என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கீரனூர் அருகே மோட்டார் சைக்கிளுடன் விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    கீரனூரை அடுத்த கொட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 54). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்ததால் மோட்டார் சைக்கிளுடன் தவறி கீழே விழுந்தார். இதனால் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தனர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முககவசம் அணியாமலும், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 11 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த ஒருவர் என 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கை மீறி முககவசம் அணியாமலும், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 11 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த ஒருவர் என 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    அன்னவாசலில் சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ஜெயஸ்ரீ தலைமையிலான போலீசார் பொட்டக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய அன்னவாசல் மேட்டுதெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 47) தனபாண்டியன் (44) உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் பிரதமருக்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அனுப்பினர்.
    புதுக்கோட்டை:

    தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தட்டுப்பாடின்றி இலவசமாக ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். தேவையான சுகாதார பணியாளர்களை நியமிக்க வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ மாவட்டத் தலைவர் முகமதலி ஜின்னா தலைமை தாங்கினார். கோரிக்கைளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பேசினர்.

    பொன்னமராவதியில், இந்திய தொழிற்சங்கம்-சி.ஐ.டி.யூ. சார்பில் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தீன் தலைமையில் பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஆகியோரிடம் 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து பிரதமருக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

    கறம்பக்குடி ஒன்றிய சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்தும், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியில் ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, பிரதமர் மோடிக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அனுப்பினர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. நேற்று 3,300 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரால் அழிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. நேற்று 3,300 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரால் அழிக்கப்பட்டது. திருச்சி சரகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிக சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராய காய்ச்சும் கலாசாரம் இந்த ஊரடங்கு காலத்தில் அதிகரித்தது. இதனை தடுக்க மாவட்ட போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சி பகுதியில் தைலமரக்காட்டில் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று விரைந்து சென்றனர். அங்கு 7 பேரல்களில் சாராய ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தை கண்டறிந்தனர். இதில் மொத்தம் 1,500 லிட்டர் இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சாராயத்திற்கான பொருட்களை கைப்பற்றினர்.

    சாராய ஊறல் போட்டது யார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் பொருட்களை ஒப்படைத்து மர்மநபர்களை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா உத்தரவிட்டார். அதன்படி ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று பட்டத்தி காடு பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள கடலை கொல்லையில் 300 லிட்டர் சாராய ஊறல் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார் அதை கறம்பக்குடி வருவாய்த்துறையின் முன்னிலையில் அழித்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் தெற்கு சுண்டாங்கிவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவரது தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதாக கீரமங்கலம் போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்த அய்யப்பன் (39) என்பவர் சாராயம் விற்று கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அன்னவாசல் அருகே உள்ள கவிநாரிப்பட்டி கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் 1,500 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் 1,500 லிட்டர் சாராய ஊறலையும், விற்பனைக்காக வைத்திருந்த 40 லிட்டர் சாராயத்தையும் கீழே ஊற்றி அழித்தனர். இதுகுறித்து மாவட்ட மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த ஊரடங்கு காலத்தில் கடந்த ஒரு மாதத்தில் திருச்சி சரகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 25 ஆயிரம் லிட்டர் வரை சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறினர். டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில் மதுப்பிரியர்களுக்காக சாராயம் காய்ச்சும் தொழிலை சிலர் கையில் எடுக்க தொடங்கி உள்ளனர். இதனை போலீசார் மோப்பம் பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    தமிழக அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா சிகிச்சையில் இருந்து 311 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின எண்ணிக்கை 22 ஆயிரத்து 276 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 2 ஆயிரத்து 284 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 251 ஆக உயர்ந்தது.

    ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
    இலுப்பூர்,அன்னவாசல் பகுதிகளில் ஊரடங்கை மீறிய 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர், அன்னவாசல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த மற்றும் அரசின் உத்தரவை மீறிய 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 15 இருசக்கர வாகனங்களை யும் பறிமுதல் செய்தனர்.
    வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த 3 பேரை பிடித்து கைது செய்தனர்.
    ஆவுடையார்கோவில்:

    ஆவுடையார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான போலீசார் வளத்தக்காடு அருகே உள்ள வெள்ளாற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த 3 பேரை பிடித்து கைது செய்தனர்.
    குன்னத்தூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த 75 பேர்கள் கலந்து கொண்டு சளி, காய்ச்சல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
    ஆவூர்:

    விராலிமலை ஒன்றியம், குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சிமன்ற தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    இதில் குன்னத்தூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த 75 பேர்கள் கலந்து கொண்டு சளி, காய்ச்சல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். விராலிமலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விக்னேஷ், ராசநாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுபா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனைகளை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.
    ஊரடங்கை மீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர், அன்னவாசல் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கை மீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 16 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தொற்று எண்ணிக்கையோடு, இறப்பும் அதிகரித்து வருகிறது. அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலியாகி இருந்தனர்.

    இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 201 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 965 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 2 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி எண்ணிக்கை கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அரிமளம் ஒன்றியத்தில் அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 2 பேருக்கும், கே.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 3 பேருக்கும், ராயவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஐ.டி. காலனியைச் சேர்ந்த 72 வயது முதியவரும், பழனியப்பா நகரைச் சேர்ந்த 61 வயது மூதாட்டியும் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
    பொன்னமராவதி அருகே காரில் மதுபாட்டில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே வலையப்பட்டி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வலையப்பட்டி மலையாண்டி கோவில் பகுதியில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அதில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காரில் இருந்த 40 மதுபாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த சுரேஷ் (வயது 31) என்பவரை கைது செய்தனர்.
    ×