என் மலர்
செய்திகள்

கைது
மணமேல்குடி அருகே மதுவிற்ற 7 பேர் கைது
மணமேல்குடி அருகே மதுவிற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேல்குடி:
மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பத்தகாடு பகுதியில் மது விற்று கொண்டிருந்த குணசேகரன், திருவாப்பாடி பகுதியில் மதுவிற்ற பாரதி, மணமேல்குடி ராஐதோப்பு பகுதியில் மதுவிற்ற பாலகிருஷ்ணன், காரக்கோட்டை பாலம் பகுதியில் மதுவிற்ற முருகையா ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 67 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி கருப்பர் கோவில் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த குமார் (வயது 68) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கந்தர்வகோட்டை பகுதியில் மதுவிற்ற இந்திரா நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி ஜெயந்தி (43), கோமாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்த ரவி (45), கொல்லம் பட்டியை சேர்ந்த குமரேசன் (32) ஆகிய 3 பேரை கந்தர்வகோட்டை போலீசார் கைது செய்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






