என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் இருந்து திருச்சி வந்தபோது, ஓடும் பஸ்சில் தம்பதியிடம் 14 பவுன் தங்க நகைகளை திருடிய ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆவூர்:
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 70). ஓய்வுபெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியரான இவரும், இவரது மனைவி தனபாக்கியம் (67) என்பவரும் நேற்று புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து, மீண்டும் சொந்த ஊருக்கு வருவதற்காக திருச்சி செல்லும் அரசு பஸ் ஏறி பயணம் செய்தனர். அப்போது தனபாக்கியம் தான் வைத்திருந்த தங்கச் சங்கிலி உள்ளிட்ட 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை ஒரு கைப்பையில் வைத்து, மற்றொரு பையில் அதனை போட்டு இருந்தார்.
இதற்கிடையில் பஸ்சில் கைப்பையில் இருந்து பணத்தைஎடுத்து டிக்கெட் வாங்கி, மீண்டும் அதனுள் வைத்து இருந்தார். பின்னர்அவர்கள் மாத்தூர் ரவுண்டானா வந்ததும் பஸ்சை விட்டு இறங்கி பையை பார்த்தபோது அதில் தங்க நகை, பணம் உள்ளிட்டவை வைத்திருந்த கைப்பையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ நோட்டமிட்டு ஓடும் பஸ்சில் அதனை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தனபாக்கியம் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனபாக்கியம் வைத்திருந்த நகை-பணம் வைத்திருந்த கைப்பையை திருடிய ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கறம்பக்குடி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் கறம்பக்குடி பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அம்புக்கோவில் முக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பிரபாகரன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை அருகே கல்லறை திருநாளில் பொருட்கள் வாங்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பலியாகினர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள பழைய கந்தர்வகோட்டை கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு பவுல்ராஜ், ராஜேஷ் என 2 மகன்களும், அனுசியா என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் நேற்று கல்லறை திருநாளில் உரிய பொருட்கள் வாங்குவதற்காக கந்தர்வகோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அங்கு அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு தஞ்சாவூர்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். ஜீவன் ஜோதி கார்மல் அருகில் வந்த போது, புதுக்கோட்டையிலிருந்து வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக பன்னீர்செல்வம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயடைந்தனர்.
இதில் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே கார் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த செல்வியை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பன்னீர்செல்வம் உடலை கைப்பற்றினர். மேலும் பன்னீர்செல்வம், செல்வி ஆகியோர் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பன்னீர் செல்வம் மகன் பவுல்ராஜீக்கு திருமணம் ஆகி ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில், கல்லறை திருநாளில் முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்ய பொருட்கள் வாங்க செல்லும் போது விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடகாடு பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கால 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
வடகாடு:
வடகாடு துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, இங்கிருந்து மின் வினியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர் மற்றும் அதனை சார்ந்துள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என வடகாடு உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை நாட்டுக்கோழிகளுக்கு வெளிமாவட்டங்களில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும், விலை சற்று உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை:
அசைவ உணவுப்பிரியர்களுக்கு நாட்டுக்கோழி இறைச்சி மீது அதிகம் ஆர்வம் உண்டு. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள், சேவல்கள் விற்பனைக்காக சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது.
புதுக்கோட்டையில் அரசு மகளிர் கல்லூரியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லக்கூடிய சாலையோரமாக உயிருடன் நாட்டுக்கோழிகள், சேவல்கள் தினமும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருப்பதை பொதுமக்கள் காணமுடியும். இந்த கோழிகளை பொதுமக்களும், வியாபாரிகளும் வாங்கிச்செல்வது உண்டு. ஓட்டல்களில் இறைச்சி உணவாக பயன்படுத்துகின்றனர். பொதுமக்களும் வீடுகள், நிகழ்ச்சிகளில் சமைத்து சாப்பிடுவது உண்டு. இதேபோல மொத்த வியாபாரிகள் சந்தைகளில் இருந்து உயிருடன் நாட்டுக்கோழி, சேவல்களை வாங்கி வந்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக மொத்தமாக அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில் புதுக்கோட்டை நாட்டுக்கோழிகள், சேவல்கள் வெளிமாவட்டங்களுக்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் விலையும் சற்று அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதம் மற்றும் நவராத்திரி விழா முடிவடைந்த நிலையில் இதன் இறைச்சி விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
புதுக்கோட்டை நாட்டுக்கோழிகள், சேவல்களுக்கு தனி மவுசு உண்டு. ருசி அதிகமாக இருக்கும் என்பதால் இதனை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். மேய்ச்சலுக்கு கிராமப்புற பகுதியில் தான் இதனை விடுவார்கள். புதுக்கோட்டை, அறந்தாங்கி, கறம்பக்குடி, ஆலங்குடி, வெட்டன்விடுதி உள்ளிட்ட ஊர்களில் நடைபெறும் வாரச்சந்தைகளின் போது விற்பனைக்காக கோழிகளை கொண்டுவருபவர்களிடம் மொத்தமாக வாங்கி வந்து அனுப்புகிறோம். சேவல்களை விட கோழிகளின் விலைதான் சற்று அதிகம். உயிருடன் ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு வெளிமாவட்டங்களுக்கு குறைந்தது ஆயிரம் நாட்டுக்கோழிகள், சேவல்களை அனுப்புகிறோம்.
புதுக்கோட்டை மாவட்ட நாட்டுக்கோழிகளுக்கு கடும் கிராக்கி உள்ளது. ஓட்டல்களில் இதன் இறைச்சி உணவை விற்கும் போது குறிப்பிட்டே விற்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களும் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். புதுக்கோட்டையில் மட்டுமல்ல விராலிமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாட்டுக்கோழிகள் விற்பனைக்காக பக்கத்து மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.

மாணவர்களிடையே ஆங்கில பேச்சுத்திறனை அதிகரிக்க வாட்ஸ்-அப்பில் அரசு பள்ளி சார்பில் போட்டி நடத்தி, வெற்றி பெறுபவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் நேரில் சென்று பரிசு வழங்கி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பொதுமக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கி உள்ளன. ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்களது கல்வி பாதிக்காமல் இருக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துதல், வாட்ஸ்-அப் குழுக்கள் ஏற்படுத்தி பாடம் கற்பித்தல் உள்ளிட்ட பணிகளை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
கல்வி தொலைக்காட்சியிலும் பாடங்கள் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஆங்கில பேச்சுத்திறனை அதிகரிக்க வாட்ஸ்-அப்பில் போட்டி நடத்தி பரிசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த பள்ளி, அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள ஆவணத்தான்கோட்டை மேற்கு அரசு நடுநிலைப்பள்ளி ஆகும். கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் உள்ளது.
கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்காக வாட்ஸ்-அப் குழுக்கள் ஏற்படுத்தில் அதில் பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களுக்கு அவர்களது அருகில் வசிக்கும் நபர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி பாடங்களை படிக்க வைக்கின்றனர். மொத்தம் உள்ள 166 மாணவர்களில் 100 மாணவர்கள் வாட்ஸ்-அப் குழுவில் உள்ளனர். பள்ளிகள் திறந்திருக்கும் காலத்தில் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றலை வளர்க்க குறிப்பிட்ட மணி நேரங்கள் வகுப்பு நடைபெறுவது வழக்கம். தற்போது மாணவர்களுக்கு பள்ளிக்கு வரமுடியாத நிலையில் அவர்களிடம் கற்றலில் எந்த குறைபாடும் இல்லாத அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய முறையை கையில் எடுத்தனர். வாட்ஸ்-அப் குழுவில் ஆங்கிலம் பேசும் முறை தொடர்பாக ஆசிரியர்கள் ஒலி வடிவில் ஆடியோவாகவும், எழுத்து மூலமாகவும் பதிவிடுகின்றனர். இதனை மாணவர்கள் கேட்டும், பார்த்தும் கற்று வருகின்றனர். மேலும் ஆங்கிலம் பேசும் புலமையை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர்களிடம் கற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் வாரந்தோறும் கடைசி நாளில் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வாரத்தில் நடத்தப்பட்ட ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பில் மாணவர்கள் கற்றதில் இருந்து போட்டி நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் எழுத்து வடிவிலும், ஆடியோவாகவும் பதிலை பதிவிட்டு வருகின்றனர். ஆசிரியர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக தாங்கள் கற்ற அறிவின் மூலம் வாட்ஸ்-அப்பில் பதிவிட்டு ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் நேரில் சென்று பரிசு, சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர். முதலில் 10 பேர் எனவும், அதன்பின் 5 பேர் எனவும், தற்போது 3 பேருக்கு எனவும் பரிசு வழங்கப்படுகிறது. இந்த போட்டி முறை மாணவர்களிடம் அதிகம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் பேசும் புலமையை பெற்று வருவது அவர்களது பெற்றோரிடமும், அப்பகுதி பொதுமக்களிடமும், கல்வியாளர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்களின் கற்றலிலும் தொய்வு இல்லாமல் படித்து வருவது அவர்களது ஆற்றலையும் மேம்படுத்துகிறது. அரசுப்பள்ளி ஆசிரியர்களின் புதிய முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே கொரோனா தடுப்பு நடைமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:
தீபாவளி பண்டிகை விழா காலம் தொடங்குவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் கட்டுப்படுத்திட பொதுமக்கள் முககவசம் அணியவும், அதிகமாக மக்கள் கூடுமிடங்களில் சமூக இடைவெளியினை முறையாகக் கடைபிடிக்கவும், கைகளை அடிக்கடி கழுவிடவும் அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து கடைகளிலும், கடை உரிமையாளர்கள் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடனும், சமூக இடைவெளிக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிப்பதுடன், வளாகத்தில் கிருமி நாசினி தெளித்தும், வருகை தரும் பொதுமக்களை முககவசம் அணிந்துகொண்டு வரவும் அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இதனை கடைப்பிடிக்காத மற்றும் மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், தொற்று நோய்கள் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அன்னவாசல் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி தலைமையிலான போலீசார் மேலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிரைவர் ஓலைமான்பட்டியை சேர்ந்த சேர்ந்த கருப்பையா (வயது 28), லாரி உரிமையாளர் இலுப்பூரை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து டிரைவர் கருப்பையாயை கைது செய்தனர்.
அன்னவாசல் அருகே சூதாடிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.1,800-ஐ பறிமுதல் செய்தனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் மேலப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அங்கு மேலப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38) உள்பட 4 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.1,800-ஐ பறிமுதல் செய்தனர்.
மேலப்பட்டி அருகே சூதாடிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் மேலப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு மேலப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38) உள்பட 4 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.1,800-ஐ பறிமுதல் செய்தனர்.
மணமேல்குடி அருகே மதுவிற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேல்குடி:
மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பத்தகாடு பகுதியில் மது விற்று கொண்டிருந்த குணசேகரன், திருவாப்பாடி பகுதியில் மதுவிற்ற பாரதி, மணமேல்குடி ராஐதோப்பு பகுதியில் மதுவிற்ற பாலகிருஷ்ணன், காரக்கோட்டை பாலம் பகுதியில் மதுவிற்ற முருகையா ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 67 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி கருப்பர் கோவில் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த குமார் (வயது 68) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கந்தர்வகோட்டை பகுதியில் மதுவிற்ற இந்திரா நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி ஜெயந்தி (43), கோமாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்த ரவி (45), கொல்லம் பட்டியை சேர்ந்த குமரேசன் (32) ஆகிய 3 பேரை கந்தர்வகோட்டை போலீசார் கைது செய்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிளும், மொபட்டும் மோதிக் கொண்டதில் என்ஜினீயர் பலியானார்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள புதுவளவு பகுதியை சேர்ந்தவர் அருண்ராஜ்(வயது 24). கட்டிட என்ஜினீயர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பூலாங்குறிச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தார். வேகுப்பட்டி ஏனமேடு அருகே சென்றபோது பூலாங்குறிச்சியை சேர்ந்த கோபால் என்பவர் ஓட்டி வந்த மொபட்டும், அருண்ராஜ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
இதில், அருண்ராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கோபாலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்தவர்கள் அருண்ராஜை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அனுமதிக்கப்பட்ட அருண்ராஜ் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.