search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலி

    ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தொற்று எண்ணிக்கையோடு, இறப்பும் அதிகரித்து வருகிறது. அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலியாகி இருந்தனர்.

    இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 201 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 965 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 2 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி எண்ணிக்கை கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அரிமளம் ஒன்றியத்தில் அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 2 பேருக்கும், கே.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 3 பேருக்கும், ராயவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஐ.டி. காலனியைச் சேர்ந்த 72 வயது முதியவரும், பழனியப்பா நகரைச் சேர்ந்த 61 வயது மூதாட்டியும் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
    Next Story
    ×