என் மலர்
செய்திகள்

கொரோனா தடுப்பூசி
சிறையில் கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
புதுக்கோட்டை சிறை கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சிறை கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறையில் உள்ள கைதிகளில் பரோலில் விடுவதற்கு தகுதியானவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களை பரோலில் விடுவதற்கு வாய்ப்பில்லை. சிறைகளில் 57 சதவீதம் கைதிகளே உள்ளனர்.
கொரோனா காலத்தில் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கைதிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். தமிழக சிறைகளில் உள்ள கைதிகளில் இதுவரை 1,700 கைதிகள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் சிறைகளில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அனைத்து கைதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். சிறைகளில் மருத்துவ பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் உரிய முறையில் நிரப்பப்பட்டு கைதிகளுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கி பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார். முகாமில் முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story






