என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் முஸ்லிம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு அருகே உள்ள பள்ளிவாசலுக்கு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று காலையில் சம்சுதீன் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அதில் பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.26 ஆயிரத்தை, மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடையாளிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, மோப்பம் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து மோப்பநாய் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை ஓடி சென்று நின்றது. மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.26 ஆயிரத்தை கொள்ளை யடித்து விட்டு, தப்பி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சம்சுதீன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் வீட்டின் அருகே வைத்து என்ன நகைகள் உள்ளது என சரிபார்த்து உள்ளனர். அப்போது அவர்கள் தங்க நகைகளை (30 பவுன்) மட்டும் எடுத்துக்கொண்டு, கவரிங் நகைகளை அங்கேயே போட்டு விட்டு சென்றனர். மேலும் அவர்கள் சம்சுதீன் வீட்டில் இருந்து எடுத்து வந்த ஒரு செல்போனையும் கவரிங் நகைகளை விட்டு சென்ற இடத்தில் உடைத்து போட்டு விட்டு சென்று உள்ளனர். மேலும் கவரிங் நகைகள் கிடந்த இடத்தில் ஒரு கிரிக்கெட் பேட்டும் கிடந்தது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையா க உயர்த்தும் பணியை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் இந்த ஆண்டு லேப்-டாப் வழங்க முடியவில்லை. ஒரு மாத காலத்திற்குள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எல்.கே.ஜி.-யூ.கே.ஜி. வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது சமூக நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துடன் இணைந்து நடைபெறும். இதில் மாணவர்களுக்கு முதல் பாடம் தமிழாகத்தான் இருக்கும். இரண்டாவது பாடமாக ஆங்கிலம் இருக்கும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைந்து வரும் வேளையில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. அந்த பயிற்சியால் படித்து முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர்கள் குறித்து தமிழக முதல்வர் கூறியுள்ள கருத்து குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டார். #TNMinister #Sengottaiyan
கீரமங்கலம் அருகே உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஹரிகரசுதன் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டு, தனது நண்பர்களுடன் ஹரிகரசுதன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஹரிகரசுதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஹரிகரசுதனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கீரமங்கலம் அருகே உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஹரிகரசுதன் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டு, தனது நண்பர்களுடன் ஹரிகரசுதன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஹரிகரசுதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஹரிகரசுதனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா (வயது 50). இவரது மகன் அருண்குமார் (18). இந்தநிலையில் இவர்கள் இருவரும் காட்டுப்பட்டியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை நிமித்தமாக புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆலங்குடி அருகே கூழையன்விடுதி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே தஞ்சாவூர் நோக்கி சென்ற ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சம்பட்டு விடுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். பின்னர் படுகாயமடைந்த அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் ராமையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மணமேல்குடி தபால் நிலையத்தில் உதவியாளராக வேலை பார்த்தவர் ராமு (வயது 57). இவர் சம்பவத்தன்று தபால்களை பஸ்சில் அனுப்புவதற்காக பஸ் நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்த ஒரு பஸ்சில் தபால்பைகளை ஏற்றிக்கொண்டிருந்தார். இதை அறியாமல் அப்போது அந்த பஸ்சின் டிரைவர் பஸ்சை இயக்கினார். இதனால் ராமுவின் மீது அந்த பஸ் மோதியதில், அவரது கால் முறிந்தது. இதனால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமு பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் வழியாக சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது.
இதில் தொடர்புடைய நபர்கள் பலர் பிடிபட்ட போதும் அந்த பகுதிகளில் போதிய கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வில்லை. இந்த நிலையில் ஜெகதாப்பட்டினம் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு மர்ம பொருள் கடத்தப்படுவதாக திருப்புனவாசல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்று அதி காலை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற் கொண்டனர். அப்போது அங்குள்ள கடலோர பகுதியில் நாட்டுப்படகும், அதன் அருகில் சிலர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை நெருங்கியதும் அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
போலீசார் அந்த படகை சோதனை செய்தபோது அதில் 8 பண்டல்களில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். 200 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். இங்கிருந்து இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் பறிமுதல் செய்த போலீசார் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற நபர்கள் யார்? யாருக்கு கடத்தப்படுகிறது? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அவ்வப்போது 10 கிலோ முதல் 50 கிலோ வரை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Ganjasmuggling






