என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்த கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் உயிரிழப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.
இதுவரை 25,665 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில வாரங்களாக தினசரி உயிரிழப்பு 450-ஐ கடந்து பதிவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்டோர் அதிகம் பலியாகி வருவது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
இந்தநிலையில் புதுக்கோட்டையில் 4 மாத குழந்தை ஒன்று பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள மந்த குடிப்பட்டியை சேர்ந்த தம்பதியரின் 4 மாத குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை கடந்த மாதம் 27-ந்தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

குழந்தையை பரிசோதித்ததில் 29-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 4 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.
தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மிகக்குறைந்த வயதில் கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி உலக மிதிவண்டி (சைக்கிள்) தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக இருந்த சைக்கிள், இன்று பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாக மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் உடல் ஆரோக்கியம் மற்றும் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது.
இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி ஆழ்கடல் நீச்சல் வீரரான அரவிந்த் கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டினார். இதற்காக பழைய மாமல்லபுரம் காரப்பாக்கம் கடல் பகுதியில் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி அசத்தினார்.
தினமும் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிதிவண்டி தினத்தில் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இவர், ஆழ்கடலில் சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஆழ்கடலில் மீன்களுடன் பழகி நீச்சல் அடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விராலிமலை மற்றும் அன்னவாசல் ஆகிய பகுதிகளில் முன்களப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
மேலும் இலுப்பூர் மற்றும் விராலிமலை பகுதியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை குறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு கூடுதல் முகாம்களை அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் நான் எடுத்துக் கூறியபடி பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. அதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோன்று மண்டல அளவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்.
அரசு கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் எப்படி நோய் இருக்கிறதோ அதன்படி பொதுமக்கள் நடக்க வேண்டும். முக கவசம் ஆயுதம் என்றால் தடுப்பூசி என்பது பேராயுதம்.
பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது அறிகுறி தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை:
கொரோனா தொற்றின் 2-வது அலை தற்போது தாக்கி வருகிறது. அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு இரண்டு வாரம் தொடர் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் மது பிரியர்கள அல்லாடி வருகிறார்கள். இதனை பயன்படுத்தி விஷமிகள் சிலர் சாராய ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முயன்று வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சியது தொடர்பாக இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 20 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற் கொண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாராய ஊறல்கள் காட்டு பகுதியில் போடப்படுவதால் ஊறலில் விஷப்பூச்சிகள் விழுவதாலோ, ஊறலில் கலவையின் தன்மை மாறும் போதோ உயிரிழப்புகள் ஏற்பட பெரிதும் வாய்ப்புள்ளது. சாராய ஊறல் போடுவதற்காக தங்களது காலியிடத்தினையோ அல்லது தோட்டத்தினையோ பயன்படுத்த அனுமதிக்கும் சம்மந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்கள் மீதும் கடும் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவித்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதைத் தடுக்க தாமாக முன்வர வேண்டும் எனவும், குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் எனவும் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
எந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் காவல் துறையினருக்கு தெரிந்தே செயல்பட்டால் காவல் நிலையத்தில் உள்ள அனைவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் காவல் துறைக்கு தெரியாமல் நடைபெறும் பட்சத்தில் காவல் நிலையத்தில் இருப்பவர்கள் பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். தங்கள் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை இந்த மாதிரியான ஊரடங்கு காலத்தில் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றார்.
அதுபோல் டாஸ்மாக் மது பானங்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்வது குறித்து தகுந்த விவரங்கள் தரப்பட்டால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக போலீஸ் தரப்பில் பாலம் என்ற வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டம் முழுதிலிருந்து அனைத்து தரப்பிலும் மக்கள் இணைந்துள்ளனர். அவர்கள் கூறும் புகார் களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை முற்றிலும் அகற்ற தேவையான கருத்துகளையும் கேட்டறிந்து செயல்படுகிறோம் என்றார்.







