என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவியின் குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கலந்த 2 மாணவர்கள்
    X

    மாணவியின் குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கலந்த 2 மாணவர்கள்

    • புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் மாணவியின் குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கலந்த 2 மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
    • மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அருகே கீழையூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.சம்பவத்தன்று 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி தனது குடிநீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தார். அப்போது அவருக்கு உடனடியாக வாந்தி ஏற்பட்டது. இதனை பார்த்தஅந்த பாட்டிலில் இருந்த குடிநீருடன் சிறுநீர் கலந்திருந்தது, ஆசிரியர்கள் விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் பற்றி அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் குடிநீரில் அசுத்தத்தை கலந்தது 2 மாணவர்கள் என்று தெரியவந்தது.இதையடுத்து இன்று அந்த மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவழைத்தனர். மேலும் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மஞ்சுளா மற்றும் அதிகாரிகள் சென்று விசாரித்தனர். சம்பந்தப்பட்ட 2 மாணவர்களும் குடிநீர் பாட்டிலில் அசுத்தம் கலந்ததை ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து 2 பேருக்கும் மாற்றுச்சான்றிதழை உடனடியாக அதிகாரிகள் வழங்கினர். மேலும் அந்த 2 மாணவர்களின் எதிர்கால படிப்பு பாதிக்காத வகையில் இருவரையும் வெவ்வேறு அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×