டர் பேசியதாவது:-அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இம்மனுக்களின் மீது அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்கள் மூலமாக அரசின் திட்டங்களை அறிந்துகொள்வதுடன் அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதபிரியா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, தாசில்தார் சதீஸ், ஊராட்சிமன்ற தலைவர் தனபாக்கியம் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    • கறம்பக்குடி கண்டியன் தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது
    • புதிய மின்மாற்றியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை துவக்கி வைத்தார்

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த கண்டியன் தெருவில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியம் இப்பகுதியில் புதிய மின்மாற்றியை அமைத்தனர். இதற்கான நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளரும் பேரூராட்சி தலைவரும்மான உ முருகேசன் தலைமை தாங்கினார். புதிய மின்மாற்றியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை துவக்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை, கறம்பக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் மனமடை முத்துகிருஷ்ணன், கவுன்சிலர் முருகேஸ்வரி மற்றும் கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் பிரதீப், பேரூராட்சி கவுன்சிலர்கள் மின் வாரிய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றி அமைத்துக் கொடுத்த அரசுக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • புதுக்கோட்டையில் தேசிய சிறப்பு பயிற்சி மையம் அமைக்க எம்.பி. கோரிக்கை
    • நாடாளுமன்றத்தில் அப்துல்லா எம்.பி. கவன ஈர்ப்பு தீர்மானம் எழுப்பி உள்ளார்

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் திறமைகளை அங்கீகரித்து வளர்ப்பதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய சிறப்பு பயிற்சி மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.பி., அப்துல்லா மாநிலங்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.மாநிலங்களவையில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், "மத்திய அரசு, இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து வளர்ப்பதற்காக தேசிய சிறப்பு பயிற்சி மைய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு சர்வதேச மற்றும் தேசிய அளவில் சிறந்து விளங்கும் ஏராளமான விளையாட்டு வீரர்களை தொடர்ந்து உருவாக்கி வருவதாகச் சொல்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எத்தனையோ விளையாட்டு வீரர்களின் சாதனைகள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டபோதும் இதுவரை ஒரு தேசிய சிறப்பு பயிற்சி மையம் கூட தமிழ்நாட்டில் நிறுவப்படவில்லை என்பது வியப்புக்குரியது.மேலும், கடந்த இரண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கூட தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்து சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் மாநிலம் என்பதை வெளிப்படுத்தியது. அதேபோல கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒவ்வொரு பதிப்பிலும், பதக்கப் பட்டியலில் முதல் பத்து மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. இத்தகைய சாதனைகள் அனைத்தும் தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறனை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், தமிழ்நாட்டின் சிறப்பான திறமையை மேலும் மேம்படுத்துவதற்கும், ஆதரவளிப்பதற்கும் ஒரு தேசிய சிறப்பு பயிற்சி மையத்தின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. தமிழ்நாட்டின் நிலையான செயல்பாடுகள் மற்றும் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் சாதனைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, மாநிலத்தில் ஒரு தேசிய சிறப்பு பயிற்சி மையத்தை நிறுவ வேண்டியது அவசியம். இது எதிர்கால சாம்பியன்களை அடையாளம் கண்டு அவர்களை மேம்படுத்தவதற்கான வாய்ப்புகளை வழங்கும். எனவே தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையில் இத்தகைய தேசிய சிறப்பு பயிற்சி மையம் ஒன்றை நிறுவுவதன் மூலம், இந்தியாவின் ஒட்டுமொத்த விளையாட்டுத்துறையின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பை தமிழ்நாடு பெரும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் சாதிக்க முயலும் விளையாட்டு வீரர்களுக்கு பெருமளவில் பயனளிக்கவும், விளையாட்டுத்துறையின் வளர்ச்சியை மேம்படுத்தவும் நிச்சயம் இது உதவும். எனவே, தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய சிறப்பு பயிற்சி மையத்தை விரைவில் நிறுவுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    ×